ஓஷோவை ஆமோதிக்கிறாரா கமல்?

தசாவதாரம் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். மனிதன் மாதிரி ஒரு முறை அசை போடலாம் மாடு மாதிரி பலமுறை அசை போட்டால் நன்றாக இருக்காது. அதனால் இத்துடன் தசாவதார பதிவுகளை நிறுத்தி கொள்ளப் போகிறேன்

தசாவதாரம் படத்தில் மண்ணின் மைந்தனாக வரும் வின்செண்ட் என்னும் புரட்சி பாத்திரம் ஆதிக்க சக்தி மணற் கொள்ளையனிடம் தர்க்கம் செய்யும் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. அப்போது இருவருக்கும் வாக்குவாதத்தின் போது மணற்கொள்ளையன் ஒத்த ஆளாக உலகை காப்பாற்ற நீ என்ன உலக நாயகனா என்று கேட்க அதற்கு அந்த புரட்சியாளன் ஆம் நான் உலக நாயகன் தான் ஏன் எல்லோருமே உலக நாயகன் தான். விந்துவில் உள்ள கோடிக்கணக்கான உயிரனுக்களில் ஒன்றில் இருந்த வந்த எல்லோருமே உலக நாயகன் தான் என்று பதில் அளிப்பார், இந்த புரட்சி பாத்திரத்துக்கு பன்றி அவதரத்தின் பெயரை வைத்தது அந்த பாத்திரத்தை களங்கப்படுத்துவதாக இருந்தாலும் இந்த உலக நாயகன் வசனத்தை சொல்ல வைத்ததன் மூலம் அந்த சறுக்கல் கொஞ்சம் சமன் செய்யப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்

நமக்கும் ஆண்மீகத்துக்கும் கொஞ்சம் தூரம் தான். அப்பழுக்கில்லாத ஆண்மீக குருக்கள் பற்றியே எனக்கு எதுவும் தெரியாது அப்படி இருக்க விவகாரமான ஓஷோவை எல்லாம் அவ்வளவாக தெரியாது. நெருங்கிய நண்பரான பிரபல வலைப்பதிவர் தன் கணினியில் ஓஷோவின் பேச்சுகளை வைத்து இருக்கிறார். இது மாதிரி ஒரு சில சந்தர்பங்களில் ஓஷோவை பற்றி அறிந்து கொள்ள நேர்ந்தது. அப்போது தான் இந்த முதல் விந்து மேட்டர் பற்றி ஓஷோ சொன்னதாக நியாபகம். தசாவதாரம் மூலம் பல தரப்பட்ட ரசனைகளை கொடுத்த கலைஞானி ஓஷோவையும் விட்டு வைக்கவில்லை. ஆண்மீக குருவாக கருதப்பட்ட அவரின் கருத்துகளை சொன்னதன் மூலம் நான் ஏற்கனவே சொன்ன இரண்டும் கெட்டான் விஷயமும் இங்கே பொருந்தி வருகிறது

3 comments:

கோவி.கண்ணன் said...

மருதநாயகம்,

தத்துவங்கள் எல்லாமே ஆன்மிகத்தில் அடக்கிப்பார்பார்கள் ஆத்திகவாதிகள்.

இந்திய சமயத்தில் மிகுந்த (வாழ்கைத்) தத்துவங்கள் அடங்கியவை சமணமும், பெளத்தமும் தான். இவ்விரு மதங்களும் நாத்திக மதங்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ?

ஆழ்ந்த உண்மையைச் சுட்டிச் சொல்பவை தத்துவங்கள் எனப்படுகின்றன. தத்துவங்களுக்கும் கடவுள் கொள்கைகளுக்கும் தொடர்பு இல்லை. ஆத்திகவாதிகளால் கடவுள் விற்பனைக்கு தத்துவங்களை ஈர்ப்பு விளம்பரமாக பயன் படுத்தப்படுகிறது. இது எந்தமததிற்கும் பொருந்தும்.

மருதநாயகம் said...

கோவி அண்ணா, நீங்கள் சொன்னால் சரியாக தான் இருக்கும் ஆனால் பதிவில் நான் சொல்லியபடி ஆண்மீகத்துக்கும் எனக்கும் தூரம்

Anonymous said...

உலக நாயகன் போட்டோ உங்க பதிவுகளில் போடுங்க பாஸூ!

ஒரு படம் கூட உங்களுக்கு கிடைக்கவில்லையா?