பின்னால் நடை பெறப்போகும் பல விஷயங்களை கணிப்பதில் அவர் ஒரு திறமைசாலி
1) 16 வயதினிலே படப்பிடிப்பில் ரஜினியை உதவி இயக்குனர்கள் மதிக்காத போது அவர்களிடம் கமல் சொன்னது " இவர்கிட்ட கால்ஷீட் கேட்டு நீங்கள் அலையிற காலம் வரும்"
2) சிங்கார வேலன் படப்பிடிப்பில் வடிவேலை கவனித்து தேவர் மகனில் வலுவான வேடம் கொடுத்தது
3) முள்ளும் மலரும் பட செந்தாழம் பூவில் பாடலைக்கேட்டு அதை படமெடுக்க முடியாத பணத்தட்டுப்பாட்டை அறிந்து இது கண்டிப்பாக படத்தில் இருக்க வேண்டும் என்று அதற்கு தேவையான வசதி செய்து தந்தது
4) மஹாநதி - சீட்டு கம்பெனி
5) மக்கள் தியெட்டருக்கு வரவேண்டுமென்றால் வசதி செய்ய வேண்டும் என்று அபிராமி தியேட்டருக்கு 95 ல் டால்பி சிஸ்டம் கொண்டு வந்தது. அதன்பின் தான் பல திரையரங்குகள் வசதிகளை மேம்படுத்தின
6) ஆளவந்தான் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட சொன்னது (அப்போது அவர் அளித்த பேட்டியில் திருட்டு வி சி டி தவிர்க்கவும், மக்கள் எளிதில் திரையரங்கை அடையவும் இது உதவும் என்றார். அப்பட தோல்வியால் இது எடுபடவில்லை. ஆனால் இப்பொது இதுதான் ட்ரெண்ட்). ஓடும் நாள் முக்கியமில்லை வசூல் தான் முக்கியம் என்று அன்று சன் டிவி பேட்டியில் (2001) சொன்னது இப்பொழுது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது
7) சமீபத்தில் அவர் சத்யம் சினிமாஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கூட இதைப் பற்றி சொல்லிஉள்ளார். (வாழைப்பழம் எல்லா இடத்திலயும் கிடைக்கிற மாதிரி நம்ம படம் கிடைக்கணும். இட்லி வாங்க, பான் போட வெளிய வர்ற ஆளு நம்ம படத்த தவற விடக்கூடாது.)
8) ஒரு நடிகன் தன் உடல், முக அமைப்பை மாற்றுவதன் மூலம் கதாசிரியனுக்கு சுதந்திரம் கொடுக்கிறான் என்ற அவர் கருத்தாலேயெ இப்போது விக்ரம், சூர்யா வால் நல்ல கதை அம்ச படங்களை கொடுக்க முடிகிறது
9) சத்யராஜ் - கடமை கண்னியம் கட்டுப்பாடு
நாசர் - மகளிர் மட்டும்
மாதவன் - நள தமயந்தி
பசுபதி - மும்பை எக்ஸ்பிரஸ்
என தன் தயாரிப்புகளின் மூலம் இவர்களின் பழைய முகத்தை மாற்றியவர் நம்மவரே
10) கிரேசி மோஹன் அவர்களின் ஒரு நாடகத்தைப் பார்த்தே அபூர்வ சகோதரர்களில் வசனகர்த்தா வாய்ப்பை வழங்கியது
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
super...
சூப்பர்ங்க, அந்தக் காரணத்தால தான் ரஜினி அந்தப் படத்த பத்தி கேட்டா கடுப்பகிட்டாரா(மலேஷியா கலைநிகழ்ச்சிகள் 2002/2003)
அற்புதமான தொகுப்பு, நன்றி
சரவணன்
இன்னொரு பாய்ன்ட்டையும் சேர்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..
சுனாமி விஷயத்தை விட்டுட்டீங்களே :-( ..எனக்கு அது தான் பெரிய ஆச்சர்யம்
முரளிகண்ணன் எங்க உங்களை கொஞ்ச நாளா ஆளை காணோம் !
கிரி, ஊருக்கு சென்று இருந்தேன் அதனால்தான்.
அன்பே சிவத்தில் சுனாமி பற்றி மாதவனுடன் விவாதித்தது. அப்போது சுனாமி என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது. (வசனம் மதனாக இருந்தாலும் கதை கமலினுடையது)
அட நான் சொல்ல வந்ததை கிரியும் சொல்லியிருக்கிறார்.
மூன்றாம் உலகப்போர் ஒன்று நடந்தால் அல்லது ஈராக் போரில் அமெரிக்கா தோற்கும் நிலை வந்தால் நிச்சயம் பயோ வெப்பன்ஸ் பாவிப்பார்கள். அப்போ நாம சொல்லலாம் அப்பவே நம்ம ஆண்டவர் இதனைத் தன் படத்தில் கூறிவிட்டார் என்று.
தீர்க்கதரிசி பாயிண்டுல இதையும் சேத்துக்கங்க: படம் வெளிவருவதற்கு முன்னாலேயே அதைக் கிழித்து தொங்கப் போட்டுவிடுவார்கள் என்று முன்னுணர்ந்து சினிமாப் பத்திரிகைக்காரர்கள் எல்லோருக்கும் தங்கக் காசுகள் கொடுத்து அவர்கள் வாயை அடைத்தது.
//வளர்மதி said...
தீர்க்கதரிசி பாயிண்டுல இதையும் சேத்துக்கங்க: படம் வெளிவருவதற்கு முன்னாலேயே அதைக் கிழித்து தொங்கப் போட்டுவிடுவார்கள் என்று முன்னுணர்ந்து சினிமாப் பத்திரிகைக்காரர்கள் எல்லோருக்கும் தங்கக் காசுகள் கொடுத்து அவர்கள் வாயை அடைத்தது.
//
வளர்மதி அய்யா!
அப்படி கமல் காசு கொடுக்கிறாரென்றால் இந்த வலைப்பூவை அவரிடம் காட்டி எங்களுக்கும் காசு வாங்கிக் கொடுக்கவும்! :-)
லக்கி லுக்,
இந்த அய்யா நக்கல் எல்லாம் வேண்டாமென்று நினைக்கிறேன்.
இங்கு இந்தப் பதிவில் எழுதுபவர்கள் காசு வாங்கிக் கொண்டு எழுதுகிறார்கள் என்றோ அத்தகைய நோக்கம் கொண்டவர்கள் என்றோ நான் கூறவில்லை.
தசாவதாரம் படத்திற்கு எந்தவிதமான negative review - வந்துவிடக்கூடாது என்பதற்காக film journalist - கள் அனைவருக்கும் தங்க நாணயங்கள் கொடுக்கப்பட்டது வெளிப்படையாக எழுதப்படாத பேசப்படாத உண்மை.
வேண்டுமென்றால் பத்திரிகைத் துறையில் உள்ளவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
//தசாவதாரம் படத்திற்கு எந்தவிதமான negative review - வந்துவிடக்கூடாது என்பதற்காக film journalist - கள் அனைவருக்கும் தங்க நாணயங்கள் கொடுக்கப்பட்டது வெளிப்படையாக எழுதப்படாத பேசப்படாத உண்மை.//
அடப்பாவிங்களா அப்போ எல்லாம் லஞ்சம் வாங்கியும் கூட நெகட்டிவ்வா எழுதிப்புட்டானுங்களா? குறிப்பா விகடனை உதைக்கணும் :-)
லக்கி,
நான் சொன்ன தகவல் உண்மையா அல்லது வெறும் புரளியா என்பதை பத்திரிகைத் துறையில் உள்ள நண்பர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டு நக்கலைத் தொடரலாமே !
//நான் சொன்ன தகவல் உண்மையா அல்லது வெறும் புரளியா என்பதை பத்திரிகைத் துறையில் உள்ள நண்பர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டு நக்கலைத் தொடரலாமே !//
நக்கலெல்லாம் ஒண்ணுமில்லை தலைவரே.
தசாவதாரம் படத்துக்கு முன்னாடி வந்த மூவாயிரம் தமிழ்படங்களின் தயாரிப்பாளர்களும் செஞ்ச டெக்னிக் தானே இது?
“கவரு கலாச்சாரம்” என்னவோ புதுசா இப்போதான் தசாவதாரம் படத்துக்காக அறிமுகப்படுத்துனது மாதிரி சொல்றீங்களேன்னு ஒரு ஆச்சரியம். அவ்வளவு தான்!
//தசாவதாரம் படத்துக்கு முன்னாடி வந்த மூவாயிரம் தமிழ்படங்களின் தயாரிப்பாளர்களும் செஞ்ச டெக்னிக் தானே இது?
“கவரு கலாச்சாரம்” என்னவோ புதுசா இப்போதான் தசாவதாரம் படத்துக்காக அறிமுகப்படுத்துனது மாதிரி சொல்றீங்களேன்னு ஒரு ஆச்சரியம். அவ்வளவு தான்!//
அப்படியில்ல தொண்டரே,
16 வயதினிலே கமல் கவர்/தங்கக் காசு கொடுத்தாரா?
அவள் அப்படித்தான் கமல் கவர்/தங்கக் காசு கொடுத்தாரா?
மூன்றாம் பிறை கமல் கவர்/தங்கக் காசு கொடுத்தாரா?
இந்த மூன்று படங்களிலுமே கமல் மிக நன்றாக நடித்திருப்பார் என்பதை மறுக்க முடியுமா?
இப்போது ஏன் கமல் தங்கக் காசு கொடுக்க வேண்டும்?
அதற்கு என்ன நிர்ப்பந்தம் வந்தது?
”கவரு கலாச்சாரம்” எல்லாக் காலத்திலும் எல்லோருக்கும் இருந்தது என்பதும் சரியில்லை லக்கி.
எத்தனையோ தயாரிப்பாளர்கள்/இயக்குனர்கள்/நட்சத்திர
நடிகர்கள் இந்த கலாச்சாரத்தை நம்பாமல் இன்னமும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சிலர் ஒரு கட்டத்தில் கொடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றால், “ஆராய்ச்சிக்கு” உட்படுத்தவேண்டுமே தவிர, அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
பம்மல் (உவ்வே) K சம்பந்தம் படத்தில் வருகிற மாதிரி “பழமொழி சொன்னா ரசிக்கனும், ஆராயக் கூடாது” என்றால், கேள்வியெல்லாம் கேக்கப்படாது என்றால், “ரசிப்பேன், ஆராயவும் செய்வேன்” என்பதுதானே பகுத்தறிவுப் பாசறையைப் பற்றி பேசுகிற ஆட்களுக்கு அழகு.
தலைவரே!
16 வயதினிலே, மூன்றாம் பிறை, அவள் அப்படித்தான் காலத்தில் கவர் கொடுத்தார்களா தெரியாது :-)
இப்போது நடக்கும் சினிமா பத்திரிகையாளர் சந்திப்பு ஏதாவது கவரில்லாமல் நடக்கிறதா என்று தசாவதாரத்துக்கு கவர் வாங்கிய நிருபர்கள் யாரிடமாவது கேட்டுப் பாருங்கள் :-)
பெரிய படம், சிறிய படம் பாகுபாடில்லாமல் பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காட்டப்படும் ப்ரிவ்யூ ஷோக்களின் போதே இடைவேளைகளில் கவர் தாராளமாக வெளிப்படையாக வினியோகிக்கப்படுவதை கண்டிருக்கிறேன்!!
கவர் வாங்காத சினிமா நிருபர் யாராவது இருப்பாரேயானால் அவரை நிச்சயமாக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கலாம்!
லக்கி,
எனக்குத் தெரிந்து 94 - ஆம் ஆண்டளவில் “இவர் கவர் ஜர்னலிஸ்ட்” என்று அரசல் புரசலாகப் பேசுகிற நிலைமை இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கவர் வாங்குவது அவ்வளவு வெளிப்படையாக இல்லை.
அதன் பிறகு 98 - வாக்கில் நடிகர் - நடிகைகளைப் பேட்டி எடுப்பதென்றால் ”நீ முந்தி நான் முந்தி” என்று போட்டி போடும் நிலைமையையும் கவனித்திருக்கிறேன். பேட்டி என்று போனாலே கவர் கிடைக்கும் நிலைமை அப்போது உருவாகியிருந்தது.
இப்போது நீங்களே சொல்வதுபோல இடைவேளைகளின்போது கவர் தரும் அளவுக்கு நிலைமை வந்திருக்கிறது.
நான் சொல்ல வந்தது இந்தக் கலாச்சாரத்தைப் பற்றி அல்ல.
கமல் என்ற ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகருக்கு தங்கக் காசு (கவர் அல்ல - அதற்கும் இதற்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது) கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் உருவாகியிருக்கிறது.
அதை கவனத்தில் கொண்டுவருவதற்காகவே 16 வயதினிலே, அவள் அப்படித்தான், மூன்றாம் பிறை படங்களில் மிக நன்றாக நடித்த கமலோடு ஒப்பீடு செய்தேன். (அவை ”கமல் படங்களா” இல்லை பாரதிராஜா படமா, மகேந்திரன் படமா? பாலுமகேந்திரா படமா? என்ற இன்னொரு கேள்வியும் இருக்கிறது).
ஒரு நடிகர் நமக்குப் பிடிக்கலாம். அவரை ரசித்து ரசித்து பார்க்கலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி, அவரின் பின்னால் ஒரு “ஒளிவட்டம்” மட்டுமல்ல, ஒரு பெரும் பொருளாதாரமும் தொழிலுமே இருக்கிறது. இதைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே இது போன்ற முயற்சிகள் நடக்கின்றன.
அவையெல்லாம் எனக்கு தேவையில்லாத சமாச்சாரங்கள்; நாங்கள் வெறுமனே கமல் ரசிகர்கள், அவ்வளவுதான் என்றால், நானும் ஆட்டையிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்.
நன்றிகள் ...
வளர் ...
:-)))))
தலைவரே! முணுக் முணுக்குன்னு டென்ஷன் ஆயிடுறீங்களே? நான் கமலின் நடிப்புக்கு மட்டுமே ரசிகன்!
கமல் தங்கக்காசு கொடுத்திருப்பாரேயானால் அதை கண்டிக்கவும் போவதில்லை, வாழ்த்தவும் போவதில்லை. எப்படியும் அது ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தலையில் தான் விடிந்திருக்கும் :-)
சினிமா நிருபர்களுக்கு பத்திரிகைகளில் தரப்படும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்த்தோமானால் அவர்களுக்கு தங்கக்காசு அல்ல, பிளாட்டினம் காசே கொடுக்கவேண்டும் என்று சொல்வேன்.
தொண்டரே ;)
நான் ஒன்னுங் கோயிச்சிட்டு போயிடல.
கமலின் நடிப்பை ரசிப்பது, பாராட்டுவது, அவரது நடிப்பின் சிறப்பு என்றெல்லாம் எழுதிக் கொள்வதில் ஒரு பிரச்சினையும் இல்லை. அதில் மறுப்பு இருக்கிறவர்கள் விமர்சனங்களைச் சொல்வதிலும் ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆனால்,
//ஆளவந்தான் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட சொன்னது (அப்போது அவர் அளித்த பேட்டியில் திருட்டு வி சி டி தவிர்க்கவும், மக்கள் எளிதில் திரையரங்கை அடையவும் இது உதவும் என்றார். அப்பட தோல்வியால் இது எடுபடவில்லை. ஆனால் இப்பொது இதுதான் ட்ரெண்ட்). ஓடும் நாள் முக்கியமில்லை வசூல் தான் முக்கியம் என்று அன்று சன் டிவி பேட்டியில் (2001) சொன்னது இப்பொழுது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது//
இது ஒரு வியாபாரியின் தந்திரம். வியாபாரத் தந்திரத்தை “தீர்க்கதரிசனம்” என்ற ரேஞ்சுக்கு ஏத்தி வச்சி சொன்னதுல கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன்னு வச்சுக்குங்களேன். அதுக்கு கவுண்டராத்தான் “தங்கக் காசு” என்ற இன்னொரு வியாபாரத் தந்திரத்தை சொன்னேன்.
இது ஆஸ்கர் ரவிச்சந்திரன் தலையில் விடியப் போவதுதானே அப்படீன்னும் சொல்லிட முடியாது. தசாவதாரம் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படமா இல்லை கமல் படமா என்கிற கேள்வியோடவும் சம்பந்தப்பட்டது.
பிரச்சினை கமலின் மார்க்கெட்டோடு தொடர்புடையது. ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு இதில் எந்த அளவுக்கு ஆதாயம் இருக்கிறதோ அதே அளவுக்கு கமலுக்கும் இருக்கிறது.
நீங்க கமலின் நடிப்பிற்கு மட்டுமே ரசிகர் என்றால்
//வளர்மதி அய்யா!
அப்படி கமல் காசு கொடுக்கிறாரென்றால் இந்த வலைப்பூவை அவரிடம் காட்டி எங்களுக்கும் காசு வாங்கிக் கொடுக்கவும்! :-)//
அப்படீன்னு எதுக்குப் பாஞ்சீங்க?
நான் சொன்ன தகவல் உண்மையா புரளியா என்கிற புள்ளிப் பேசியிருக்கலாமில்லையா? அதன் பின்னாலுள்ள மற்ற விஷயங்களப் பத்தி பேசியிருக்கலாம் இல்லையா?
எதுக்கு இந்தக் கொலைவெறி ?!
சரி ஆட்டத்த முடிச்சிக்கலாம்னு நினைக்கிறேன்.
வேலையிருக்கப்பா ... :)
அன்பு வளர்மதி, தான் சார்ந்த திரைஉலகம் ஒரு கோணத்தில் மட்டுமே சிந்திக்கும் போது மற்ற சாத்திய கூறுகளையும் அறிமுகப்படுத்தியவர் என்ற கருத்தில் எழுதப்பட்டது இது.
\\ஆளவந்தான் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட சொன்னது (அப்போது அவர் அளித்த பேட்டியில் திருட்டு வி சி டி தவிர்க்கவும், மக்கள் எளிதில் திரையரங்கை அடையவும் இது உதவும் என்றார். அப்பட தோல்வியால் இது எடுபடவில்லை. ஆனால் இப்பொது இதுதான் ட்ரெண்ட்). ஓடும் நாள் முக்கியமில்லை வசூல் தான் முக்கியம் என்று அன்று சன் டிவி பேட்டியில் (2001) சொன்னது இப்பொழுது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது\\
தமிழ் திரை உலகில் இப்பொழுது எடுக்கப்படும் சில நல்ல முயற்சிகளுக்கு இவர் எடுத்த முயற்சிகள் ஒரு காரணம் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது இந்த பதிவு
தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
நன்றி முரளி கண்ணன்.
மன்னியுங்கள், உங்களின் கருத்தோடு - அதாவது,
//தமிழ் திரை உலகில் இப்பொழுது எடுக்கப்படும் சில நல்ல முயற்சிகளுக்கு இவர் எடுத்த முயற்சிகள் ஒரு காரணம் என்ற எண்ணத்தில்//
என்பதில் எனக்கு நிறைய மாறுபாடுகள் உண்டு.
என்றாலும், தொடர்ந்து பகிர இப்போதைக்கு சாத்தியங்கள் இல்லை.
தங்களுடைய பகிர்வுகள் தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வளர் ...
முரளி! தலைவனைப் பற்றி சூப்பராக சொல்லி உள்ளீர்கள்!
//நக்கலெல்லாம் ஒண்ணுமில்லை தலைவரே.//
கோ.கி ஆனாலும் உமக்கு இவ்வளவு நக்கல் ஆகாதுயா!!!:))
நிருபர்கள் கவர் வாங்குவார்கள் என்று குறைந்த ஊதியம் அளிப்பது --> குறைந்த ஊதியம் பெருவதால் அவர்கள் கவர் வாங்குவது என்பது ஒரு விச்சியஸ் சுழற்சி
--
கமல் தீர்க்க தரிசி என்பதில் எனக்கு சந்தேகமே கிடையாது.
அவர் தனது காலத்திலிருந்து 20 வருடங்கள் முன்னதாக சிந்திக்கிறார்.
அதனால் தான் அவரது பல படங்கள் புரிவதில்லை - ஓடுவதில்லை
சரியாக ஓடாத / புரிந்து கொள்ளப்படாத பல கமல் படங்கள் இன்று வெளியிடப்பட்டால் புரிந்து கொள்ளப்படும்.
உதாரணம் - குணா
(காதல் கொண்டேன் புரிந்தால் குணா புரியாதா)
So when Aalavandhan, Hey Raam and Anbe Sivam got released thalaivar didn't give any cover/gold coin that time? Probably he didn't know then? Or Rajini gave fatter cover during the same period?
Post a Comment