படங்களை படங்களாக பார்க்க வேண்டும் என்பது என் கருத்தாக இருந்தாலும் கமல் படங்களின் வெளியீடுகளில் மட்டும் ஒரு சராசரி ரசிகனாக மாறிவிடுவேன். அது முதல் நாள் காட்சி முடிவடையும் வரை தான். அடுத்த நான் நானும் பூதக்கண்ணாடி மாட்டிக்கொண்டு குறை இருக்குதான்னு பாக்க கிளம்பிடுவேன். என்ன தான் நம்ம பையன் தப்பு பண்ணாலும் வலிக்காம ஒரு அடி வைப்போம் இல்லை அந்த மாதிரி கண்டிப்பா எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு தெளிவா சொல்லிடுவேன். ஆனால் கமல் என்கிற அந்த நடிகனின் படத்தில் குறைகள் இல்லை என்பதை விட குறைகள் குறைவு என்று சொன்னால் சரியாக இருக்கும். சாதாரணமாக கமலின் படங்களை மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும். கதைக்கும் அந்த காட்சிக்கும் சம்பந்தம் இருப்பது போலவே தெரியாமல் இருக்கும் பல காட்சிகள் இருக்கின்றன. நான் கவனித்த அப்படி சில காட்சிகளை கீழே சொல்லி இருக்கேன். நீங்களும் கவனிச்சிருக்கீங்களா?
* இந்தியனில் மனீஷாவிடம் தன் மகன் முத்தம் தரும்போது மீசை குத்தியதாக சொன்னதால் மீசையை எடுத்ததாய் சொல்வார். அவனை கொன்ற பிறகு போலீசுக்கு தொலைபேசுவார் அப்போது மீசை இருப்பதாக இருக்கும். இது சாதாரண மாறுவேடமாக நினைக்காமல் கொஞ்சம் உள் இறங்கிப்பாருங்கள் அதன் அர்த்தம் புரியும்.
* ஹே ராமில் வசுந்தராவை பெண் பார்க்கப்போகும் போது கோயில் யானை தன் பாகனோடு இருப்பதாக ஒரு காட்சி கமல் கொஞ்சம் பின்னோக்கி தன் வாழ்க்கையை சிந்திக்கும் போது கல்கத்தாவின் கலவரத்தில் தன் பாகனை இழந்த யானையை காண்பிப்பார். அந்த யானை தான் கமல். அப்போது ராணி முக்கர்ஜியின் மரணம் அதையடுத்து நடந்த நிகழ்வுகளை சூட்சுமமாக அந்த ஒரு காட்சியில் பொறுத்தி இருப்பார்.
அந்த யானை பாகன் இறந்த பிறகு அவன் கையில் இருக்கும் அந்த அங்குசம் அதன் காலில் பட்டிருக்கும் அதனால் அது நகராமல் அந்த கலவரத்திலும் அமைதியாக இருக்கும். அந்த அங்குசம் தன் மனைவியின் நினைவு?? அல்லது மிருகத்துக்கு இருக்கும் அறிவு கூட மனிதர்களுக்கு இல்லையே என்பது பொருளா? கமலுக்கே வெளிச்சம்.
பின்னர் அதே படத்தில் "I do not" என்கிற வசனம் ஓரிரு முறை இடம் பெற்றிருக்கும் "I don't" க்கு பதிலாக. சுதந்திரத்துக்குப்பின் தான் "I don't" அதிகமாக புழக்கத்தில் வந்ததென கேள்விப்பட்டேன்.
இதற்கு பெயர் தான் டைரக்ஷன். அவர் பேட்டியில் கூட தான் இன்னும் முழுமையான ஒரு டைரக்டர் ஆகவில்லை என்று தான் சொல்லி வருகிறார். அவர் நடிக்க ஆரம்பித்து டைரக்ட் செய்ய எத்தனை வருடங்களை ஆனது என இப்போது வரும் புது டைரக்டராக மாறிய நடிகர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.
* ஹே ராமில் இன்னொரு காட்சி. கமல்ஹாசனுக்கு காந்தியை அடுத்து வரும் வாரங்களில் கொலை செய்யச் சொல்லி ஒரு தந்தி வரும். மார்கழி நாளில் திருப்பாவை பாடிக்கொண்டே சிலர் தெருவில் நடந்து போவார்கள். இது டிசம்பர் நடுவில் துவங்கி ஜனவரி பாதி மாதம் வரை போகும். காந்தி சுடப்பட்டது ஜனவரி 30. பிழைகள் இல்லாமல். மன்னிக்கணும். பிழைகள் தவறான வாத்தை. பிசுறு இல்லாமல் படத்தை எடுக்க அவரிடம் பாடம் படித்தே தான் ஆக வேண்டும். கொடிகள் தூக்கிக்கொண்டு சிலர் வரலாம். இது வரலாற்றுப்படம் கதை, கதைக்களம் இதில் சின்ன தவறுக்கூட இடம் கொடுக்காமல் தான் எடுக்க வேண்டும். எடுத்தார். மற்ற கமெர்ஷியல் படத்தில் லாஜிக் இல்லாமல் போனாலும் பாதகம் இல்லை.
* கதாப்பாத்திரங்களுக்கு பெயரிடுவதிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்:
1. மகாநதி படத்தில் கிருஷ்ணசாமி, நர்மதா, கோதாவரி, யமுனா, காவேரி, பரணி, பஞ்சாபகேசன்.
2. அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லன்களுக்கு அவர்கள் குணாதீசியத்தோடு ஒட்டாத பெயர்கள்.
# தர்மராஜ் - ஒரு சின்ன புத்தி அரசியல்வாதி.
# சத்தியமூர்த்தி - பொய் மட்டுமே பேசத்தெரிந்த வக்கீல்.
# நல்லசிவம் - கொலையாளி.
# அன்பரசு - பணக்கார தப்பான காரியங்கள் மட்டுமே செய்யும் ஒரு கதாப்பாத்திரம்.
3. உன்னால் முடியும் தம்பியில் சீதா கதாப்பாத்திரத்தின் பெயர் லலிதா. "இதழில் கதை எழுது நேரமிது" பாடலும் லலிதா ராகம்.
4. இந்தியனிலும் (சுபாஷ்) சந்திரபோஸ், கஸ்தூரி (பா காந்தி) போன்ற பெயர்கள் கொடுக்கப்பட்டது கதாப்பாத்திரங்களுக்கு. சேனாபதி என்ற ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்ன செய்திருப்பாரோ அது அங்கு காட்டப்பட்டது. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றாலும் நாம் கவனிக்க வேண்டியது அவரது பர்ஃபெக்ஷன்.
* இந்தியனில் டிராபிக் இன்ஸ்பெக்டரை அடிகும் காட்சியில் அவரை கமல் "சார்ஜென்ட்" அப்படின்னு கூப்பிடுவார். மீண்டும் ஒரு நுணுக்கமான காட்சியமைப்பு.
* வேடிக்கையாக அமைக்கப்பட்ட அதிகம் கவனிக்கப்படாத ஒரு காட்சி பஞ்சதந்திரத்தில். 36 24 36 பாடலில் "இந்தியன் யாரென்று புரியவைப்பேன்" இந்த வரிகளின் காட்சியமைப்பு அவர் அமெரிக்க நகர வீதியில் வாய் கொப்பளித்து துப்புவார். நாம் செய்யறது தானே திருந்துறோமா? திருந்த கூட வேணாம் அது தப்புன்னாவது தோணி இருக்கா?
* விருமாண்டி உண்மை கதையில் பேச்சியம்மாவை பேய்காமனிடடிருந்து காப்பாற்றுவார். அதன் பிறகு விருமாண்டி மாட்டிரைச்சி கேட்க ஆரம்பிப்பார். அதன் பின்னர் அவர் தந்திரமாக கிணற்றுக்குள் மூடப்பட்டு "ஆடி வெள்ளி" வெளிவந்து தன் படையலை எடுத்து கொள்வது போல கதை நகரும். (விருமாண்டி படத்தில் ஒரு வில்லுப்பாட்டு பெரியகருப்பத்தேவரும், இசை ஞானியும் பாடிய ஒன்று அதை கேட்டால் தெளிவாக புரியும்).
அதே போல சின்னக்கோளாறுபட்டி ஆட்கள் நல்லமநாயக்கர் ஊராரை கொலை செய்த பின் அந்த பெண்ணை கிணற்றுக்குள் வைத்து காப்பாற்றுவார் கமல்.
பின் நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்லி தப்பிக்கும் காட்சியில் அந்த மூளை பிசங்கிய பெண் "அடப்பாவி கெணத்துக்குள்ள இருந்தப்ப நல்லவனா இருந்தியேடா. இப்போ இப்படி மாறிட்டியே" என சொல்லி அழும் ஒரு காட்சி உண்டு. இதற்கு டைரக்டோரியல் டச்னு ஒரே வார்த்தையில் புகழ்ந்தா போதுமா? தெரியலை.
*
இப்போ சொல்லுங்க எத்தனை பேர் கமல் படத்த பாக்குறீங்க?
கமல் படத்தை பாக்குறீங்களா இல்லை அது திரையிடப்படும் திரையரங்கில் இருக்கீங்களா?
தொடரும்... (என்னடா தொடரும்னு சொல்றான்னு பாக்காதீங்க. கமல் படங்களை கவனமாக பார்த்தால் நிறைய அழகான அம்சங்களை நான் தவறவிட்டது தெரியும். அவர் படங்கள் வரும் வரையில் இது போல சின்ன சின்ன நுணுக்கங்களை பார்க்கலாம். ஆமாம் நீங்கள் மேலே சொன்னவைகளை கவனித்திருக்கீங்களா? நான் ஏதாவது தவற விட்டுட்டேனா? உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பின்னூட்டுங்கள். இவை அனைத்தும் நானே சிந்தித்தவைகள் இல்லை. அவ்வளவு சாமர்த்தியமும் இல்லை எனக்கு. சகரசிகர்கள் உடனான பேச்சுக்களின் போது சேகரித்த தகவல்கள்.)
-ஸ்ரீ.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
ஒரே வார்த்தை அற்புதம் அற்புதம்.
அன்பே சிவம் படத்தில் மாதவனுடன் அவர் அறையில் தங்கும் போது தரையில் படுப்பார்.
ஒரு கால் நீளமாகவும் அடுத்த கால் குள்ளமாகவும் இருக்கும்.
Perfection !!!.
உடல் ஊனமுற்றவராக பலர் நடித்திருக்கலாம். ஆனால் கால் நீளத்தை கூட (அதுவும் ஒரே ஒரு முறை மட்டுமே வரும் காட்சியில் கூட) சரியாக செய்தது கமல் தான்
அதை பார்த்த நான் மீண்டும் படத்தை கவனிக்க வெகு நேரமாகியது
Lucky mee too inspired by few of the above you said.
Later if I recollect will comment u.
:-))
ஸ்ரீ பின்னு பின்னுன்னு பின்னிட்டீங்க
கலக்கல்
தொடர்ந்து இதுபோன்ற விடயங்களை தந்தால் இடுத்த படத்தில் நாங்களும் நுணுக்கமாக பார்த்து இப்ப இத வாநிக்கும்பொது கிடைத்த சந்தோஷத்தை பெற்றுக்கொள்வோம்.
@ தீலிபன்
நன்றிங்க திலீபன்
"உடல் ஊனமுற்றவராக பலர் நடித்திருக்கலாம். ஆனால் கால் நீளத்தை கூட (அதுவும் ஒரே ஒரு முறை மட்டுமே வரும் காட்சியில் கூட) சரியாக செய்தது கமல் தான்"
மிக்க நன்றி புருனோ
உங்க பின்னுட்டம் படிச்சதால கமல் படங்களை எல்லாம் மறுபடி பாக்கணும் போலே இருக்கு
நுணுக்கமான பார்வை.. கலக்கல் பதிவு..
கமல் பார்த்தல் அடுத்த பட discussionகுக் கூப்பிடுவார் .. ;) அவர் கூட இப்படியெல்லாம் யோசிச்சிருப்பாரோ தெரியல்ல.
நானும் தீவிரக் கமல் ரசிகன்,, மேக் அப்பில் அவரது நுண்ணிய கவனம் கண்டு வியந்திருக்கிறேன்.
பின்னூட்டமிட்ட அனைத்து சகாக்களுக்கும் என் நன்றிகள்.
@ லோஷன்
//நுணுக்கமான பார்வை.. கலக்கல் பதிவு..
கமல் பார்த்தல் அடுத்த பட discussionகுக் கூப்பிடுவார் .. ;) அவர் கூட இப்படியெல்லாம் யோசிச்சிருப்பாரோ தெரியல்ல. //
அய்யோ அண்ணாத்த அவர் யோசித்ததில் .0001% கூட நான் யோசித்திருக்க மாட்டேன். அவர் ஒரு கடல் என்னால் எவ்வளவு தான் குடுக்க முடியும்?
கமல் கதை வசனம் எழுதிய எல்லா படங்களிலுமே, இது போன்ற நுணுக்கமான பல விஷயங்களை பார்க்கலாம்.
அன்பே சிவம் படத்தில் அவன் அனிந்திருக்கும் சோடா புட்டி கண்ணாடியில் அவரது கண் பெரிதாக க்ளோசப் காட்சியில் தெரியும்.
அதற்காக அவர் காண்டாக்ட் லென்சு அணிந்து கண்ணாடி கொண்டதாக பேட்டியில் ஒருவர் சொன்னார்.
Nerap pirachchinaiyaal 'Thanglish' ileye ezhudhukiren.Arumaiyilum arumai.Naan theeveira Kamal bakthan.Indru thaan ungal valaippadhivu en kannukku pattadhu.Arumaiyaana padhivu!!
Neraminmaiyaal 'Thanglish' ileye ezhudhukiren.Naan theeveira Kamal bakthan.Arumaiyaana padhivu idhu.Thodarattum ungal pani!!!
விக்ரம் படத்துல ஒரு காட்சி இப்படி வரும்... சத்யராஜ் இருக்கும் இடத்தை ஒருவரிடம் கமல் விசாரித்து கொண்டிருப்பார் அப்போது 'அந்த நபர் 14-வது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்வார் பிற அதிகாரிகள் அப்போது சொல்வார்கள்... அவனிடமிருந்து ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று. கமல் இப்படி சொல்வார் நான் ஒன்றை தெரிந்து கொண்டேன் இது போன்ற விசாரணைகளை 14 -வது மாடியில் வச்சு பண்ண கூடாதுன்னு.
இது போன்ற சாதரண காட்சியாக இருந்தாலும் அதன் மூலம் யாருக்காவது எதையாவது சொல்லிகொடுப்பதே அவரின் வழக்கம். தேவைப்பட்டதை நாமாக தேடி எடுத்துகொள்ளவேண்டும். கமல் ஒரு நூலகம்.
விக்ரம் படத்துல ஒரு காட்சி இப்படி வரும்... சத்யராஜ் இருக்கும் இடத்தை ஒருவரிடம் கமல் விசாரித்து கொண்டிருப்பார் அப்போது 'அந்த நபர் 14-வது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்வார் பிற அதிகாரிகள் அப்போது சொல்வார்கள்... அவனிடமிருந்து ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று. கமல் இப்படி சொல்வார் நான் ஒன்றை தெரிந்து கொண்டேன் இது போன்ற விசாரணைகளை 14 -வது மாடியில் வச்சு பண்ண கூடாதுன்னு.
இது போன்ற சாதரண காட்சியாக இருந்தாலும் அதன் மூலம் யாருக்காவது எதையாவது சொல்லிகொடுப்பதே அவரின் வழக்கம். தேவைப்பட்டதை நாமாக தேடி எடுத்துகொள்ளவேண்டும். கமல் ஒரு நூலகம்.
Post a Comment