ஆஸ்கர் விருதுக்கு போன கமல் படங்கள்!


ஆஸ்கர் விருது என்பது ஹாலிவுட்காரர்களுக்கு மட்டுமே என்பது தெளிவாக எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஆஸ்கர் விருதை அமெரிக்கர்கள் தவிர்த்து மற்றவர்கள் பெற முடியாது. ஹாலிவுட் நடிகரான மார்லன் பிராண்டோவை விட சிறந்த நடிகர் என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட நடிகர் திலகம் சிவாஜிகணேசன் போன்ற திறமையான நடிகர்கள் இந்தியாவிலேயே இருந்திருக்கிறார்கள். ஆஸ்கர் விருது பெற்றவர்கள் தான் சிறந்த நடிகர்கள் என்ற அளவுகோல் பொய் என்பதற்காக இதை சொல்கிறோம்.

ஹாலிவுட் தவிர்த்து மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு ”சிறந்த அயல்நாட்டு மொழிப்படம்” என்றொரு விருதினை ஆஸ்கர் விருது கமிட்டிக்குழு வழங்கி வருகிறது. இந்தியாவிலிருந்து அவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அதிகப் படங்களில் நடித்தவர் வேறு யார்? உலகநாயகன் கமல்ஹாசன் தான். 1985ஆம் ஆண்டு தான் முதன்முறையாக ஒரு தென்னிந்தியத் திரைப்படம் இந்த விருதுக்கு இந்தியா சார்பில் சென்றது. அது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து, கே.விஸ்வநாதன் இயக்கிய "சுவாதி முத்யம்" என்ற தெலுங்கு திரைப்படம். இத்திரைப்படம் ஆஸ்கருக்கு சென்றது மட்டுமல்லாமல் அந்த ஆண்டின் ஆசியாவின் சிறந்த திரைப்படம், ஆசியாவின் சிறந்த நடிகர் விருதுகளையும் வென்றது.

அப்படத்தைத் தொடர்ந்து உலகநாயகன் நடித்த நாயகன், தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஹேராம் ஆகியப் படங்களும் இந்தியா சார்பில் அவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள்.

7 comments:

Sridhar V said...

சுவாதி முத்யம் பற்றி சொல்வதால் இந்த தகவலை இங்கு பதியலாம் என்று நினைக்கின்றேன். சுவாதி முத்யத்திற்கும் Tom Hanks-ன் Forrest Gump-கும் உள்ள ஒத்துமைகளைப் பற்றி நிறைய பேசலாம். இருங்கள்... இருங்கள்... உடனே plagarism என்று ஆரம்பித்து விடாதீர்கள். சுவாதி முத்யம் வெளியானது 1985. Forrest Gump நாவலாக வெளி வந்தது 1986. படமாக வெளி வந்தது 1994. அகாடமி அவார்ட்களும் வாங்கியது.

ஆக இங்கிருந்தும் சில கதைகள் ஏற்றுமதி ஆகியிருக்கின்றன என்பதற்கு இது ஒரு சாட்சி :-)

முரளிகண்ணன் said...

ஆஸ்காரை விட சிறந்த விருதான கேன்ஸ் விருதை தன் பொன்விழா ஆண்டில் மர்மயோகி படம் மூலம் பெற வாழ்த்துவோம்

Unknown said...

எங்கிட்ருந்து இந்த போட்டோ எல்லாம் உங்களுக்கு கிடைக்கிறது?

மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் !

Anonymous said...

Sivaji - over acting - I am not sure why we always talk about him as a great actor. He has acted well in few movies like Devar Magan. But in all his older movies, jeez he acts TOO well.

Anonymous said...

Nichayam oscar varum indhiyavukku. Oscar mattumalla microsoft madhiri hollywood tamil naadukku vandhaalum aaacharyam illai. Kamal irukiraare hollywood vandhaalum perusa per irukadhu adhukku :)

Anonymous said...

"ஹாலிவுட் நடிகரான மார்லன் பிராண்டோவை விட சிறந்த நடிகர் என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட நடிகர் திலகம் சிவாஜிகணேசன் போன்ற திறமையான நடிகர்கள் இந்தியாவிலேயே இருந்திருக்கிறார்கள்." - அறிஞர் அண்ணா எப்போது திரை விமர்சகர் ஆனார்? அறிஞர் அண்ணா எப்போது திரை விமர்சகர் ஆனார்? மார்லொன் ப்ரான்டொ படஙளை எல்லாம் பார்த்துவிட்டு சொன்னாரா?

Anonymous said...

ஆஸ்கர் விருதுகள் குறித்த கமலின் கவலைகள் சீ...சீ இந்தப் பழம் புளிக்கும் ரகத்தைச் சேர்ந்தவை.தமிழில் மிக மோசமான ஒரு நோய் இருக்கிறது அது..யாரையும் விமர்சிக்கக் கூடாது எம்.ஜி.ஆர் சிவாஜியா அவர்களை விமர்சிக்கக் கூடாது.அவர்கள் விமர்சனன்ப்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.அது போல இப்போது கமலும் ரஜினியும்.
என்னைப் பொருத்தவரையில் விமர்சங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கிற எதுவும் அழுகி நாறிப்போகும்...
சிவாஜிகணேசனின் நாடக பாணியிலான வசன உச்சரிப்பும் நடிப்பும்.விரைவில் அலுப்பை ஏற்படுத்தி விடும்.மர்லன் பிராண்டோவையும் சிவாஜியையம்்ஒப்பிட்டுப் பேசுவது மகா அபததம்.ஆஸ்கர் விருக்களில் வெள்ளை நிற்வெறி இருப்ைதை மறுக்க முடியாது.ஆனால் அதற்கு நாம் தகுதியாக இல்லாமலேயே ஆஸ்காரை புளிக்கும் என்று சொல்வது எவளவு பெரிய காமெடி..தெற்கில் மோகன்லாலைக் கூட இன்னும் கடந்து போக வில்லை கமல் அப்புறம் எங்கே ஆஸ்கார் வாங்குவது.சகலகலா வல்லவனில் தொடங்கி தசாவதாரம் வரை எந்தப் படம் ஆஸ்கருக்கு தகுதி என்று யாராவது சொல்ல ம்டியுமா?