சூப்பர் ஸ்டாரும், உலகநாயகனும்!
உலகநாயகன் கமல் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திரையுலகில் நுழைகிறார். கமலின் சில படங்களில் ரஜினி வில்லனாக நடித்து, தனது ஸ்டைலால் மக்களை கவர்ந்தார். குறிப்பாக பதினாறு வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த ரஜினியின் டயலாக் டெலிவரி அனைவரையும் கவர்ந்தது.
வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி பைரவி படம் மூலமாக தமிழில் ஹீரோவாகவும் ஆனார். படத்தின் போஸ்டர்களில் முதன்முதலாக ‘சூப்பர் ஸ்டார்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டது. அந்நேரத்தில் எஸ்.பி.முத்துராமனின் ஆடுபுலி ஆட்டம் படத்தில் கமல் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். வில்லனாக ரஜினியை நடிக்கவைக்க எஸ்.பி.எம். நினைத்தார். ஹீரோவாகிவிட்ட ரஜினியிடம் எப்படி கேட்பது என்ற தயக்கமும் அவருக்கு இருந்தது. விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி எஸ்.பி.எம்.மை தொடர்புகொண்டு “நீங்க இயக்குற படம், என் நண்பன் கதாநாயகனா நடிக்கிற படம், நானில்லாமலா? படத்தை தொடங்குங்க சார்.. நடிச்சிக் கொடுக்கறேன்” என்று பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார். இதுதான் ரஜினி!
அதன்பின்னர் ரஜினியும், கமலும் இணைந்து சில படங்களில் நடித்தார்கள். எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் முடிந்த நேரம் அது. எம்.ஜி.ஆர் அரசியலுக்கு போய்விட்டார், சிவாஜி தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். இரு ஹீரோக்களின் வெற்றிடத்தை கமலும், ரஜினியும் சரியாக இட்டு நிரப்பினார்கள். இனிமேலும் தாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். அதுபோல சேர்ந்து நடிப்பது தனித்தனியாக இருவரின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல என்று முடிவு செய்தார்கள். எதிர்காலத்தில் தங்கள் இருவரில் யாராவது ஒருவர் தயாரித்தே மற்றவர் நடிக்க வேண்டும் என்றும் பேசி வைத்துக் கொண்டார்கள். இன்றுவரை அந்த வாய்ப்பு அமையவில்லை.
இருவரும் தனித்தனியாக நடிப்பது என்று முடிவெடுத்த பின்னும் ரஜினி கதாநாயகனாக நடித்த ஒரு படத்தில் ஒரு சின்ன காமெடி வேடத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொண்டார். அது இருவரின் குருவான பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படம் ‘தில்லு முல்லு'. ரஜினி முதன்முறையாக நகைச்சுவை நாயகனாக நடித்த படம் அது.
பொதுவாக ரஜினி படம் ஓடும் நேரத்தில் கமல் படம் வெளியானால் அது தோல்வி அடையும் என்று ஒரு மூடநம்பிக்கை ரசிகர்களிடம் உண்டு. அது முற்றிலும் உண்மையல்ல. ராஜாதிராஜா வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது வெளியான அபூர்வசகோதரர்கள் வரலாற்று வெற்றி கண்டது. பாண்டியனோடு ஒரு தீபாவளிக்கு வெளியான தேவர்மகன் வெள்ளிவிழா கண்டது. பாபா படம் வெளியாவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாக வெளியான பஞ்சதந்திரம் ஆர்ப்பாட்டமில்லாமல் ஓடி வெற்றிவிழா கண்டது.
கமல் படங்கள் தயாரிப்பில் இருக்கும்போதே படம் எப்படி வந்து கொண்டிருக்கிறது என்று அப்படத்தின் இயக்குனர்களிடம் ரஜினி அடிக்கடி விசாரிப்பார். படம் தயாராக தயாராக அவ்வப்போது ‘ரஷ்' போட்டு பார்த்து மகிழ்வார். ரஜினியின் இந்த வழக்கம் தசாவதாரம் வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ‘கல்லை மட்டும்' பாடல் தயாரானதுமே கே.எஸ்.ரவிக்குமார் முதலில் சொல்லி அனுப்பியது ரஜினிக்கு தான். எடிட்டிங் ரூமில் அப்பாடலை பார்த்த ரஜினி எழுந்து நின்று வெகுநேரம் கை தட்டினார் என்று கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்.
கலைஞர் - எம்.ஜி.ஆர் நட்பு தமிழ்ச்சூழலில் மிக அதிகமாக சிலாகிக்கப்படும் நாற்பதாண்டு காலநட்பு. அந்நட்புக்கு பிறகு அதிகம் பேசப்படும் மிக நீண்டகால நட்பு ரஜினி - கமல் இருவருக்குமிடையே இருப்பது தான்.
ம்ம்... நாம் ரஜினியிடம் காணும் பெருந்தன்மை பல நேரங்களில் அவரது ரசிகர்களிடம் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை!
Labels:
Friendship,
Kamal,
Rajini
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வந்த இந்த இருநடிகர்களும் இத்தனை வருடங்களாக நல்ல நண்பர்களாக இருப்பதும் ஒருவரை மற்றவர் மதிப்பதும் உண்மையிலேயே மிகவும் பாராட்டத்தக்கதொரு செயல்.
இப்ப புதுசா நாலு படம் நடித்தவுடனே இந்த புது நடிகர்கள் செய்யும் அலும்பை தாங்கமுடியலெ.
// நாம் ரஜினியிடம் காணும் பெருந்தன்மை பல நேரங்களில் அவரது ரசிகர்களிடம் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை!//
உண்மை தான் ஒத்து கொள்கிறேன்.
ஆனால் ஒரு சந்தேகம், அவர்கள் (ரஜினி,கமல்) அவர்கள் வேலையை ஒழுங்காக செய்கிறார்கள், உங்களுக்கு மட்டும் எப்படி பல வேலைகளை ஒரே நேரத்தில் ஒழுங்காக செய்ய முடிகிறது. (என்ன உள்குத்துன்னு கண்டுபிடிங்க)
வால்பையன்
மனிதனோடு வெளியான நாயகன் சரித்திரமானது
hi, friends..
http:/www.jebamail.blogspot.com
this is my blog...
pls visit..
and keep touch with me.....
என்ன செய்ய சாமி ரெண்டும் ஒன்னாத்தான் சுத்துது. ஆனால் ரெண்டு கோவில் பூசாரியும், பக்தர்களும்தான் அடிச்சுக்குறாங்க. :-)))
நல்ல பதிவு.
//பாபா படம் வெளியாவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாக வெளியான பஞ்சதந்திரம் ஆர்ப்பாட்டமில்லாமல் ஓடி வெற்றிவிழா கண்டது//
ஒரு வேளை பதினைந்து நாட்களுக்குப் பின் ரிலீஸ் பண்ணி இருந்தால், இன்னும் நல்லா ஓடியிருக்குமோ?
//ம்ம்... நாம் ரஜினியிடம் காணும் பெருந்தன்மை பல நேரங்களில் அவரது ரசிகர்களிடம் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை! //
ஹ்ம்ம்.. போற போக்குல குத்திட்டு போயிட்டீங்க...
நான் பார்த்தவரை ரஜினி ரசிகர்கள் கமலின் படத்தை விரும்பியே பார்க்கிறார்கள். கமலை வெறுப்பதில்லை.. கமல் ரசிகர்களுக்குத்தான் ரஜினியின் வெற்றி கசக்கிறது..மறைமுகமாக பல விதங்களில் தாக்குகிறார்கள். :-(
//அதிகம் பேசப்படும் மிக நீண்டகால நட்பு ரஜினி - கமல் இருவருக்குமிடையே இருப்பது தான்//
இது உண்மையே.மகிழ்ச்சியளிக்கக்கூடியதே.
இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதை (!!!) நான் சிவாஜி வாயிலே ஜிலேபி என்று பதிவு எழுதியிருந்தேன்.. பார்த்தீர்களா?
நான் ஒரு ரஜினி ரசிகன்.. ஆனால் எனக்கு பல சமயங்களில் ரஜினியைவிட கமலைப் பிடிக்கிறது!! ஏனென்றால், ரஜினிக்கு அவரைவிட கமலைப் பிடிக்கும் என்று நான் உணர்ந்திருப்பதால்!
I think it is teh other way around - Kamal fans could never digest even a nice Rajini's movie.
Unmai dhaanga rendu perum nalla nanbargal. Rasigargal dhaan veenaaga adithu kolgiraargal. Idhai sollum naanum kamal edhirthu pechuvandhaal adithadiyil kooda irangi irukiren. Aaanal aarambippadhu naanaaga irukaadhu :) PPl ought to think with a broad mind. Let them do wat they are capable of. Lets not disturb them or compare them.
Post a Comment