தசாவதாரமும் ‍ தரம் தாழ்ந்த விமர்சனங்களும்

அப்படி என்னதான் கமல் மீதும், அவரது படங்களின் மீதும் கோபமோ? தங்களின் இஷ்டத்திற்க்கு வசைபாடுகின்றார்கள். இதை ஏன் செய்யவில்லை, அதை ஏன் செய்தார், அது எப்படி அப்படி வரலாம், இது ஏன் இப்படி வரவில்லை, இதுவா உலகத்தரம்...

1. முதல் கேள்வி தமிழே தெரியாத ஜாக்கிஜானை ஏன் பாடல் வெளியிட்டு விழாவிற்க்கு அழைக்க வேண்டும்?

ஜாக்கிஜான் திரைப்ப‌ட‌த்துறையினைச் சார்ந்த‌வ‌ர்தானே, த‌னது துறையைச் சார்ந்த ஒருவ‌ரைத்தான் க‌ம‌ல் அழைத்துள்ளார். சினிமா என்ப‌து ஒரு தொழில் அதிலும் லாப‌ம் வேண்டும் இல்லை என்றால் அதனைச் சார்ந்துள்ள‌வர்க‌ள் உண‌விற்க்கு எங்கு போவது? உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌ ஒரு ந‌ப‌ரை அழைத்தால் த‌ன‌து ப‌ட‌த்திற்க்கு ஒரு உலக‌ளாவிய‌ முக‌வ‌ரி கிடைக்கும், அந்த‌ திரைப் ப‌ட‌த்தினை உலகம் முழுவது எடுத்துச் செல்ல‌ ஜாக்கிஜான் வழிவ‌குப்பார் என்ப‌த‌னால் அழைத்துதிருக்க‌லாம். ஒலிம்பிக் டார்ச்சை விளையாட்டு வீர‌ர்க‌ளின் கைக‌ளில் கொடுக்காம‌ல், ந‌டிகைக‌ளிட‌ம் கொடுத்து ஜொள்ளுவிடும் அர‌சிய‌வாதிக‌ளைப் ப‌ற்றி எழுதி இருந்தால் ந‌ன்றாக இருந்திருக்கும்.

2. ப‌த்து வேட‌ச் சாத‌னைக்காக‌ ம‌ட்டுமே இந்த‌ப் ப‌ட‌ம்/ ஏன் ப‌த்து வேட‌ங்க‌ளிலும் க‌ம‌ல் ம‌ட்டுமே ந‌டிக்க‌ வேண்டும்?

ச‌ரிதான் இது சாத‌னைக்காக‌வே எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ம் தான், ஏன் சாத‌னைக‌ள் முறிய‌டிக்க‌ப் ப‌ட‌க்கூடாதா? இதைவிட‌ ஒரு ந‌ல்ல‌ திரைக்கதை(முடிந்தால்?) அமைத்து அதில் பதினோறு வேடங்களில் விக்ர‌மோ, சூரியாவோ ந‌டித்தால் க‌ம‌ல் என்ன‌ த‌டுத்து விட‌வா போகிறார்? ப‌த்து வேட‌ங்க‌ளிலும் புக‌ழ் பெற்ற‌ ந‌டிக‌ர்க‌ளை ந‌டிக்க‌ வைத்திருந்தால் த‌யாரிப்பாள‌ர் பாடு பெரும்பாடாகியிருக்கும்.

3.ப‌ட‌ம் முழுவ‌து ஆங்கில‌ வாடை.

பின்ன‌ர் புஷ், பிள‌ச்ச‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் த‌மிழிலா பேச‌ முடியும்? அப்ப‌டி பேசி இருந்தால் க‌ம‌லுக்கு அறிவே இல்லை எப்ப‌டி ஆங்கில‌க்கார‌ர்க‌ள் த‌மிழில் பேச‌ முடியும் என‌க் கூறி ஒரு கூட்ட‌மே கிள‌ப்பி இருக்கும்.

4.ஒரு அன்பர் ப‌ர‌த், கோவை குணா போன்றவர்களை க‌ம‌லுட‌ன் ஒப்பிட்டு இருக்கிறார்.

ந‌ல்ல‌வேளை அந்த அன்பர் இன்னும் போக்கிரி ப‌ட‌ம் பார்க்க‌வில்லை என நினைக்கிறேன் இல்லையென்றால் அதில் சுற்றும் விழிச் சுட‌ரே பாட‌லுக்கு வ‌டிவேலு ஆடுவதைப் பார்த்து பேசாம‌ல் அவ‌ரையே க‌ஜினியில் ந‌டிக்க‌வைத்திருக்க‌லாம் என‌க் கூட‌ கூறி இருப்பார். ஒரு க‌தாப்பாத்திர‌த்தை ஏற்று ந‌டிக்கும் போது அதை போல‌வே தான் ந‌டிக்க‌ வேண்டும். நல்லவேளை க‌ம‌ல் தமிழ் தெரிந்த தெலுங்குக்கார‌ர் போல் மிமிக்கிரி செய்கிறார், விஞ்ஞானி போல் மிமிக்கி‌ரி செய்கிறார் என‌ குற்ற‌ம் சாட்டாம‌ல் விட்டன‌ரே அதுவ‌ரை ச‌ந்தோச‌ம்.

5. ப‌ட‌ம் முழுவ‌து ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கும் மேக்க‌ப்.

என‌க்கு தெரிந்த‌ ப‌ல‌ உல‌க‌த்த‌ர‌மான‌ ஆங்கில‌ ம‌ற்றும் ப‌ல‌ மொழிப்ப‌ட‌ங்க‌ளிலும் மேக்க‌ப் பூச‌ப்ப‌ட்ட‌து ந‌ன்றாகத் தெரிய‌த்தான் செய்கிற‌து. ப‌ட‌ங்க‌ளில் ய‌தார்த‌ம் என்ப‌து ஒரு அள‌விற்க்குத் தான் இருக்கும். அதையும் தாண்டி அது ர‌சிக்கும்ப‌டியாக‌ இருக்கிற‌தா என்ப‌து தான் கேள்வி. அதில் நிச்ச‌ய‌ம் த‌சாவ‌தார‌ம் வெற்றி பொற்ற‌தாகும்.

6.ஜ‌ப்பானிய‌ ர‌சிக‌ர்களைக் க‌வ‌ர‌ க‌ம‌ல் முய‌ற்சிக்கிறார்?

இந்த‌ மாதிரி ஒரு ஐடியா க‌ம‌லுக்கு முன்னமே தெரிந்திருந்தால் இன்னும் ப‌ல‌ நாட்ட‌வரைக் க‌வ‌ர‌ ஒரு இருப‌து பாத்திர‌ங்க‌ளை உருவாக்கி அதிலும் ந‌டித்திருப்பார். ந‌ல்ல‌வேளை அமெரிக்க‌ அர‌சிய‌லில் க‌ம‌ல் அடியெடுத்து வைக்கும் முய‌ற்சி தான் புஷ் வேட‌ம் என‌ காம‌டி ப‌ண்ணாம‌ல் விட்ட‌ன‌ரே.

க‌டைசியாக‌ க‌ம‌லுக்கு ஒரு வேண்டுகோள் இனிமேல் பெண்வேட‌மிட்டு ந‌டிக்காதீர், ஏனென்றால் அந்த‌ பெண் மார்பில் இருந்து ஏன் பால் வ‌ர‌வில்லை என‌க் கூட‌ கேள்வி வ‌ர‌லாம்

கொசுருச் செய்திக‌ள்:

1.த‌சாவ‌தார‌ம் அமெரிக்காவில் நாற்ப‌து பிரிண்டுக‌ளாக வெளியிட‌ப்ப‌ட்ட‌ முத‌ல் தென் இந்தியத் திரைப்ப‌டம்.
2. அமெரிக்காவில் த‌மிழில் ம‌ட்டும் 30 ந‌க‌ர‌ங்க‌ளில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து.
3. திரையிட்ட‌ மூன்று வார‌ங்க‌ளுக்குள் நூறு கோடி மேல் வ‌சூல் கிடைக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

10 comments:

Anonymous said...

For ur info; Producer Ascar Ravi invited Jackie for cd release function. Kamal didnt invited him.

Ravi invited the Vijay for the function. I thnk askar ravi may have the intention to ask Call sheet of Vijay. Kamal didnt invited anybody. the function arrangement were fully in the control of ravi. This is the truth.

வந்தியத்தேவன் said...

கமல்ஜியை கோவை குணா பரத்துடன் ஒப்பிட்டவர் அடுத்த பதிவில் தான் இன்னொரு நடிகனின் விசிறி எனச் சொல்கின்றார். இதிலிருந்து தெரியவில்லையா அவர் எந்த நோக்கத்துக்காக தசாவதாரத்தை கிண்டல் செய்கின்றார் என்று. அன்றைக்கே நம்மவர்கள் சொன்னார்கள் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று.

Shajahan.S. said...

யார் என்ன சொன்னாலும் நம்மவர் சாதனைகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வோம்.வீழ்வது யாராகிலும் வாழ்வது நாடாகட்டும்.
நம்மவரின் சாதனை நம் நாட்டுக்கு பெருமை சேர்க்கட்டும்.

butterfly Surya said...

No one can beat him in any way..

he is the only one "Ulaga Nayakan"..

Surya
Chennai
butterflysurya@gmail.com

புருனோ Bruno said...

//5. ப‌ட‌ம் முழுவ‌து ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கும் மேக்க‌ப்.//

அவ்வை சண்முகி, இந்தியன் படங்களுடன் ஒப்பிட்டால் இந்த படத்தில் ஒப்பனை (குறிப்பாக சில பாத்திரங்கள்) காலை வாரி விட்டது உண்மை.

//6.ஜ‌ப்பானிய‌ ர‌சிக‌ர்களைக் க‌வ‌ர‌ க‌ம‌ல் முய‌ற்சிக்கிறார்?//

இது உண்மையென்றாலும், இதில் என்ன தவறு. அவருக்கு திறமை உள்ளது. அவர் முயற்சிக்கிறார்.

கோபால் said...

அனானி அவர்களே,

தகவலுக்கு நன்றி, ஆனால் கேள்வி கேட்டது கமலை என்பதால் அவரது இடத்தில் இருந்து இதனை எழுதினேன்.

கோபால் said...

வந்தியத்தேவன் said...
"கமல்ஜியை கோவை குணா பரத்துடன் ஒப்பிட்டவர் அடுத்த பதிவில் தான் இன்னொரு நடிகனின் விசிறி எனச் சொல்கின்றார். இதிலிருந்து ..."


ஒரு நடிகனின் ரசிகன் என்ற ஒரே காரணத்தால் கண்ணை மூடிக் கொண்டு வேறு நடிகனைத் தவறாக பேசுவது மடத்தனம்.

கோபால் said...

புருனோ Bruno said...
//..அவ்வை சண்முகி, இந்தியன் படங்களுடன் ஒப்பிட்டால் இந்த படத்தில் ஒப்பனை (குறிப்பாக சில பாத்திரங்கள்) காலை வாரி விட்டது உண்மை.


உண்மைதான்... பாட்டி வேடத்தில் சொதப்பல் இருந்தது உண்மை தான், ஆனால் அதற்க்கு மேலும் சிறப்பாக அதனைச் செய்ய இயலாது என்பதே எனது கருத்து...



//...//6.ஜ‌ப்பானிய‌ ர‌சிக‌ர்களைக் க‌வ‌ர‌ க‌ம‌ல் முய‌ற்சிக்கிறார்?//

இது உண்மையென்றாலும், இதில் என்ன தவறு. அவருக்கு திறமை உள்ளது. அவர் முயற்சிக்கிறார்....

தேவை இல்லாமல் ஜப்பானியக் கதாபாத்திரம் திணிக்கப் படவில்லை, சுனாமி என்ற சொல்லுக்காகத்தான் அது இடம் பெற்றது. அப்படி கவர நினைத்திருந்தால் குட்டி நாட்டினை ஏன் கருத்தில் கொள்ள வேண்டும் சீன போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டவராய் நடித்திருக்கலாம் ரசிகர்களும் அதிக அளவில் கிடைத்திருப்பர். கோடிக் கணக்கில் ரசிகர் இருக்க கமல் இன்னும் ரசிகரைத்தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை

Thamira said...

பிரமாதம் கோபால்.இந்த மாதிரி கேள்விகளை எழுப்புவதே காழ்ப்புணர்ச்சி மற்றும் முட்டாள்தனத்தின் வெளிப்பாடு என்பதை புரிந்துகொள்ளமுடியும். சரியான கேள்விகள். தெளிவான பதில்கள். கேள்விகளை எழுப்பியவர்கள் பதில்களை புரிந்துகொள்ள முயற்சிக்கவே மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஏன் பத்துவேடத்தில் நடிக்க வேண்டும்?(அதுதானே பிளான்.. மடச்சாம்பிராணிகளா!)
மேக்கப் சரியில்லை (இதைக்கூறுபவர்கள் இதைவிட பெட்டராக மேக்கப் அமைக்கப்பட்ட ஆங்கிலப்படங்களை உதாரணம் கூறலாம்)
ஜப்பானிய ரசிகர்கள்?(ஜப்பானில் எத்தனை இடங்களில் திரையிடப்பட்டன என்பதைக்கூறலாம். ஜப்பான் ரசிகர்கள்தான் தமிழ்படத்தின் வெற்றிதோல்வியினை தீர்மானிப்பவர்கள் போலும்)
ஆங்கில வசனங்கள்..(யப்பா.. நா வரலைப்பா இந்த விளையாட்டுக்கு)

rajakvk said...

I invites kamal fans to read the following links. I hope knowing others opinions also helps.

http://pamaran.wordpress.com/2009/10/29/கலை-ஒலக-மாமேதை-ஒலகநாயகன்/

http://pamaran.wordpress.com/category/பகிரங்கக்-கடிதங்கள்/