அபூர்வ சகோதரர்கள் படத்துக்காக முதலில் எடுத்த பாடல்

கடந்த வார இறுதி கலைஞர் தொலைக்காட்சியில் திரையிடப்பட்ட "அபூர்வ சகோதரர்கள்" வழக்கம் போல் என்னுள் நிறைய கடந்த கால நினைவுகளை எழுப்பிவிட்ட‌து. வெளி வந்த நேரம் எனக்கு 5 வயது. சென்னை கோடம்பாக்கம் பாட்டி வீட்டில் கேசட்டை கஷ்டப்பட்டு வாங்கி வந்து 3 நாட்கள் திரும்பத்தராமல் சுமார் 15 முறை பார்த்திருப்பேன். (புது படங்களை அப்போது அரை நாள் தான் வாடகைக்கு தருவார்கள்). அந்த படத்தில் எல்லா காட்சிகளையும் அட்டகாசமாக எடுத்திருப்பார்கள். பேசத்துவங்கினால் பக்கம் பக்கமாக பேசலாம் அபூர்வ சகோதரர்கள் பற்றி. இந்த ப‌டம் முதலில் துவங்கிய சில நாட்களிலேயே டிரிக் ஷாட்கள் எடுக்க வேறு சில உக்திகள் யோசிக்க ஆரம்பித்ததால் படத்தை நடுவில் நிறுத்திய விடயம் தெரிந்ததே. அப்போது எடுத்த ஒரு பாடல் காட்சி உங்களுக்காக. உங்களில் பலர் இதைப் பார்த்திருக்கக்கூடும். இது தான் பின்பு "ராஜா கைய வைச்சா" என்ற பாடல் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். (ஆனால் அவர் புலி வேடத்தில் ஆடியதால் இந்த பாடல் இலங்கையில் திரையிடப்படவில்லை என்ற தகவலும் கேள்விப்பட்டேன்)




கொசுறாக எல்லோருக்கும் பிடித்தமான காட்சி.



நிறைய நுணுக்கமான விஷயங்கள் செய்திருக்கிறார் கமல்ஹாசன் இந்த படத்திற்காக. மற்ற படங்களை விட இதில் அவர் கால் ஒல்லியாக இருக்கும். மடித்துக்கட்ட வசதியாக எடை குறைந்திருக்கிறார். குள்ள கமல் வேடத்தில் கால்சட்டையை மேலே உயர்த்தி பாதி வயிற்றில் போட்டிருப்பார். பற்களையும் சின்னதாக காட்டி இருப்பார்கள் அந்த வேடத்தில். அலசி எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் நேரமின்மையால் முடிக்கிறேன். சகாக்கள் கொஞ்சம் எழுதலாமே இந்த படத்தை பற்றி.

குரு படம் வெளியான நேரம் குதிரை ஒன்று வேண்டும் என அடம்பிடித்தவன் இந்த படம் வந்த காலத்தில் காக்கட்டூ வேண்டும் என அழுதது நினைவிருக்கிறது. இப்போது வாங்கும் வசதி இருந்தும் நேரமில்லாத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஆசைகள் பட்டியலில் அது இருக்கின்றது. (சென்னை மக்கள்ஸ் "கடல்குதிரைகள்" கிடைக்குமிடம் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்....)

15 comments:

கோபிநாத் said...

பாடலுக்கு நன்றி ஸ்ரீ ;)

\\அலசி எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் நேரமின்மையால் முடிக்கிறேன்\\

இப்படி எல்லாம் சொல்லக்கூடாது...தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருக்கு..கண்டிபாக எழுது மாப்பி

Anonymous said...

//கோபிநாத் said...
பாடலுக்கு நன்றி ஸ்ரீ

இப்படி எல்லாம் சொல்லக்கூடாது...தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருக்கு..கண்டிபாக எழுது மாப்பி//

நிச்சயம் நேரம் கிடைக்கும் போது இந்த படத்தையும் வேறு சில படங்களையும் ஆழமாக பார்க்கலாம்.

வாழ்த்துக்கு நன்றி மாப்பி.

வெட்டிப்பயல் said...

ஒரு சந்தேகம். அபூர்வ சகோதரர்கள்ல அம்மா மனோரமா தானே? காந்திமதி எங்க வந்தாங்க?

Sanjai Gandhi said...

மேட்டர் புச்சா தான் கீது ஸ்ரீ..

நன்றி.. தலைவரை பத்தி இன்னும் நெறய எழுதுங்க.. :)

கானா பிரபா said...

தல

நீங்களும் வலை(பதிவு)க்குள் விழுந்துட்டீங்களா? கலக்குங்க, வராத பாட்டு கலக்கலோ கலக்கல் அதையே வச்சிருக்கால் போல

Anonymous said...

பாடலுக்கு நன்றி

kuppan_yahoo said...

பதிவிற்கு நன்றி,

நானும் இந்த திரைபடத்தை 17 முறை பார்த்த ஞாபகம். திரை அரங்கம் சென்று.

முதலில் படம் எடுத்து பாதி காட்சிகளை நீகினர்கள் கமலும், sp முத்துராமனும். அதில் உள்ள காட்சி தான் காந்திமதி வருவது.

இந்த படத்தில் மயில்சாமி, பொன்னுரங்கம் ஆகியோர் மிக இளமையாக இருப்பார்கள்.

இதேபோல மைகேல் மதன காம ராஜன் படத்திலும் ஒரு பாடல் காட்சி படத்தில் இருக்காது.


குப்பன்_யாஹூ

தமிழன்-கறுப்பி... said...

அட...!

தமிழன் said...

சகலகலா வல்லவன்!
அபூர்வ சகோதரர்கள் விடுபட்ட இந்த பாடல் என் பழைய நினைவுகளை தூண்டி விட்டது, ஆம் எனக்கு அப்போது பதினொன்று (அல்லது பதிமூன்று) வயது இருக்கும் என்று நினைக்கிறேன், தீவிர கமல் ரசிகனான நான் அந்த படத்தின் நூறாவது நாள் பட காட்சியில் தான் குள்ளமாக எப்படி நடித்தேன் என்று காட்டபோவதாக அறிந்து என் தந்தையிடம் சண்டை பிடித்து அவர் நுழைவு சீட்டு கிடைக்காமல், தன் நண்பர்களிடம் சொல்லி (என் தந்தை தபால் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்) அண்ணா சாலை தபால் நிலையத்தில் உள்ள தபால்காரரை பிடித்து சென்னை தேவி திரைஅரங்கில் நுழைவுச் சீட்டு பெற்று தந்தார். அந்த நூறாவது நாள் காட்சியில் இந்த பாடலையும் அவர் ஒரு நகைச்சுவை கட்சி மற்றும் வெட்டப்பட்ட படச்சுருள் அனைத்தையும் காண்பித்தார், குள்ளமாக எப்படி நடித்தார் என்பதை தவிர்த்து, பின்னர் அந்த ரகசியம் புனேவில் உள்ள திரைப்பட நிறுவனத்தில் பாதுகாக்க படுவதாக கேள்விபட்டேன். உண்மைய அல்லது பொய்யா என்று தெரியாது?

தமிழன் said...

வெட்டிபயல் என்னுடைய மறுமொழியில் கூறியுள்ள வெட்டி எடுக்கப்பட்ட படச்சுருள் காந்திமதி மற்றும் சின்னி ஜெயந்த் அவர்கள் நடித்த காட்சிகள் தான், இதை கூறிபிட்டவர் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ்

சுரேகா.. said...

அய்யா...இந்தப்பாடல் இந்திரன் சந்திரனில்...

Anonymous said...

@ வெட்டிப்பயல்

ஆமாங்க. இது முதற்கட்ட படப்பிடிப்பின் போது எடுத்த பாடல் அதன் பின்னர் நடிகர்களின் பாத்திரம் மாற்றப்பட்டது போல. படத்திற்கு அதே செட் இருப்பதில் இருந்து தான் உறுதி செய்து கொண்டேன்.

Anonymous said...

Pinnotam itta Ellorukkum en nadrigal

Anonymous said...

@ thileepan,

Ungal anubavathayum pagirndhukondathukku nandringa. Appa neenga orutharaavadhu irukeenga idhu "Abborva sago" paatu dhaannu niroobikka :)

Anonymous said...

@ sureka

Illanga sureka idhu "Indran chandran" illai. Edharkum meendum alasi thedi paarkiren neengal sonna vishayathai