ரஜினி ரசிகர்களை கவரும் கமலின் கனவு பலிக்குமா

ஆஹா இவன் திருந்தவே மாட்டானா என்று நினைக்கிறீர்களா. ஸ்டார் போஸ்டில் தான் கும்மி அடிக்க கூடாது நமக்கு வேறு வழியா இல்லை. அதான் அங்கே பம்மி இங்கே கும்மி. தசாவதாரம் படத்தில் ஜப்பானிய பாத்திரத்தை கமல் வேண்டுமென்றே திணித்து இருக்கிறார். அந்த பாத்திரமே தேவை இல்லாதது. ரஜினிக்கு ஜப்பானில் உள்ள ரசிகர்கள் தானாக சேர்ந்த கூட்டம் அந்த கூட்டத்தை கலைக்க கமல் இப்படி எல்லாம் மெனக்கெட்டு ஜப்பான் மொழி பேசி குங்ஃபூ பைட்டு எல்லாம் போட வேண்டி இருக்கிறது. இது யார் சொல்லியது என்று நான் சொல்ல தேவை இல்லை

தசாவதாரம் படத்தை ஒரு ப்ளாட் மாதிரி கையாண்டு இருக்கிறார் கமல். அந்த பிளாட்டில் உள்ள முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் போது ஒவ்வொரு பாத்திரமாக உள்ளே நுழைகிறார்கள். ஆனால் ஜப்பானிய பாத்திரம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஜப்பானிய பாத்திரம் கிளைமாக்ஸ் காட்சியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் சுனாமி வரும் போது மூன்று கமல்கள் மோதிக் கொள்வார்கள். சுனாமி தங்களை நோக்கி வரும் போது பிளட்சர் கமலும் விஞ்ஞானி கமலும் எதுவுமே புரியாமல் நிற்க ஜப்பானிய கமலோ சுனாமி இஸ் பேக் என்று சொல்லுவார். இந்த இடத்தில் தான் கமலுக்குள் இருக்கும் பெர்ஃப்க்ஷனிஸ்ட் வெளிப்படுகிறார்

சுனாமி பற்றிய அந்த வசனத்தை கமல் மற்ற ஒரு கமலை வைத்து சொல்லி இருக்கலாம் அல்லது ஜப்பானிய கமலே ஓ மை காட் திஸ் இஸ் சுனாமி என்று சொல்ல வைத்து இருக்கலாம். ஆனால் அவரோ சுனாமி இஸ் பேக் என்று சொல்கிறார் ஏனென்றால் ஜப்பானியகளுக்கு தான் சுனாமி நமக்கு எல்லாம் முன்பே அறிமுகம். பல ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டுள்ளதாம். சுனாமி என்ற பெயரே கூட ஜப்பானிய பெயர் தானாம். இப்போது சொல்லுங்கள் அந்த பாத்திரம் திணிக்கப்பட்டதா என்று

தசாவதாரம் பதிவுகள் அவ்வளவு தானா என்று கேட்கிறீர்களா. நாளை வேறு ஒரு மேட்டருடன் சந்திப்போம்

17 comments:

கிரி said...

//ஆஹா இவன் திருந்தவே மாட்டானா என்று நினைக்கிறீர்களா. ஸ்டார் போஸ்டில் தான் கும்மி அடிக்க கூடாது நமக்கு வேறு வழியா இல்லை. அதான் அங்கே பம்மி இங்கே கும்மி//

அது சரி ..ஒரு முடிவோட தான் இருக்கீங்க :-)))


//தசாவதாரம் பதிவுகள் அவ்வளவு தானா என்று கேட்கிறீர்களா. நாளை வேறு ஒரு மேட்டருடன் சந்திப்போம் //

வேறொரு மேட்டராராராராராராராராரா

முடியல அவ்வ்வ்வ்

மோகன் கந்தசாமி said...

டான்சிங் மகராஜா ஒரு காமெடியனாக ஜப்பானில் பார்க்கப்பட்டவர். நம்ம விஜயகாந்த் போல. மன்றம் அமைத்து அவரை ரசித்தனர். ஆனால் சில வெகுளிகள் தமிழ் ரசிகர்கள் போல் ஆர்ப்பாட்டம் செய்த போது மன்றத்தில் இருந்து கழட்டி விடப்பட்டனர். தனியாக அவர்கள் ஒரு மன்றத்தை அமைத்து இன்று ஆங்காங்கே அலும்பு செய்து திரிகின்றனர். இவர்களைத்தான் இந்தியப் பத்திரிக்கைகள் பேட்டி காண்பதும், கவரேஜ் செய்வதும். இவர்கள் சிறுபான்மை. ஜப்பானியர் அனைவரும் ரஜினியை அந்த நாட்டு அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுவது போல் இங்கு பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுவது நல்ல காமெடியாக இருந்துவருகிறது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், கமலகாசன் ரஜினிக்கு போட்டியாக ஜப்பானியர்களை கவர தன் படங்களில் சில உத்திகளை கையாள்கிறார் என்பதுதான். உலகசினிமாவின் சலனங்களை கூர்ந்து கவனித்து வரும் கமலகாசன், அரசியலில் சற்றே தேர்ச்சி பெற்றுள்ள மன் மோகன் சிங் ஆகியோர் ஜப்பானில் ரஜினிக்கு என்ன மரியாதை என்பதை நன்கு அறிவர். கமலகாசனுக்கு இப்படிப்பட்ட புகழ் தானாக வந்தாலும் தேவைப்படாது.

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கஞ்சா அடித்துவிட்டு விடும் புகையை முகர்ந்து கொண்டுவந்து வலைப்பூக்களில் இருமும் சிலர், தாம் போடும் அறிவுஜீவி வேடம் பருத்திவீரன் படத்தில் "பொணந்தின்னி" -யின் "பெரியமனுஷன்" அலும்பை விட காமெடியானது என்று அறிவதில்லை. எனது கல்லூரி கால தோழிகளில் சிலர் இம்மாதிரியானவர்கள். அவர்களை கிண்டல் செய்து பேசினாலும் விஷயம் புரியாமல் நம்மோடு சேர்ந்து சிரித்துக்கொண்டு நிற்பார்கள். "யூ ஆர் எ ஜீனியஸ்" என்றால், பெருமிதத்துடன் "தேங்க்ஸ்" என்பார்கள். அவ்வகையினர் அறிவுஜீவி வேடம் போட்டால் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் தான் வலைப்பூக்களில் நாம் பார்த்துவரும் கமலகாசன் மீதான காண்டு விமர்சனங்கள்.

மருதநாயகம் said...

முதல் கமெண்ட் போட்ட கிரிக்கு நன்றிகள்

மருதநாயகம் said...

மோகன் கந்தசாமி! இவ்வளவு விஷ்யம் இருக்கா தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி

கிரி said...

மோகன் கந்தசாமி said... /

//டான்சிங் மகராஜா ஒரு காமெடியனாக ஜப்பானில் பார்க்கப்பட்டவர். நம்ம விஜயகாந்த் போல//

இது நெம்ப ஓவருங்கோ

/தனியாக அவர்கள் ஒரு மன்றத்தை அமைத்து இன்று ஆங்காங்கே அலும்பு செய்து திரிகின்றனர். இவர்களைத்தான் இந்தியப் பத்திரிக்கைகள் பேட்டி காண்பதும், கவரேஜ் செய்வதும். இவர்கள் சிறுபான்மை//

உண்மைதான் மோகன் கந்தசாமி ஆனால் அவர்கள் இருப்பது இந்தியாவில் இல்லையே.

வேறு ஒரு நாட்டில் இந்த சிறும்பான்மை கூட பெரும்பான்மையாக தானே நம் நாட்டினருக்கு ..அவர்கள் நாட்டிற்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தருக்கு இவ்வாறு இருப்பது பெரிய விஷயம் தானே ..

நம்ம ஊரில் ஜாக்கி சானுக்கு இரண்டு மன்றம் இருந்தால் அவர்களும் இவர்களை தானே பேட்டி எடுப்பார்கள்

//ஜப்பானியர் அனைவரும் ரஜினியை அந்த நாட்டு அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுவது போல் இங்கு பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுவது நல்ல காமெடியாக இருந்துவருகிறது//

இதுவேனா ரொம்ப ஓவர் தான்...இவங்க ரவுசு தாங்கல

Anonymous said...

In that legendary paerformance, I'm very much admired with that "Puratchi kalaignar"(Vincent Poovaragan) role.
Captain's mannerism was excellent

இவன் said...

இத்தால் வலையுலக மக்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் நட்சத்திர வாரம் முழுவது மருதுவின் தசாவதாரப்பதிவு தொடரும்....

மோகன் கந்தசாமி said...

நண்பர் கிரி,

//////டான்சிங் மகராஜா ஒரு காமெடியனாக ஜப்பானில் பார்க்கப்பட்டவர். நம்ம விஜயகாந்த் போல//
இது நெம்ப ஓவருங்கோ ////

இது ஓவர் இல்லை. முற்றிலும் உண்மை. உண்மை தெரிந்த நடுநிலையாளர்கள் கூட மௌனமாக தலையிலடித்துக் கொள்கிறார்கள்.

///உண்மைதான் மோகன் கந்தசாமி ஆனால் அவர்கள் இருப்பது இந்தியாவில் இல்லையே.///

பிராந்திய பிரபலங்களுக்கு இந்த மாதிரி ரசிகர்கள் உலகெங்கும் சிறு அளவில் இருப்பார்கள். மெக்சிகோ -வில் கந்தசாமி திரைப்படம் படப்பிடிப்பு செய்தபோது விக்ரம் -க்கு நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் உருவானார்கள். இத்தனைக்கு படம் இன்னும் ரிலீஸ் கூட ஆகவில்லை. விக்ரமின் பழைய படங்களை திரையிடச் சொல்லி படக்குழுவினரை வற்புறுத்தி பார்த்தனர். இதில் அந்நாட்டு அமைச்சர்களும் அடக்கம். ஆனால் விக்ரமோ இது பற்றி பேசவே இல்லை. ஏன்? இவ்வகை ரசிகர்களைப் பற்றி அவருக்குத் தெரியும். அவ்வளவு ஏன், நம்மூரில், ரஜினி பித்து பிடித்து திரிபவர்களை விட சுவாரசியத்துக்கு ரசிப்பவர்கள் தான் அதிகம். ஆனால் கமலகாசனை சுவாரசியத்திற்காக ரசிப்பவர்களின் எண்ணிக்கையைவிட குறைவு. தனது பித்து ரசிகர்களை "அபூர்வ சகோதரர்கள்" வெற்றிவிழாவிலேயே களைந்து போகச்சொல்லிவிட்டார் கமல். உள்ளூர் பித்தர்கள் வேண்டாம் என்று சொன்ன கமல் ஜப்பானில் போய் பித்தர்கள் வேட்டை செய்கிறார் என்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது. பக்கத்து அறை சினிமா பயித்தியங்கள் உலக சினிமா காக்டெயிலை குடித்துவிட்டு எடுத்த வாந்தி நாற்றத்தின் பாதிப்பில் பதிவெழுதினால் கமலகாசனைப்பற்றி காண்டு சிந்தனைகள் தான் அதில் இருக்கும்.

மாறாக கமலுக்கு உலகெங்கும் உள்ள ரசிகர்கள் வேறுமாதிரியானவர்கள். ஒருமுறை உலக சினிமா சுற்றுலா செய்துவந்த, திரைப்பட மேதைகள் நிறைந்த ஒரு குழு சென்னைக்கும் வந்தது. அக்குழுவினற்கும், தென்னிந்திய திரை மேதைகளுக்கும் மெட்ராஸ் பிசினஸ் ஸ்கூலில் நடந்த சந்திப்பில் கமலகாசனின் காலில் ஒரு கொரிய திரைப்பட இயக்குனர் விழுந்தார். "இந்திய மரபுப்படி ஒருவருக்கு மரியாதை செய்ய அவரது காலில் விழுவது முறை" என்று விளக்கம் கொடுத்துள்ளார். உடனே கமலகாசன், "காலில் விழுவது கேவலம்" என்பது தமிழக கலாச்சாரம் என்று கூறி கண்டித்தார். எனினும் வயதில் மூத்த அந்த ரசிகரை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தார். அவர் பார்த்த கமலகாசன் திரைப்படங்கள் என்னென்ன என வினவியபோது அவர் சொன்ன படங்கள் மகாநதி, ஹே ராம், அன்பே சிவம் முதலானவை. அவருக்கு கமலகாசனின் குப்பை படங்கள் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

////நம்ம ஊரில் ஜாக்கி சானுக்கு இரண்டு மன்றம் இருந்தால் அவர்களும் இவர்களை தானே பேட்டி எடுப்பார்கள் ///
உண்மைதான். ஆனால் அவர்கள் பேட்டி எடுத்தபின் அதை வெளியிடும்போது அந்த எண்ணிக்கையை "இரண்டு" என்றுதான் சொல்வார்கள். "இருநூறு" என சொல்ல மாட்டார்கள். ரஜினியை காமெடியனாக ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை மேற்கோள் காட்டி பித்து ரசிகர்களின் பேட்டி -யை வெளியிட்டு, மொத்த ரசிகர்களும் இப்படித்தான் என்று கதைவிடுவது குசும்புத்தனம். அதை அமைதியாக அனுமதிப்பது ஏன்? வட இந்திய "மேரி பாரத் மாகான்" வகை பத்திரிக்கைகள் அவ்வாறு செய்யலாம். புனிதப்பசுக்களின் சாணியை விற்று பிழைக்கும் உள்ளூர் பத்திரிகைகளும் செய்யலாம். ஆனால் சுவாரசியத்திற்காக மட்டும் ரஜினியை ரசிக்கும் ரசிகர்கள் செய்யலாமா? இந்த மாதிரி ஜால்ராக்களை கமல் ரசிகர்களும் விரும்பக்கூடும், ஆனால் கமல் விரும்ப மாட்டார்.

கோபிநாத் said...

\\தசாவதாரம் பதிவுகள் அவ்வளவு தானா என்று கேட்கிறீர்களா. நாளை வேறு ஒரு மேட்டருடன் சந்திப்போம்\\

கலக்குங்க தல ;))

கிரி said...

//உள்ளூர் பித்தர்கள் வேண்டாம் என்று சொன்ன கமல் ஜப்பானில் போய் பித்தர்கள் வேட்டை செய்கிறார் என்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது//

இது நான் சொல்லைங்க..:-)) நான் ஓரளவுக்கு நியாயம் என்று படுவதை மட்டுமே பேசுவேன்..விதண்டாவாதமாக பேசுவதில்லை.

//பக்கத்து அறை சினிமா பயித்தியங்கள் உலக சினிமா காக்டெயிலை குடித்துவிட்டு எடுத்த வாந்தி நாற்றத்தின் பாதிப்பில் பதிவெழுதினால் கமலகாசனைப்பற்றி காண்டு சிந்தனைகள் தான் அதில் இருக்கும்//

உங்களை ரொம்ப தான் டென்ஷன் பண்ணிட்டாங்க போல ஹி ஹி ஹி

//எனினும் வயதில் மூத்த அந்த ரசிகரை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தார்//

பல மேட்டர் தெரிந்து வைத்து இருக்கீங்க

//ஆனால் அவர்கள் பேட்டி எடுத்தபின் அதை வெளியிடும்போது அந்த எண்ணிக்கையை "இரண்டு" என்றுதான் சொல்வார்கள். "இருநூறு" என சொல்ல மாட்டார்கள்.//

ரிப்பீட்டேய்ய்ய்ய் ஹா ஹா ஹா ஹா

ஏங்க அதுக்கு ரஜினி என்னங்க பண்ணுவாரு :-))

//புனிதப்பசுக்களின் சாணியை விற்று பிழைக்கும் உள்ளூர் பத்திரிகைகளும் செய்யலாம்//

என்னங்க பல code word ல சொல்றீங்க..:-))

மோகன் கந்தசாமி said...

நண்பர் கிரி,
/////இது நான் சொல்லைங்க..:-)) நான் ஓரளவுக்கு நியாயம் என்று படுவதை மட்டுமே பேசுவேன்..விதண்டாவாதமாக பேசுவதில்லை./////
நான் உங்களைச் சொல்லவில்லை. உங்கள் பதிவுகள் மூலம் உங்களை அறிவேன் நான்.

///உங்களை ரொம்ப தான் டென்ஷன் பண்ணிட்டாங்க போல////
எனக்கு டென்ஷன் இல்லை கிரி. அடுத்தவன் உட்ட உதாரை தன் உதார் போல் விடும் அந்த பதிவருடன் விவாதிக்க நேர்ந்த வருத்தம் மட்டுமே. எதைக்கேட்டாலும் சம்பந்தமே இல்லாத, நமக்கு ஏற்கனவே தெரிந்த செய்திகளை எங்கிருந்தாவது காப்பி பேஸ்ட் செய்து கண்ண கட்ட வைக்கிறார். இதில் நான் எழுதும் ஆங்கிலத்தை தவறாக புரிந்து கொண்டு பெண்களை கேவலப்படுத்துபவன் என்று என்னை சித்தரிக்கிறார். அந்த குறிப்பிட்ட பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டத்தை கீழே தருகிறேன்.

//////// ppl like Mammutty////
Mammutty? Are you sure? Ha ha ha ha ha ha ha!!!
(To me) Common boy! You got to get cool down…
Let me stop scribbling here, Thanks for the platform.
And, don’t forget to let me know when you are awarded Pulitzer Prize for Criticism.///////

இதில் Common boy! என்று நான் குறிப்பிட்டது என்னைத்தான். அடைப்புக்குறிக்குள் To me என்று தெளிவாக குறிப்பிட்டு விட்டே எழுதினேன். இதில் நான் எங்கே பெண்களை மட்டமாக பேசினேன். அவரது பதிலில் "நீ என்னை ஆண் என்று சொல்கிறாய், அதனாலும் பரவாயில்லை, ஏனென்றால் நீ அறிவாக விவாதிக்கும் பெண்களை பார்த்ததே இல்லை" என்கிறார். "இதென்னடா வம்பாகப் போய்விட்டதே!, கமலகாசனை பற்றி விவாதிக்க வந்தால் ஆணாதிக்கவாதி முத்திரை குத்தப்படுகிறதே" என்று என்னை நானே நொந்து கொண்டு, அந்த பின்னூட்டத்தை அழித்து விட்டு வெளியேறினேன்.

///ஏங்க அதுக்கு ரஜினி என்னங்க பண்ணுவாரு :-))///
நான் ரஜினியை குறை சொல்லவில்லை. கமலை குறை சொல்ல ரஜினியின் ஜப்பான் புகழை குறிப்பிடுவது ஏன் என்று கேட்டேன்.

////என்னங்க பல code word ல சொல்றீங்க..:-))///
ஹா ஹா ஹா

எனது தன்னிலை விளக்கப் பின்னூட்டத்தை, இந்த பதிவிற்கு சம்மந்தம் இல்லை என்றாலும், வெளியிட்ட மருதநாயகத்திற்கு நன்றி.
நன்றி கிரி.

லக்கிலுக் said...

//எனது தன்னிலை விளக்கப் பின்னூட்டத்தை, இந்த பதிவிற்கு சம்மந்தம் இல்லை என்றாலும், வெளியிட்ட மருதநாயகத்திற்கு நன்றி.//

அய்யா பின்னூட்டங்களை வெளியிட்டிக்கிட்டிருக்கறது லக்கிலுக்கு. நன்றி மட்டும் மருதநாயகத்துக்கா? என்ன கொடுமை சார் இது? :-)

மோகன் கந்தசாமி said...

Hola Luckky,
perdón por, lo siento por

கிரி said...

//நான் உங்களைச் சொல்லவில்லை. உங்கள் பதிவுகள் மூலம் உங்களை அறிவேன் நான்.//

அப்பாடா ஏன் வயித்தால பீரை வார்த்தீங்க :-)

//எதைக்கேட்டாலும் சம்பந்தமே இல்லாத, நமக்கு ஏற்கனவே தெரிந்த செய்திகளை எங்கிருந்தாவது காப்பி பேஸ்ட் செய்து கண்ண கட்ட வைக்கிறார்//

ஹா ஹா ஹா ஹா ஹா


//லக்கிலுக் said...
அய்யா பின்னூட்டங்களை வெளியிட்டிக்கிட்டிருக்கறது லக்கிலுக்கு. நன்றி மட்டும் மருதநாயகத்துக்கா? என்ன கொடுமை சார் இது? :-)//

ஒ! அப்ப மருதநாயகம் தான் லக்கி லுக்கா ..இது தெரியாம போச்சே ஹி ஹி ஹி

லக்கிலுக் said...

//Hola Luckky,
perdón por, lo siento por//

மோவனு, ஒடனே டச்சு மொளிலே திட்டிக்குறே பார்த்தியா? இன்னா காண்டு ஒனக்கு? :-(

மோகன் கந்தசாமி said...

லக்கி காரு,
மீக்கு ஸ்பானிஷ் ஒஸ்த லேதா? "perdón por, lo siento por" -அன்ட்டே "Sorry about that" கண்ட்டி அர்தம். அர்த்தமாயிந்தா?
(ச்சும்மா ட்டமாஷ் :-))))))))

Anonymous said...

//டான்சிங் மகராஜா ஒரு காமெடியனாக ஜப்பானில் பார்க்கப்பட்டவர்//

தசாவதாரத்தை பார்த்தாலும் ஜப்பானியர்கள் அவ்வாறு தான் நினைப்பார்கள். பல முறை விபத்து நடந்தும் எந்த காயமும் இன்றி தப்பிக்கிறார். 100 அடி உயரத்திலிருந்து பல முறை குதிக்க லாரி காப்பாற்றுகிறது. சுனாமி வருகையில் ஒரு படகில் மறைந்து தப்பிக்கிறார். இதெல்லாம் விட கொடுமை அவருடைய ஒப்பனை. இதையெல்லாம் பார்த்து ஜப்பானியர்கள் பாராட்ட போகிறார்கள். ஆனால் ரஜினி காமெடியன்.

//இவர்கள் சிறுபான்மை//
என்ன நினைக்கிறீகள், ஒரே படத்தில் ஜப்பான் முழுவதும் ரஜினியினை கொண்டாட வேண்டுமா?