வசனகர்த்தா கமல்

நடிகர் கமலுக்கு இணையாக என்னை கவர்ந்தவர் வசனகர்த்தா கமல். தேவர்மகன்,குருதிப்புனல், ஹேராம், விருமாண்டி மற்றும் தசாவதாரத்தில் அவர் எழுதியிருக்கும் வசனங்கள் எல்லாமே அருமை. அதிலும் தேவர்மகனில் எல்லாமே பஞ்ச் டயலாக்தான்

‘உனக்குள்ள நடமாடிக்கிட்டிருக்க மிருகம் எனக்குள்ள தூங்கிக்கிட்டிருக்கு எழுப்பிடாத’

நம்மள சுத்தி உள்ளவங்கள காப்பாத்தனும்னா நாம மொதோ தெம்பாயிருக்கணும்

அவன் மெதுவாத்தான் வருவான்

தேவனா இருக்கிறது முக்கியமா? மனுசனா இருக்கிறது முக்கியமா?

போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா

குருதிப்புனல்

நாம் இதை பிள்ளைங்களுக்கு கத்துக்கொடுக்கலைன்னா சாட்டிலைட் டிவி இதை தப்புத்தப்பா கத்துக்கொடுத்துரும் (1995- 96 ல் எழுதப்பட்டது)

எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கு

வீரம்னா என்னான்னு தெரியுமா? பயமில்லாதது மாதிரி நடிக்கிறது


ஹேராம்

ஒநாயா இருந்து பார்த்தாத்தான் அதனொட நியாயம் தெரியும்


விருமாண்டி

ஒருத்தன் சந்தோஷமா இருக்கும் போது அதை உணர்றதில்ல.
(இது எனக்கு மிக மிக பிடித்த வசனம்)

நீங்கள்ளாம் மூணுசாமிய கும்பிடறவங்க. நான் ஐஞ்சு சாமிய கும்பிடறவன்

ஆசையால போர் போட்டு தண்ணிய உறிஞ்சிக்கிட்டே இருந்தா எப்படி?. அப்புறம் 100 200 அடின்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்
(இப்படம் முக்கிமாக சுற்றுச்சூழல் பிரச்சினையையே பேசியது)

மன்னிக்கிறவன் மனுஷன் மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்


தசாவதாரம்

பூமி ஒண்ணுதான் இதயும் அழிச்சுட்டீங்கன்னா அப்புறம் சந்திரனுக்கா போவீங்க

கடவுள் இல்லைன்னா சொன்னேன் இருந்திருந்தா நல்லாயிருக்கும்

உங்களுக்கு புரியுற பாஷையில இவர் சொல்வார், பணம்


மர்மயோகியிலும் இது போன்ற வசனங்களுக்காக காத்திருக்கிறோம்

18 comments:

சரவணகுமரன் said...

அருமையான வசனங்கள்.


//போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா

இது கமல் சொன்னதா? நான் இவ்ளோ நாள் வடிவேலு இல்லன்னு நினைச்சிட்டு இருந்தேன். :-)

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் அருமையான தத்துவங்கள்! குறிப்பா..
//ஒருத்தன் சந்தோஷமா இருக்கும் போது அதை உணர்றதில்ல.//

//மன்னிக்கிறவன் மனுஷன் மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்//

Samuthra Senthil said...

//மர்மயோகியிலும் இது போன்ற வசனங்களுக்காக காத்திருக்கிறோம்//

ஒன்றல்ல... ரெண்டல்ல.. நிறையவே கைவசம் வைத்திருக்கிறாராம் உலக நாயகன். மர்மயோகி படம் அவரது கனவுத்திட்டம். அவரது கருத்துக்களை பிரதிபலிக்கும் படமாகத்தான் உருவாகும் என்று நம்பலாம்.

சிறில் அலெக்ஸ் said...

கலக்கல் கலெக்ஷன்.

Bleachingpowder said...

குருதி புணலை விட்டுடீங்களே.. கமலும் நாசரும் சந்திக்கும் எல்லா காட்சிகளிலும் ஊரையாடலில் தீப்பொறி பறக்கும்.

மோகன் கந்தசாமி said...

அட ஆமாம்ப்பா! குருதிப்புனல் -ல விட்டுட்டீங்களே!

முரளிகண்ணன் said...

மன்னிக்கவும் குருதிப்புனல் விடுபட்டுவிட்டது. சேர்த்து விடுகிறேன்

முரளிகண்ணன் said...

சரவண குமரன், ராமலக்ஷ்மி,சிறில் அலெக்ஸ்,சினிமா நிருபர், பிளீச்சிங் பவுடர் மற்றும் மோகன் கந்தசாமி வருகைக்கு நன்றி

ஸ்ரீமதன் said...

i like the following dialogue very much in kurudhi punal

"dhairiyamgaradhu enna theriyuma?bayapadadha maadhiri nadikiradhu"

sorry for english typing as typing this from office:-)))

Anonymous said...

"நந்து" பேசுகிற கவிதைய மறந்துட்டீங்களே!

"சிலந்திகள்.... பெண்கள்!

ஆண்கள்.... பூச்சிகள்!!!"

இது எத்தனை உண்மையான விஷயம். மாட்டிக் கொண்டு விழிக்கும் பொழுது ஆண்கள் புரிந்து கொள்வது இந்த கசப்பான உண்மையத்தான்.

வசனம் எழுதுவதிலும் கமல்ஜிக்கு இணை யாரும் கிடையாது.

Dear Kamalji Fans ! Also visit www.allthingskamal.info, "a complete BLOG of KAMALJI in English"

முரளிகண்ணன் said...

வருத்தப்படாத வாலிபரே வருத்தப்படவேண்டாம் (ஆங்கில தட்டச்சுக்கு). எடுத்துக்கூறியதற்க்கு நன்றி

கோபிநாத் said...

சூப்பர் வசனங்கள் ;))

\\\தைரியம்னா என்னான்னு தெரியுமா? பயமில்லாதது மாதிரி நடிக்கிறது\\\

இதுல ஒரு டவுட்டு...தைரியம் வருமா இல்லை வீரம்ன்னு வருமா!?

பரிசல்காரன் said...

எனக்கு மிகவும் பிடித்த அவர் சொன்ன வாசகம் (நிஜ வாழ்வில்)..

"நான் கக்கூஸ் கழுவறவனா இருந்திருந்தாலும், அதுல நான்தான் நம்பர் ஒன்-ணு சொல்ற மாதிரி இருந்திருப்பேன்!"

Moreover, he is proving it!

கோபிநாத் said...

\\பரிசல்காரன் said...
எனக்கு மிகவும் பிடித்த அவர் சொன்ன வாசகம் (நிஜ வாழ்வில்)..

"நான் கக்கூஸ் கழுவறவனா இருந்திருந்தாலும், அதுல நான்தான் நம்பர் ஒன்-ணு சொல்ற மாதிரி இருந்திருப்பேன்!"

Moreover, he is proving it!
\\

ஆகா..பரிசல் சூப்பருங்க..;)

Athisha said...

\\
தைரியம்னா என்னான்னு தெரியுமா? பயமில்லாதது மாதிரி நடிக்கிறது
\\

அது தைரியம் இல்ல வீரம்

அதே மாதிரி ஆளவந்தான்ல கூட நிறைய இருக்கு,

மகாநதிய விட்டுட்டீங்க...

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கோபிநாத், பரிசல்காரன். அந்த வசனம் கமலின் தாயார் அவரிடம் கூறியது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
"நீ கக்கூஸ் கழுவினாலும் பரவாயில்ல உலகத்துலேயெ உன்னை மாதிரி கக்கூஸ் கழுவுறவன் யாரும் இல்லேன்னு பேரு வாங்கணும்" என்றாராம்

முரளிகண்ணன் said...

அதிஷா அந்த வசனங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே உதவியாயிருக்கும்

Anonymous said...

kurudhi punal vasanangal ellam arumai. Andha interogation scene and the scene when nasar is taken for an encounter ellame arumai. He is such a great person. unmayaai sonnal ennai tamil mozhi pakkam thirupiyya mukkiya pangu kamalukku undu. avar medai pechugal, pettigalalil enadhu viyappugale enadhu valaipoo thodanga vidhaiyittana