"மர்மயோகி விலகும் மர்மங்கள்"


இதுவரை வெளியான அனைத்துப் படங்களின் உலக வசூலை முறியடித்து ஒடிக்கொண்டிருக்கும் "தசாவதாரம்", தமிழ் சினிமாவைத் தயாரிப்புரீதியாகவும், படைப்புத்திறன் சார்ந்தும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இதன்மூலம் உலக மொழிப் படங்களில் நடிக்காவிட்டாலும் "உலக நாயகன்" என்று தன் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கமலுக்கு அந்தப் பட்டம் பொருந்திப் போய் விடுகிறது.

"தசாவதாரம்" படத்தில் கமலின் பெரு முயற்சியால் படைப்பாளிக்கும், தயாரிப்பாளருக்கும் எப்போதுமிருக்கும் பட்ஜெட் முரண் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் பலனையும் அறுவடை செய்ய கமலுக்கே வாய்ப்புக் கிடைத்திருக்கிறது, "மர்மயோகி" படத்தின் மூலம். இதுவரை எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இல்லாதவாறு மர்மயோகியின் பட்ஜெட் 150 கோடி என்று கணக்கிடப்பட்டிருப்பது தமிழை விரித்து, உலகைச் சுருக்கும் முயற்சியாகவே இருக்கிறது.

இன்னும் "மர்மயோகி" யின் தயாரிப்பும், படப்பிடிப்பும் முழுமையாக டிசைன் செய்யப்படாத நிலையில் அங்கே என்னதான் நடக்கிறது என்ற ரசிகக்கவலையில் கொஞ்சம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வியப்பானவை. அவை "மர்மயோகி"யின் மர்மத் திரையைக் கொஞ்சம் விலக்கிவைக்கவும் செய்பவை.

"மர்மயோகி" யைத் தயாரிக்க பிரமிட் சாய்மீராவுடன் ராஜ்கமலும் கைகோர்ப்பது ஒருபுறமிருக்க, படத்தின் அசாத்திய பட்ஜெட்டுக்குத் தோள்கொடுக்க ஹாலிவுட்டின் 'வால்ட்டிஸ்னி'யும் தமிழுக்குள் வரவிருக்கிறது.

கமலே இயக்கவிருப்பதால், படைப்பு சார்ந்தும் படத்தை ஹாலிவுட் படங்களின் நேர்த்திக்கு உருவாக்கும் முயற்சியிலிருக்கிறார் அவர். நவீன தொழில்நுட்பத்துடன் படம் தயாராவதால் லேட்டஸ்ட் வசதிகள் கொண்ட "ரெட்" என்ற ஹைடெமினிஷன் கேமராவை இந்தப்படத்தில் கமல் பயன்படுத்தவிருக்கிறார். "4கே ரெசொல்யூஷன்" திறன் கொண்ட அதன் ஒருநாள் வாடகை 30 ஆயிரம் ரூபாய் என்றிருக்க அந்தக் கேமராவை இந்தப்படத்துக்காக சொந்தமாக விலைகொடுத்தே வாங்கிவிட்டாராம் கமல். அதன் விலை 45 லட்சம்.

சரி....... கதை?

ஏழாம் நூற்றாண்டில் நடப்பதாகச் சொல்லப்படும் "மர்மயோகி"யின் கதையில் அந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அரசவம்சததை வேரறுக்க நினைக்கும் இன்னொரு வம்ச அரசியாக ஹேமாமாலினி வருகிறார். அதாவது கதையின் வில்லி அவர்தான்.

அவரால் அழிக்கப்படும் வம்சத்தில் எஞ்சியிருக்கும் ஐந்து வயது வாரிசை மீண்டும் அரியணை ஏறவைக்க அந்த ராஜ்ஜியத்தின் தளபதி போராடும் கதையைத்தான் மர்மயோகியில் சொல்லப்போகிறாராம் கமல். தளபதி வேறு யாருமில்லை. கமலேதான்...! அதற்காக கருகருவென்று தாடி வளர்த்து கொண்டிருக்கிறார் அவர்.

மெல்கிப்ஸனின் 'கிளேடியேட்டர்', 'பிரேவ்ஹார்ட்' படங்களையொத்த உருவாக்கம் இருக்குமாம். கமல் தன்னுடன் நடிக்க பத்மபிரியாவைக் கேட்டிருக்கிறார். 'கமலுடன் நடிக்கக் கூலி' என்றால் கசக்குமா என்ன? ஒத்துக்கொண்டு அக்ரிமென்டில் கையெழுத்திட ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கிறார் பத்மபிரியா.

படப்பிடிப்பு இந்தியாவில் ராஜஸ்தானிலும், பெரும்பகுதி ஸ்விட்சர்லாந்திலும் எடுக்கப்படவிருக்கிறது. படப்பிடிப்பு இடைஞ்சல்லில்லாமல் நடைபெறுவதற்காகவும், ரம்மியமான ஒளிப்பதிவுக்காகவும் ஸ்விட்சர்லாநதைத் தேர்ந்தெடுத்திருக்கிறாராம் கமல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் உருவாகின்றன.

"மர்மயோகி" யின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் பாக்கியம்தான் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களுக்கு இருக்குமோ இருக்காதோ தெரியவில்லை. ஆமாம்... படம் தொடங்கப் போவது மும்பையில். அந்த மர்மத்தையும் விரைவில் கமல் விலக்கினால் நலம்.

நன்றி: குங்குமம் (14.08.08)

14 comments:

வால்பையன் said...

//மெல்கிப்ஸனின் 'கிளேடியேட்டர்', 'பிரேவ்ஹார்ட்' //

பிரேவ் ஹார்ட் மட்டும் தான் மேல்கிப்ஸன் படம்
கிளாடியேட்டர் ridly scott படம்

வால்பையன்

முரளிகண்ணன் said...

தசாவதாரம் துபாயில் 50 நாளை கடந்த முதல் தமிழ் படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. உலக அளவில் வசூல் தொகை பற்றி அறிந்த நண்பர்கள் இங்கு தெரிவிக்கலாமே.

பனிமலர் said...

CHILL FACTOR பார்த்து தசாவதாரமாக ஈ அடிச்சான் காப்பி அடித்ததை போல் இது எந்த படத்தின் காப்பியோ.... படம் வந்தால் தான் தெரியும்.......

திங்கள் சத்யா said...

ஒரு பக்கம் மஞ்சத்துண்டு மைனருக்கு சாமரம். இன்னொரு பக்கம் மரை கழண்ட அரை லூசுக்கு. இவரு உலக நாயகன்னு உன்ன மாதி ஆளுங்கதான்யா மூச்சுவிடாம கத்துறீங்க. முத்தப் புரட்சி தவிர ஒரு மயிரையும் இவர் ஒழுங்கா புடுங்கலைன்றது மாறுவேடப்போட்டியிலேயே தெரிஞ்சுப்போச்சு. உனக்கெதுக்கு இந்த வேலை? லக்கி...
பேசாம கஉலகநாயகனையே நம்பலாம் போலிருக்கே! அதைவிட நீ ஆபத்தான ஆளா இருப்பியோ?

லக்கிலுக் said...

திங்கள் சத்யா அவர்களே!

வெளிவேஷம் போட்டோ, மாறுவேடம் போட்டோ நான் எவனையும் ஏமாற்றியதில்லை. அந்த வகையில் நான் ஆபத்தில்லாதவன்!

Tech Shankar said...

உலகநாயகனின் புதிய அவதாரங்கள்


உலகநாயகனின் பழைய புகைப்படங்கள்


சுருதி கமல்ஹாசன்

Athisha said...

மர்மயோகி v/s ரோபோ வா ???

கலக்கல்

Sathis Kumar said...

வணக்கம், தங்களுடைய பதிவுகளை அடிக்கடி படிப்பவன் நான். நானும் உலக நாயகனின் ரசிகன்.


http://olaichuvadi.blogspot.com/

Anonymous said...

Nalla azhaga varattum marmayogi. Aaana adhuku appuramum adhu "Apocalypto" madhiri iruku illa Marudhanaayagam "Apocalypto" voda copy nu padhivu poduvaaanunga sila peru. Solla pona "Marudhanaayagam" munnadiye thuvangina padam.

Anonymous said...

செம படமா வரணும்ணு வாழ்த்துகிறேன்.
நன்றி சகலகலா வல்லவன்!

Anonymous said...

//மர்மயோகி v/s ரோபோ வா ???//

உலகநாயகன் v/s கன்னட நாயகனா

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

குரங்கு said...

@லக்கி,

மருதநாயகம்தான் மர்மயோகி சொன்னங்க?

இன்னும் மர்மம் விலகலையே :(

Anonymous said...

Kamal Hassan to act with Japanese superstar Tadanobu Asano in an Indo-Japanese venture on martial arts

http://www.mumbaimirror.com/net/mmpaper.aspx?page=article&sectid=30&contentid=2008080920080809025606438f94b183e