"இந்த பேட்டி சுவாரசியமாக இருக்காது..!"
திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததுமற்றொரு முறை 'ஹைஜம்ப்' செய்யப் போய், கையை ஒடித்துக்கொண்டது கோவளம் கடற்கரையில் நடந்த 'அன்னை வேளாங்கண்ணி' படப்பிடிப்பின் போது, கடலினுள்ளே ஆறு மைல் தூரம் வரை சென்று, பயங்கர அலைகளில் சிக்கி உயிர் தப்பியது
இப்படிப் பல 'ஆக்ஸி டெண்ட்'டுகளிலிருந்து தப்பி படவுலகிலும் 'ஆக்ஸிடெண்ட்'டலாக நுழைந்தவர்தான், இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த நடிகர் கமலஹாசன்.
''எங்கள் குடும்ப நண்ப ரான டாக்டர் சாரா, ஏவி.மெய்யப்ப செட்டி யார் வீட்டில் நடந்த ஒரு விருந்துக்கு என்னையும் அழைத்துக் கொண்டு போனார். செட்டியார் தம்பதிக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அப்போது செட்டியார் 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அதிலே தான் என்னை ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். 'எனக்கும் சினிமாவிலே நடிக்க சான்ஸ் வரும், நானும் நடிப்பேன்' என்று முன்னே பின்னேகூட நான் நினைத்ததில்லை. பை ஃப்ளூக், அந்த சான்ஸ் எனக்குக் கிடைச்சுது...'' என்று இரு கைகளையும் மேலே தூக்கிக் காண்பிக் கிறார் கமலஹாசன்.
அன்று, 'களத்தூர் கண்ணம்மா', 'பாத காணிக்கை', 'பார்த்தால் பசி தீரும்' படங் களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மாஸ்டர் கமலஹாசன், இன்று 'அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படங்களில் இளம் தலைமுறை நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.
''சின்னக் குழந்தையாகவும் இல்லாம, பெரிய ஆளாகவும் இல்லாம சில காலம் நடுவிலே அகப்பட்டுத் திண்டாடினேன். முகத் திலேயும் அப்போதுதான் பூனை மீசையிருந்தது. சினிமாவிலே சான்ஸ் இல்லாதபோது டிராமா லைன்லே கொஞ்ச நாள் இருந்தேன். டி.கே.எஸ். குழுவிலே சேர்ந்து, 'அப்பா வின் ஆசை' டிராமாவிலே நடிச்சுக்கிட்டிருந்தேன். அப்படியும் சும்மா இருக்க இஷ்டமில்லாம திரு. நடராஜனிடம் டான்ஸ் கத்துக் கிட்டேன்.
யாரும் செய்யாத ஒண்ணை நாம செய்யணும் கிற ஆசையிலேதான் டான்ஸ் கத்துக்கிட்டு பிரபல டான்ஸ் டைரக்டர் தங்கப்பன்கிட்டே அஸிஸ் டென்ட் டைரக்டரா மறுபடியும் பட உலகத்திலே நுழைஞ்சேன். அவரோடு நிறைய படங்களிலே ஓர்க் பண்ணியிருக்கிறேன். அவர் எடுத்த 'அன்னை வேளாங் கண்ணி' படத்திலே அஸிஸ்டென்ட் டைரக்டரா, அப்ரென்டிசா இருந்து சுத்துக்கிட்டேன்.
'நான் ஏன் பிறந்தேன்' படத்திற்கு டான்ஸ் ஒர்க் பண்ணும்போது திரு. எம். ஜி.ஆரோடு பழகக்கூடிய சான்ஸ் கிடைச்சுது. அவர் என் 'பாடி'யை பில்ட் அப் பண்ணுவதற்கு சில 'எக்சர்சைஸஸ்' எல்லாம் கத்துக் கொடுத்தார். அதைத் தினமும் இப்போ கூட செய்துகிட்டு வரேன்...'' என்று கூறும் கமலஹாசன் தன் 'பாடி'யை நன்றாக 'பில்ட் அப்' பண்ணி 'ஸ்மார்ட்' ஆகத்தான் வைத்திருக்கிறார்.
அண்மையில் வெளிவந்துள்ள 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் ஒரு டான்ஸராக வந்து, 'யூ டோண்ட் நோ' என்று பாடி அமர்க்களம் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்குக் கிடைத்திருப்பது கவர்ச்சி வில்லன் வேடம்!
இந்த மாதிரி கேரக்டரை இவர் நன்றாகச் செய்திருப்பதைப் பார்த்து, இனிமேல் இவரை 'புக்' செய்யும் தயாரிப்பாளர்களும் இதே மாதிரி 'ஸ்டீரியோ டைப்' ரோல்களைக் கொடுத்தால்..?
''எந்த ரோல் வந்தாலும் ஏற்றுக் கொண்டு ஒரு 'நல்ல நடிகன்'னு பேர் வாங்கணும் என்பதுதான் என் லட்சியம். டைரக்டர் பாலசந்தர் கூட எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். 'இதே மாதிரி 'ரேப்' பண்ற ரோலா உனக்குக் கொடுப்பாங்க. காலையிலே ஒரு செட்டிலே பிரமீளா, சாயங்காலம் இன்னொரு செட்டிலே ஜெயசுதா, அப்படின்னு..! 'ரேப்' பண்ற ஸீனாவே நடிச்சு இதை 'கன்டினியூ' பண்ணாதே. அதுக்குன்னு வில்லன் ரோல் வந்தா வேண்டாம்னும் சொல்லாதே! நல்ல ரோல் வந்தா விடாதே'ன்னு சொல்லியிருக்காரு'' என்று 'பெல்பாட்டம் பேண்ட்' மடிப்பை இழுத்துவிட்டுக் கொண்டே சொல்கிறார் கமலஹாசன்.
கமலஹாசன் ஹீரோவாக நடித்த, 'உணர்ச்சிகள்' என்ற படம் இன்னும் வெளிவரவில்லை. காரணம், பட விநியோகஸ்தர்கள் தான். அந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. செக்ஸ் கிடையாது. ஹீரோ கமலஹாசன்; ஹீரோயின் எல்.காஞ்சனா. இரண்டு பேருமே வழக்கமாக இல்லாத புதுமுகங் கள். அவ்வளவுதான், விநியோகஸ் தர்கள் பின்வாங்கிவிட்டார்கள். பாவம், படத் தயாரிப்பாளர் என்ன செய்வார்? அதற்காக இப்போது ஆட்டம், பாட்டு என்று எல்லா மசாலாக்களையும் சேர்த்து மறுபடியும் எடுக்கிறார்களாம். இதைக் கூறி வருத்தப்படுகிறார் கமலஹாசன்.
'' இப்ப நான் கொடுத்திருக்கிற பேட்டி அவ்வளவா சுவாரசியமா இருக்காதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, நான் இன்னொரு ஆர்ட்டிஸ்டைப் பத்திக் குறை சொல்லலை. யாரையும் தாக்கவே இல்லை. 'இவர் எனக்கு மரியா தையே கொடுக்கலே', 'அவர் என்னை மதிக்கலை'ன்னு வழக்கமா எல்லாரும் சூடா சொல்ற மாதிரி நான் சொல்லவே இல்லை. அப்படியிருக்கறச்சே எப்படி இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்?
குழந்தையிலேருந்து இந்த ஃபீல்டுலே இருக்கேன். இது வரைக்கும் எல்லோர்கிட்டேயும் மரியாதையா நடத்துக்கறேன். எனக்கும் எல்லாரும் மரியாதை கொடுக்கறாங்க. அதனாலே யாரையும் திட்டறதுக்கு சான்ஸே கிடையாது'' என்று நகைச்சுவை யாகப் பேசுகிறார் கமலஹாசன்.
சினிமா உலகத்தில் அனைவரும் இவருக்கு நண்பர்கள்.
இளமையான தோற்றம், அளவான உயரம், கலையார்வம், படவுலகில் 15 வருட அனுபவம் எல்லாம் அமையப் பெற்றிருக்கும் கமலஹாசனுக்கு ஒரு நல்ல பிரகாசமான எதிர்காலத்தைத் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் உருவாக்கித் தராமலா போய் விடுவார்கள்?
இந்தவார விகடன் பொக்கிசத்தில் வெளியாகிய நம்ம உலக நாயகனின் 23.2.1973 விகடனில் வெளிவந்த கன்னிப்பேட்டி.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//இப்ப நான் கொடுத்திருக்கிற பேட்டி அவ்வளவா சுவாரசியமா இருக்காதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, நான் இன்னொரு ஆர்ட்டிஸ்டைப் பத்திக் குறை சொல்லலை. யாரையும் தாக்கவே இல்லை. 'இவர் எனக்கு மரியா தையே கொடுக்கலே', 'அவர் என்னை மதிக்கலை'ன்னு வழக்கமா எல்லாரும் சூடா சொல்ற மாதிரி நான் சொல்லவே இல்லை. அப்படியிருக்கறச்சே எப்படி இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்?//
யாரையும் எதுவும் திட்டலைனா பதிவுகளே மொக்கையா போகிருது!
பாருங்களேன் அப்பவே மொக்கையா ஒரு பேட்டி
வால்பையன்
பேட்டியை பதிந்தமைக்கு நன்றி வந்தியத்தேவன். பத்தொன்பது வயதிலேயே கமலஹாசன் இவ்வளவு தெளிவாக பேசியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
பேட்டியை பதிந்தமைக்கு நன்றி வந்தியத்தேவன். பத்தொன்பது வயதிலேயே கமலஹாசன் இவ்வளவு தெளிவாக பேசியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
வந்தியத்தேவன் அசத்திட்டீங்க
"உலக நாயகனின் உலகப் பயணம் ஆரம்பம்"
இந்த லிங்க் பாருங்க.
Kamal Hassan to act with Japanese superstar Tadanobu Asano in an Indo-Japanese venture on martial arts
http://www.mumbaimirror.com/net/mmpaper.aspx?page=article§id=30&contentid=2008080920080809025606438f94b183e
Post a Comment