தசாவதாரம் சார்ந்த மலிவு விளம்பரங்கள்

தசாவதாரம் ஒரு பார்ப்பனீய மலம், கமலின் பிராமணிய முகம், தசாவதாரம் கமலின் மாஸ்டர்பேஷன் போன்ற தசாவதாரம் சம்மந்தமான எதிர்மறை விமர்சனங்களை படித்து ரசித்து இருக்கிறேன். ஏனென்றால் இவர்கள் விவாதம் செய்யும் நோக்கோடு எழுதுபவர்கள். தாங்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமான வாதங்களை இவர்கள் முன் வைக்கிறார்கள். இது போன்ற கூர்மையான ஆரோக்கியமான விமர்சனங்கள் தான் கமல் போன்ற கலைஞனை மெருகேற்றி வருகின்றன. இதே மாதிரி கமல் தசாவதாரத்தில் பெரும்பாண்மை மதத்தை கிண்டல் பண்ணுகிறார் ஆனால் சிறுபாண்மை மதங்களை ஆதரிக்கிறார் என்று மற்றொரு தரப்பு சொல்கிறது. இது போன்றவர்களுக்கு ஒவ்வொரு கமல் ரசிகனும் பதில் சொல்லியே ஆக வேண்டும்

இன்னொரு வகை விமர்சகர்கள் என்னை போன்றவர்கள். எதனால் தங்களுக்கு தசாவதாரம் பிடித்து இருக்கிறது என்று அதற்கான வாதங்களை முன் வைத்து எழுதுகிறோம். ஆனால் இப்படி எந்த வாதத்தையும் முன் வைக்காமல் தசாவதாரம் ஒரு குப்பை என்று போகிற போக்கில் ஒரு மூத்த வலைப்பதிவர் எழுதி இருக்கிறார். அவருடைய வாதத்தையும் அவர் பாணியில் மொக்கை என்று கூறி ஒதுக்கிவிட முடியும் ஆனால் அப்படி செய்து அவருகும் நமக்கும் வித்தியாசம் இல்லை என்று காட்ட விரும்பவில்லை. அவர் படம் பற்றி பெரிதாக எதுவும் குறை கூறாததால் எனக்கும் அதற்கான பதில்கள் இல்லை. ஆனால் அவர் பதிவு மற்றும் பின்னூட்டங்களை பார்க்கும் போது அவருடைய பதிவு மலிவு விளம்பரம் தேடும் ஒரு யுக்தி என்று மட்டும் புரிகிறது

அவருடைய முதல் பின்னூட்டத்திலேயே தசாவதாரம் அடிபொடிகள் வந்து தன்னை கும்முவார்கள் என்று எதிர்பார்த்து காத்து கிடப்பதாக சொல்லி இருக்கிறார். இதிலி இருந்தே தெரிகிறது அவருடைய மனோபாவம். அடுத்து சொல்கிறார் யாரும் சுப்பிரமணியபுரம் பற்றி பேசவில்லை அப்பவும் தசாவதாரம் தான் பெருசாக தெரிகிறது என்று. சுப்பிரமணியபுரம் பற்றி பின்னூட்டம் வர வேண்டுமானால் அதை பற்றி மட்டும் எழுதி இருக்கலாம் ஆனால் மலிவு விளம்பரம் வேண்டி தானே தசாவதாரத்தையும் தன் பதிவில் இணைத்தார்

சந்திரமுகி அந்நியன் போன்ற படங்கள் உளவியல் சம்மந்தமான கருவை கொண்டு வெளிவந்த படங்கள் அதனால் அவை இரண்டையும் கம்பேர் பண்ணி எழுதலாம் ஆனால் இவர் சுப்பிரமணியபுரம் படத்தையும் தசாவதாரத்தையும் கம்பேர் பண்ணியதில் எந்த விவாத நோக்கமும் தெரியவில்லை. ஆனால் அவருடைய நோக்கம் மட்டும் நிறைவேறி இருக்கிறது

10 comments:

வந்தியத்தேவன் said...

தசாவதாரம் பற்றி எழுதினால் அல்லது ஏதாவது ஒரு பதிவிற்க்கு தசாவதாரம் என தலைப்பிட்டு எழுதினால் தமிழ்மணம் சூடான இடுகைகளுக்கும் தங்களுக்கு விளம்பரம் தேடும் உத்திதான் இது. கலைஞானி தன் பாட்டிற்க்கு அடுத்தபடமான மர்மயோகியில் இறங்கிவிட்டார். ஆனால் இந்த கமல் எதிர்ப்புவாதிகள் மட்டும் இன்னமும் தங்கள் அடுத்தவேலையைத் தொடங்கவில்லை. இதே எதிர்ப்பாளர்கள் தான் குசேலனுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். இதெல்லாம் அரசியலில் சகஜம்

Anonymous said...

Well said Maruthanayagam.

I accept ur views. U gave nice reply & real intention of these kind of people.

Anonymous said...

100% சரியான கருத்து

அன்பு said...

இந்த மலிவு மசுரான்கள் எப்போது தான் திருந்துவார்களோ

rapp said...

super, correct arguments

வால்பையன் said...

என் பார்வையில் கமல் தன் கொள்கையிலிருந்து சிறிதும் மாறவில்லை.
கமல் ஒரு ஆத்திகவாதி என்று சப்பை கட்டு கட்டுபவர்களுக்கு அதிலேயே
பதில் சொல்லப்பட்டு உள்ளது,
அந்த படத்தில் தீவிர ஆன்மீகவாதியாக காட்டப்பட்டுள்ள பாட்டி ஒரு மனநிலை பாதிக்க பட்டவர்,
(ஆன்மீகவாதிகள் வாய்க்கு புது அவுல்)
:)

வால்பையன்

Anonymous said...

இப்பதிவின் மூலம் உங்களை நீங்களே விளம்பரப்படுத்தும் உத்திதான் தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்ட மூத்த பதிவர் (உங்களுக்குமுன் பதியத்தொடங்கிய பதிவர் என்பதால் அண்ணாச்சியை அவ்வாறு விழித்தீர்கள் என நினைக்கிறேன்) எழுதும் பதிவுகளில் அனேகமான பதிவுகள் "சூடான இடுகைகள்" இடம் பெறுவது வழக்கம். அவர் இருதினங்களுக்குமுன் எழுதிய "இரட்டை மகிழ்ச்சியும் நன்றியறிவித்தலும்" பதிவும் சூடானது ஏன்?

குப்பையை குப்பை எண்றால் குப்பை வண்டிக்கு கோபம் வருவது ஆச்சரியம் அளிக்கிறது

-ஒரு கனேடிய தமிழ்மண வாசகன்

Udhayakumar said...

//ஆனால் சிறுபாண்மை மதங்களை ஆதரிக்கிறார் என்று மற்றொரு தரப்பு சொல்கிறது. இது போன்றவர்களுக்கு ஒவ்வொரு கமல் ரசிகனும் பதில் சொல்லியே ஆக வேண்டும்
//

எங்கப்பா சொன்னீங்க????? இணையம் முழுவதும் தேடி அலுத்து விட்டது.

manikandan said...

சொல்பவர்களை உங்களால் கட்டுப்படுத்த இயலாது. பிறகு எதற்கு இந்த முயற்சி ?

மருதநாயகம் said...

//இப்பதிவின் மூலம் உங்களை நீங்களே விளம்பரப்படுத்தும் உத்திதான் தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்ட மூத்த பதிவர் (உங்களுக்குமுன் பதியத்தொடங்கிய பதிவர் என்பதால் அண்ணாச்சியை அவ்வாறு விழித்தீர்கள் என நினைக்கிறேன்) எழுதும் பதிவுகளில் அனேகமான பதிவுகள் "சூடான இடுகைகள்" இடம் பெறுவது வழக்கம். அவர் இருதினங்களுக்குமுன் எழுதிய "இரட்டை மகிழ்ச்சியும் நன்றியறிவித்தலும்" பதிவும் சூடானது ஏன்?//

//'ஒண்ணுக்கடிக்க' வரீகளா? - Warning: Adults only //

அந்த மூத்த பதிவரின் தரத்தை தெரிந்து கொள்ளவும்