உலகநாயகன் குறித்த சில சிறப்புத் தகவல்கள்!

சொந்த ஊர் - மானா மதுரை தாலுகா, பரமக்குடி

தந்தை பெயர் - வக்கீல் டி. ஸ்ரீனிவாசன்

பிறந்த தேதி - நவம்பர் 7ந் தேதி 1954

அண்ணன்கள் - சாருஹாசன், சந்துருஹாசன்

சகோதரி- நளினி

தனது 4 வயதில் "களத்தூர் கண்ணம்மா" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதியில் நடித்தார்.

கமலஹாசன் நடித்த முதல் நாடகம் - அப்பாவின் ஆசை

நடன அரங்கேற்றம் - 1968 ஆர்.ஆர். சபா

நடன ஆசிரியர் - என்.எஸ்.நடராஜன்

ஆரம்பம் முதலே கமலஹாசன் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

16 வயதினிலே - கிராமத்து சப்பானி வாபன்

ராஜ பார்வை - கண் தெரியாத குருடன் வேடம்

சலங்கை ஒலி - சிறந்த நடன கலைஞன்

சுவாதி முதியா(தெலுங்கு)-வெகுளி வேடம்

இந்தியன் - வயதான சுதந்திர போராட்ட கிழவர் வேடம்

அவ்வை சண்முகி - பெண் வேடம்

தசாவதாரம் - பத்து வேடங்கள்

இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் கமலஹாசன் தனது புதிய படமான மருத நாயகத்திற்கு தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார். தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுப்படம் இது.

(நன்றி : மாலைமலர்)

3 comments:

கோவி.கண்ணன் said...

உலகநாயகன் பற்றிய செய்திகளுக்கான் புது வலைத்தளத்திற்கு வாழ்த்துகள்

Kanchana Radhakrishnan said...

கமலி நடிப்புக்கு மணிமகுடமாய் திகழ்வது 'அன்பே சிவம்' தான்.
மற்ற மறக்கமுடியா பாத்திரங்கள்
ராஜபார்வை.
மஹாநதி
தேவர் மகன்
குணா
சிகப்பு ரோஜாக்கள்
வறுமையின் நிறம் சிவப்பு
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நடிகர் திலகமா..கமலா நடிப்பில் சிறந்தவர் யார்?
என்னைபொருத்தவரை நியாயத்தராசில் கமிலின் தட்டு சற்று கீழ் இறங்கியுள்ளது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//நடிகர் திலகமா..கமலா நடிப்பில் சிறந்தவர் யார்?
என்னைபொருத்தவரை நியாயத்தராசில் கமிலின் தட்டு சற்று கீழ் இறங்கியுள்ளது.//

நடிப்பில் சிவாஜி சிறந்தவராகவே இருந்தாலும் அவர் காலத்திய இயக்குநர்கள் உடல் மொழியை வெளிக்காட்டக் கூடிய,பார்வை ஊடகத்தின் வழியே கதை சொல்லும் பாங்கான சினிமாவை வளர்க்காத காரணத்தால்,அவரால் திரைப் படங்களிலும் ஒரு தேர்ந்த நாடக நடிகராகத்தான் வெளிப்பட முடிந்தது.
விதிவிலக்காக சில படங்களில் மட்டுமே காட்சிப்படுத்துகை சார்ந்ததான உடல் மொழி நடிப்பில் அவர் தேர்ச்சியைக் காட்ட முடிந்தது.

ஆனால் கமலஹாசன் தன்னுடைய இயல்பான உலகசினிமாவை நோக்கிய ஆர்வத்தால் இந்திய சினிமா தாண்டிய பார்வையைக் கொண்டிருந்ததால்,இரைச்சலான நாடகபாணி நடிப்பை எவ்வித வழிகளால் மேம்படுத்த முடியும் என்று சிந்தித்து நடிப்பில் பல புதிய பரிமாணங்களைக் கொண்டுவந்தவர்;அந்த நோக்கில் சிவாஜியிடமிருந்தே தேவர் மகனில் சிறந்த,உடல் மொழி சார்ந்த,அற்புதமான underplay நடிப்பைக் கொண்டுவந்தவர் என்ற வகையில் இன்றளவும் வியக்க வைப்பவர்.

அவரிடம் அத்தகு திறமை இருக்கிறது என்பதை 70 களிலேயே இனம் கண்டவர் சுஜாதா.இந்த இளைஞர்(கமலுக்கு 23 வயதிருக்கும் போது)எதிர்கால தமிழ்சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நபராக இருப்பார் என்று க.க.பக்கத்தில் முன்னுரைத்தவர் அவர்.

இத்தகு அற்புதத் திறமைசாலியே,புணர்வைக் குறிக்கும் இடுப்பசைவை நடனக் காட்சிகளில் தமிழ் சினிமாவில் புகுத்தியவர் போன்ற விதயங்கள் கூடவே நினைவில் வருவதும் தான் விசனிக்க வைப்பன;அதற்கு முன்பு எந்த தமிழ் நடிகரும் அவ்வித அசைவுகளை தமிழ் சினிமாவில் காட்டியதில்லை(என்றே நினைக்கிறேன்).