தசாவதாரம் அலை தமிழகத்தை மட்டுமே அடித்தது என்று நினைத்தால் அது இந்தியாவையே ஆட்டிப்பார்த்திருக்கிறது.
கூகுள் இந்தியாவில் 2008ல் அதிகம் தேடப்பட்டவைகளில் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் படங்களின் வரிசையில் தேடப்பட்டவைகளில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது தசாவதாரம். இந்தியா முழுதும் தமிழகத்தை திரும்பிப்பார்க்கச் செய்திருக்கின்றது தசாவதாரம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. முதல் பத்து இடங்களை பிடித்ததில் தசாவதாரம் மட்டுமே தமிழ் படம் மற்ற அனைத்தும் ஹிந்திப்படங்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஹிந்தி பேசும் தொகையை கணக்கில் எடுக்கும் போது தமிழ் படம் ஒன்று இந்த அளவுக்கு முன்னிலையில் தேடப்பட்டுள்ளது சாதாரணமான விடயம் இல்லை. அதுவும் இரண்டாவது நிலையில்.
Most Popular Movies
1. Jodha Akbar
2. Dasavatharam
3. Singh Is King
4. Jaane Tu Ya Jaane Na
5. Jannat
6. Tashan
7. Ganesha
8. Fashion
9. Rock On
10. Race
# Bollywood is the king in India! It’s interesting to see that audience interest is going beyond song and dance sequences.
# Noteworthy is the # 2 slot retained by Tamil cinema.
Source: http://www.google.co.in/press/pressrel/20081210_zeitgeist2008.html
இதற்கு மேலும் ஏதாவது ஆதாரம் வேண்டுமா நம் தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதை நிரூபிக்க?
-ஸ்ரீ.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
Wow a great news. This movie has made huge change in Indian cinema. Congrats to Mr.Kamal
-Shiva,
Chennai
கலக்கல் ஸ்ரீ ;)
சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன.
வரும் டிசம்பர் 17 முதல் 27வரை.
சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ மற்றும் காஞ்சிபுரம் ஆகிய தமிழ்ப் படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன.
சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரயரங்குகளில் தினசரி 4 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன.
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்
10 நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூ500/- மட்டுமே..
தமிழ் பட உலகில் மேலும் ஒரு சாதனை. 5 மொக்கைப் படங்களை தயாரிக்காமல் ஒரு மிகச்சிறந்த படத்தினை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். 2 அல்லது 3 தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ஒரு படத்தினை தயாரிக்க முன்வர வேண்டும். மர்மயோகி நிறுத்தப்பட்டது வேதனை அளிக்கிறது. இதுவும் மருதநாயகம் போல் கதையாகிவிடுமோ? கமல் என்பதனால் மட்டும் இதைச் சொல்லவில்லை. எந்த ஒரு இயக்குனரோ அல்லது நடிகரோ தமிழ் பட உலகினை அடுத்த படிக்கு எடுத்துச்செல்ல தயாரிப்பு நிறுவனங்கள் உதவ வேண்டும், அப்படி உதவும் பட்சத்தில் தசாவதாரம் போல் பல படங்களைப் பார்க்க முடியும். தனது முயற்சியால் இன்னும் தமிழ் சினிமாவிற்க்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் உலகநாயகன் கமலுக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
The credit goes to Kamal for his devotion to cinema.
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.
hey bloggers.. why don't u try writing about Kamal the legend's singing talents.. specially in english, .. can u guys remember the song "Standed_On_The_Streets" from Nala Thamayandhi!!! i though it's an Englishmen's voice.. truly AMAZING
போட்டுத் தாக்கீட்டீங்க ஸ்ரீ, கலக்கல்
நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க
Post a Comment