2008 அதிகம் தேடப்பட்ட "தசாவதாரம்"

தசாவதாரம் அலை தமிழகத்தை மட்டுமே அடித்தது என்று நினைத்தால் அது இந்தியாவையே ஆட்டிப்பார்த்திருக்கிறது.
கூகுள் இந்தியாவில் 2008ல் அதிகம் தேடப்பட்டவைகளில் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் படங்களின் வரிசையில் தேடப்பட்டவைகளில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது தசாவதாரம். இந்தியா முழுதும் தமிழகத்தை திரும்பிப்பார்க்கச் செய்திருக்கின்றது தசாவதாரம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. முதல் பத்து இடங்களை பிடித்ததில் தசாவதாரம் மட்டுமே தமிழ் படம் மற்ற அனைத்தும் ஹிந்திப்படங்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஹிந்தி பேசும் தொகையை கணக்கில் எடுக்கும் போது தமிழ் படம் ஒன்று இந்த அளவுக்கு முன்னிலையில் தேடப்பட்டுள்ளது சாதாரணமான விடயம் இல்லை. அதுவும் இரண்டாவது நிலையில்.

Most Popular Movies

1. Jodha Akbar
2. Dasavatharam
3. Singh Is King
4. Jaane Tu Ya Jaane Na
5. Jannat
6. Tashan
7. Ganesha
8. Fashion
9. Rock On
10. Race

# Bollywood is the king in India! It’s interesting to see that audience interest is going beyond song and dance sequences.

# Noteworthy is the # 2 slot retained by Tamil cinema.

Source: http://www.google.co.in/press/pressrel/20081210_zeitgeist2008.html

இதற்கு மேலும் ஏதாவது ஆதாரம் வேண்டுமா நம் தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதை நிரூபிக்க?

-ஸ்ரீ.

"கமல் என் மகன்!" - பரமக்குடி சீனிவாசன்


சினிமாத்தன பரபரப்புக்கும் தனக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்பதை அடக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தது, அமைதியை அணிந்திருந்த அந்த வீடு.

"மகனுக்குத் தேசிய அவார்டு ("மூன்றாம் பிறை") கெடச்சிருக்கு ! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!"

"சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக தலைகால் புரியாம ஆடச் சொல்றீங்களா?" - பளிச்சென்று கேட்கிறார் பரமக்குடி அட்வகேட் டி. சீனிவாசன்.

"உங்க மகன் இந்த அளவுக்கு சூப்பர்ஸ்டாரா வர்வார்னு ஆரம்ப காலத்துல நெனச்சீங்களா?"

"நிச்சயமா ! நேத்துகூட " Oh My Boy, You Deserve OSCAR "னுதான் அவனுக்குத் தந்தி அடிச்சேன்!"

"இந்தப் பெருமையில், கமலை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பங்கு பற்றி...."

"கமல்கிட்டே அளவுக்கதிகமான திறமை இருக்கு. முன்னுக்கு வந்துட்டான். அவ்வளவுதான். மத்தபடி, பெரிசா லொல்லிக்கொள்ற அளவுக்கு நான் ஒண்ணும் செஞ்சிடலை !"

"சரி, சிறுசா சொல்லிக்கொள்ற அளவுக்காவது இருந்திருக்கணும்லே.....?"

"சினிமாத்துறையிலே பெரிய கலைஞனாகப் பேர் எடுக்கணும்கறத்துக்காக அவனுக்கு எல்லாவிதமான பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்தேன். ஆரம்ப காலத்துல என்கிட்டே வந்து, "நீங்க சொன்ன மாதிரி வாய்ப்பு வரலையே"னு அடிக்கடி வருத்தப்படுவான். அப்போதெல்லாம் அவன் மனச்சோர்வுக்கு டானிக் கொடுத்து, உற்சாகம் ஊட்டுவேன். "நான் தேய்ந்து அழிவனேயன்றி, துருப்பிடித்து அழியமாட்டேன்" என்கிற வாசகத்தைத் திருப்பித் திருப்பி நினைவுப்படுத்துவேன். அவனோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கிட்டு, என்னைவிட அதிகமா அவனுக்கு ஆதரவு கொடுத்த என் மனைவிக்குத்தான் இந்த வெற்றியில் பெரும்பங்கு உண்டு. !"

"கமல் வளர்ச்சியில் உங்க மனைவிக்குப் பெரும்பங்கு உண்டுனு சொல்றீங்க! ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வர முடியுமா?"

"எங்க குடும்ப நண்பராக நெருங்கிப் போயிருந்த டி.கே. சண்முகத்தின் நாடகத்துல அவன் நடிச்சிட்டிருந்த நேரம்; ஹாஸ்பிடலில் ஆபத்தான் என் மனைவி என்னைக் கூப்பிட்டு, "நான் சாகறத்துக்கு முன்னால டி.கே.சண்முகத்திடம் கொஞ்சம் பேசணும்"னு கெஞ்சினா. ஒரு டாக்ஸியில் கொண்டுபோய் அவர் வீட்டில் விட்டேன்.

'அய்யா ! நாங்க பணக்காரங்கதான். ஆனாலும், உங்க நாடகக் குழுவுல இருக்கிற ஏழைகளோட ஒரு ஏழையா என் மகனையும் சேத்துக்குங்க ! நீங்க சரின்னு சொல்லிட்டா, நான் நிம்மதியா உயிர் விடுவேன்'னு சண்முகத்திடம் சொன்னாள் என் மனைவி.

உடனே அவர், 'கவலைப்படாதீங்கம்மா! உங்க பையன் இனி என் நாடகக் குழுவுல மட்டுமல்ல; என் குடும்பத்தியேயும் ஒருவன். என் பிள்ளைகளுக்கு என் சொத்துல எவ்வளவு கெடைக்குமோ அதே அளவு அவனுக்கும் உண்டு'ன்னு உருக்கமாகச் சொன்னார்."

" 'அவார்ட் கெடைச்சதுல கமல் அப்பாவை விட அதிகமா நான் சந்தோஷப்படறேன்'னு கே. பாலசந்தர் சொல்லியிருந்தாரே... படிச்சீங்களா?"

"படிச்சேன்! உடனே கே.பி-க்கு ஒரு லெட்டர் எழுதிப் போட்டேன். 'நீங்க சொல்லியிருப்பது உண்மைதான். என்னை விட நீங்க அதிகம் சந்தோஷப்படுவதுதான் எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது'ன்னு எழுதினேன்.

ஆரம்ப காலத்துல கே.பி.யின் நாடகத்துல அவனை நுழைக்கிறதுக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினோம். முடியாமல் போயிடுச்சு. ஜெமினிதான் அவரிடம் திருப்பித் திருப்பி பிரஸ் பண்ணி அரங்கேற்றத்துல சான்ஸ் வாங்கிக் கொடுத்தாரு.!"

தன் மகனின் இந்த வளர்ச்சியில், கே.பியின் ரோலைப் பற்றி குதூகலத்துடன் நிறையவே பேசுகிறார் டி.எஸ்.

"கமல் சின்ன வயசுல புத்திசாலித்தனமான குறும்புச் சேட்டைகள் அதிகம் பண்ணியிருப்பாரே?"

"ஆமாம், எங்க வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களின் ஆக்டிவிட்டீஸை உன்னிப்பா கவனிப்பான். அவங்க போன பிறகு, அதே மாதிரி செய்து காட்டுவான். போரடிக்கிற நேரம், நானும் என் மனைவியும் அவனைப் படக்கத்தில் இருத்தி, 'மிமிக்ர்' செய்யச் சொல்லி ரசிப்போம்!

இங்குள்ள என் நண்பரின் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஊழியரிடம் போய், 'நான் எம்.ஜி.ஆராக்கும். என்னை உள்ளெ விடறியா? இல்லாட்டி டிஷூம்... டிஷூம்தான்' னு கையக் கால உதைப்பான்."

"நடிகைகளைக் கிண்டல் பண்ணுவதில் கில்லாடின்னு பேர் வாங்கியிருக்கிறாரே! உங்ககிட்டே அப்படி எப்போதாவது..."

"ஸ்டாரா ஆனதுக்கப்புறம் என்னை நேருக்கு நேர் சந்திக்கிறதைக் கூடிய மட்டும் அவாய்ட் பண்ணுவான்."

"உங்ககிட்டே... அவ்வளவு பயமா?"

"அப்படித்தான்னு நினைக்கிறேன்."

"கமல்கிட்டே உங்களுக்குப் பிடிச்ச அம்சம் எது?"

"சினி பீல்டுல நுழையறப்போ 'மது, புகையிலை, மாது.... இந்த மூணுக்கும் இடம் கொடுக்க மாட்டேன்' னு பிராமிஸ் பண்ணித் தரச்சொன்னேன். முதல் ரெண்டுக்குதான் சம்மதிச்சான். ஆனாலும், அன்னிக்குக் கொடுத்த வாக்குறுதியை இன்னும் காப்பாத்திட்டு வர்றதை நெனச்சு சந்தோஷப்படறேன்!"

"திறமையான கலைஞனை உருவாக்கியிருக்கிற இன்டெலக்சுவல் பாதர் என்ற முறையில் கேட்கிறேன். ஸைக்காலாஜிக்கலி, குழந்தைகளை எப்படி வளர்க்கணும்?"

"குழதை கருத்தரித்த நிலையிலேயே வளர்ப்புப் பணியை ஆரம்பிச்சிடணும்கிறதுதான் என் கருத்து. கர்ப்பமாயிருக்கின்ற தாயின் உள்ளுணர்வுகளைப் பொறுத்தே குழந்தைகளின் வளர்ச்சி அமைகிறது. குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் டேஸ்ட் என்ன என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து, இப்படித்தான் இவனை உருவாககவேண்டும் என்று திட்டமிட்டு நம்பிக்கையோடு வளர்த்தால், நாட்டில் ஜூனியஸ் பஞ்சத்தைப் போக்கிடலாம்."

வழக்கறிஞர் குழு ஒன்று ஆளுநர் குரானாவைச் சந்தித்தபோது, "ஐயம் சீனிவான் ! அட்வ்கேட் அட் பரமக்குடி"ன்னு சொன்னாராம் இவர். பக்கத்தில் இருந்தவர், 'கமல்ஹாசன் பாதர்' என்று கிசுகிசுத்தவுடன், கவர்னர் "ஓ..! யூ ஆர் கமல்ஸ் பாதர்?!" என்று உற்சாகத்தோடு கேட்டாராம். உடனே, "நோ ! மை சன் ஈஸ் கமல் !" என்று கூறி, அங்கு இருந்த எல்லோரையும் அசர வைத்திருக்கிறார் சீனிவாசன்.

"நீங்க கமல் அப்பா இல்லை; உங்க மகன்தான் கமல்னு இந்த இரண்டு மணி நேர உரையாடல் நிருபிச்சிட்டீங்க" என்று சொல்லி, விடைபெறுகிறோம். மழலையாய்ச் சிரித்து மகிச்சியுடன் அனுப்பி வைக்கிறார்.

நன்றி:
ஆனந்த விகடன், 12.11.08.

கமல் சொல்லும் வெற்றியின் ரகசியம்

கமல் தன் வெற்றியின் ரகசியம் என்ன என்று தன் பார்வையில் ஒரு பேட்டியில் முன்பு சொன்னது இது.

"உலகத்தைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ள முடியாத என்னுடைய குழந்தைப் பருவத்தில் ஏவி.எம். நிறுவனத்தினால், அதிர்ஷ்டவசமாகக் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகம் செய்யப்பட்டேன்.

என்னுடைய முதல் படம் வெளியானவுடன் மற்றவர்களுக்குக் கிடைக்கிற மரியாதை, புகழ் எல்லாவற்றையும்விட எனக்கு அதிகமாகவே கிடைக்க ஆரம்பித்தது.

குறிப்பாக என்னுடைய வயதுடையவர்கள் எல்லோரும் என்னை ஏதோ கடவுள் அவதாரமாக நினைத்துக்கொண்டு நேசிக்கத் தொடங்கினார்கள்.

மற்றவர்களின் பாராட்டுகளும், எனக்கு ஊக்கத்தைக் கொடுத்த அவர்கள் வார்த்தைகளுமே என்னை ஒரு நடிகனாகவே நான் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிற ஆசை விதைகளை, அன்று எனது இளம் நெஞ்சில் ஊன்றியது.

இன்று எல்லா மொழிகளிலும் நடித்து ஒரு பெரிய நடிகனாக நான் மாறி நிற்பதற்குக் காரணம், அன்று எனக்குள் எடுத்துக்கொண்ட சபதம்தான். `பெரிய நடிகனாக வேண்டும்' என்ற ஒரே லட்சியத்துடன் எனது ஒவ்வொரு பொழுதுகளும் புலர்ந்தன.

இவ்வளவு ஆண்டுகளை நான் சினிமா உலகிலேயே செலவழித்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது இதயம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் வழிந்தோடுகிறது.

என்னுடைய துரதிர்ஷ்டம் நான் யார் யாரை நண்பர்கள் என்று நினைத்துப் பழக ஆரம்பித்தேனோ அவர்கள் எல்லோரும் எனக்கு எதிரியாகவே மாறியது.

ஆனாலும் எந்த இடத்தை எட்டிப் பிடிக்க நினைத்தேனோ, அந்த இடத்தில் இன்று நான் இருக்கிறேன் என்பதுதான் சந்தோஷமான செய்தி.

திடீரென்று இன்று நான் மறைந்தாலும் `கமல்' எனும் ஒரு கலைஞன் திரைப்பட உலகில் வாழ்ந்தான் என்கிற பெயர் எனக்கிருக்கும்.

ஒரு நடிகனாக மட்டுமே என்னை நான் வளர்த்துக் கொள்ள நினைத்திருந்தால் எனது வரலாறும் எப்போதோ மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் உதவி இயக்குனராக, நடனப் பயிற்சியாளராக, கதை இலாகாவில் ஆலோசகராக இப்படி ஒரு திரைப்படத்திற்கான அத்தனை துறைகளிலும் என்னை நான் ஆழமாக வளர்த்துக் கொண்டேன்.

இதற்குக் காரணம் ஒரு துறையில் இல்லாவிட்டாலும், இன்னும் ஒரு துறையில் திரைப்பட உலகிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.

நான் செல்கின்ற ஒவ்வொரு இடத்திலேயும் போட்டியைச் சந்தித்திருக்கிறேன். இப்படிப்பட்ட போட்டிகள் என்னையும், என் திறமையையும் இன்றளவும் வளர்த்து வருகிறது.

வெளிப்படையாக சொல்லப் போனால் ஒரு "ராஜபார்வை''யில் நான் நடித்தது போலவோ, ஒரு "சலங்கை ஒலி''யில் நான் நடித்தது போலவோ, ஒரு "ஏக் துஜே கேலியே''வில் நான் நடித்தது போலவோ, ஒரு "அபூர்வ சகோதரர்களி''ல் அப்புவாக நடித்தது போலவோ, ஒரு "அவ்வை சண்முகி''யில் நடித்தது போலவோ, ஒரு "இந்தியனி''ல் நான் நடித்தது போலவோ வேறு யாராலும் நடிக்க முடியாது என்பது நான் ஏற்படுத்திய சாதனைதான்.

எந்த கேரக்டரிலும் கமலால் நடிக்க முடியும் என்று இன்று நான் பெயர் எடுத்திருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் எந்தவிதமான சிபாரிசும் இல்லாமல் என்னுடைய திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து நடித்திருக்கும் நடிப்புகள்தான்.

எனது வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் நான் கதைகளையும், அதில் வரும் கதாபாத்திரங்களையும் பற்றி நன்றாக அலசிப் பார்க்கத் தெரிந்தவன்.

பேனர் என்பதை எப்போதும் இரண்டாம் பட்சமாக மாற்றி கதை என்ன... கேரக்டர் என்ன... என்பதை மட்டுமே தெரிந்து கொள்வேன்.

அத்துடன் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த நாளிலிருந்தே நான் கற்றுக்கொண்டு வந்தது, மற்றவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்யவேண்டும் என்பதைத்தான்.

செய்வதைத் திறமையுடன் செய்து வருவதால், இன்று எனக்கென்று ஒரு இமேஜூம், குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறார்கள்.

ஒரு துறையில் வெற்றியடைய வேண்டும் என்றால், நமது முழு கவனத்தையும் அதே துறையில் செலுத்தினால் போதும் என்பார்கள். நானும் அப்படித்தான். நான் ஏற்ற ஒவ்வொரு பாத்திரமும், பல நாட்கள் அந்த அந்தப் பாத்திரங்களுடன் நான் பழகி செய்தவைதான்.

எந்த எந்த கண்ணோட்டத்துடன் என்னைப் பார்க்க விரும்புகிறார்களோ, அந்தக் கண்ணோட்டத்தில் காட்சி தருவதையே நான் பெரிதும் விரும்பினேன்.

பெரும்பாலும் எனக்கு "டூப்" போட்டுக் கொள்வதை நான் வெறுக்கிறேன். ஒரு இளைஞனின் முழுத்திறமையும் வெளிப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு கட்டத்திலும் அவனது திறமை பளிச்சிட வேண்டும் என்று நினைப்பவன் நான்.

என்னுடைய ஒன்றிரண்டு படங்கள் தோல்வியடைகிறது என்றால் ஒன்று முழு கவனத்தையும் அதில் நான் செலுத்தியிருக்க மாட்டேன், இல்லையென்றால் இயக்குனர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு செய்தவையாக இருக்கும்.

இவையெல்லாம் மீறி நான் வெற்றி பெற்று வருகிறேன் என்றால் அதற்குக் காரணம், மற்றவர்கள் போல் நான் மாறிவிடவேண்டும் என்ற எண்ணமல்ல. நான் நானாகவே இருந்து கொண்டு, எல்லாவற்றிலும் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணமும், எல்லா பாத்திரங்களுக்குள்ளும் நான் இருக்க வேண்டும் என்ற துடிப்புடன், நான் எடுத்துவரும் முயற்சிகளும்தான்.

இத்தனை ஆண்டு காலமும் நான் இந்தத் துறையில் இருந்து வருவதற்கு இவைகளே உதவியாக இருந்து வருகின்றன."

இது கமலுக்கும் சினிமாவும் மட்டும் தொடர்புடைய வெற்றி ரகசியம் இல்லை. ஒவ்வொருவருமே அவரவர் துறையில் இதுப்போல் இருந்தால், அனைவருக்குமே வாழ்க்கையில் வெற்றி நிச்சயமே!

இன்று பிறந்த நாள் காணும் உலகநாயகனுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Source : http://www.saravanakumaran.com/2008/11/blog-post_07.html

நவம்பர் 7 - மனிதநேயம் பிறந்தநாள்


உரிமைகள்
ம‌ரிக்கும்
தேசத்தில்
வன்முறை
இயல்பாகவே
பிறக்கிறது!

- டாக்டர் கமல்ஹாசன்!

கமல்ஹாசன் பிறந்தநாள் செய்தி

கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். (பெரிதாக பார்க்க படங்களின் மேல் சொடுக்கவும்)












நன்றி: http://sify.com

அபூர்வ சகோதரர்கள் படத்துக்காக முதலில் எடுத்த பாடல்

கடந்த வார இறுதி கலைஞர் தொலைக்காட்சியில் திரையிடப்பட்ட "அபூர்வ சகோதரர்கள்" வழக்கம் போல் என்னுள் நிறைய கடந்த கால நினைவுகளை எழுப்பிவிட்ட‌து. வெளி வந்த நேரம் எனக்கு 5 வயது. சென்னை கோடம்பாக்கம் பாட்டி வீட்டில் கேசட்டை கஷ்டப்பட்டு வாங்கி வந்து 3 நாட்கள் திரும்பத்தராமல் சுமார் 15 முறை பார்த்திருப்பேன். (புது படங்களை அப்போது அரை நாள் தான் வாடகைக்கு தருவார்கள்). அந்த படத்தில் எல்லா காட்சிகளையும் அட்டகாசமாக எடுத்திருப்பார்கள். பேசத்துவங்கினால் பக்கம் பக்கமாக பேசலாம் அபூர்வ சகோதரர்கள் பற்றி. இந்த ப‌டம் முதலில் துவங்கிய சில நாட்களிலேயே டிரிக் ஷாட்கள் எடுக்க வேறு சில உக்திகள் யோசிக்க ஆரம்பித்ததால் படத்தை நடுவில் நிறுத்திய விடயம் தெரிந்ததே. அப்போது எடுத்த ஒரு பாடல் காட்சி உங்களுக்காக. உங்களில் பலர் இதைப் பார்த்திருக்கக்கூடும். இது தான் பின்பு "ராஜா கைய வைச்சா" என்ற பாடல் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். (ஆனால் அவர் புலி வேடத்தில் ஆடியதால் இந்த பாடல் இலங்கையில் திரையிடப்படவில்லை என்ற தகவலும் கேள்விப்பட்டேன்)




கொசுறாக எல்லோருக்கும் பிடித்தமான காட்சி.



நிறைய நுணுக்கமான விஷயங்கள் செய்திருக்கிறார் கமல்ஹாசன் இந்த படத்திற்காக. மற்ற படங்களை விட இதில் அவர் கால் ஒல்லியாக இருக்கும். மடித்துக்கட்ட வசதியாக எடை குறைந்திருக்கிறார். குள்ள கமல் வேடத்தில் கால்சட்டையை மேலே உயர்த்தி பாதி வயிற்றில் போட்டிருப்பார். பற்களையும் சின்னதாக காட்டி இருப்பார்கள் அந்த வேடத்தில். அலசி எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் நேரமின்மையால் முடிக்கிறேன். சகாக்கள் கொஞ்சம் எழுதலாமே இந்த படத்தை பற்றி.

குரு படம் வெளியான நேரம் குதிரை ஒன்று வேண்டும் என அடம்பிடித்தவன் இந்த படம் வந்த காலத்தில் காக்கட்டூ வேண்டும் என அழுதது நினைவிருக்கிறது. இப்போது வாங்கும் வசதி இருந்தும் நேரமில்லாத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஆசைகள் பட்டியலில் அது இருக்கின்றது. (சென்னை மக்கள்ஸ் "கடல்குதிரைகள்" கிடைக்குமிடம் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்....)

உலகமெங்கிலும் உன்னை வென்றிட யாரு











இன்றைக்கு தசாவதாரம் 100வது நாள்.


பட உதவி : தினத்தந்தி.

கமலின் பொன்மொழிகள்

நீங்கள் உண்மையை பேசினால் அதை உடனே மறந்து விடலாம். பொய் பேசினால் அதை வாழ்நாள் முழுக்க ஞாபகம் வைத்திருக்க வேண்டும்(ஒரு பேட்டியில் சொன்னது)


ஒரு பொய் ஜெயிக்க வேண்டுமானால் அதனுடன் பல உண்மைகளையும் சொல்ல வேண்டும் (இந்தியன் பட வெற்றிவிழா பேச்சு)


வன்முறையால் யாருடைய மத நம்பிக்கையையும் மாற்ற முடியாது (இதை தசாவதாரத்தில் காட்சிப்படுத்திருப்பார், நம்பியின் நாமத்தை ஒருவர் அழிப்பார். ஆனால் ஒரு சிறுவன் எறியும் கல்லினால் எற்படும் ரத்தத்தால் நெற்றியில் நாமம் மீண்டும் வந்துவிடும்)


உடலில் வலி இருப்பதே நாம் வாழ்வதன் அடையாளம் (எப் எம் விளம்பரத்துக்காக)

சாத்தியம் என்பது வார்த்தை அல்ல, செயல்

நான் தலைவனில்லை, என்னை தொடரவேண்டாம். நான் தொண்டனுமில்லை, எனக்கு வழிகாட்டவும் வேண்டாம்

-------------------------------------------------------------------------------------------------

தசாவதாரம் பற்றி நெதர்லான்ட் இணைய தளத்தில் வந்த செய்தி

Indian film more than drama and bling-bling
By Jolan Douwes*
21-08-2008
Could it be coincidence, while India's nuclear deal with the US hits the headlines, a film on a hunt to find a biological weapon is filling cinemas in southern India?And while the country recovers from two bomb attacks, a film about a terrorist leader is running in the film houses. The imagination of Indian scenario writers goes further than romance, drama and bling-bling. On a day in the middle of the week, a cinema in the southern Indian temple city of Madurai is sold out. The title of the film they have come to see is on a billboard in the entrance in the regional Tamil language: "Dasavatharam" (Ten Characters). Our interpreter has seen the film three times already. He knows all the songs off by heart. Full of pride, he tells us that after the premiere cinemas filled easily for several weeks. 1100 seats, four times a day. The success is mainly down to the actor Kamal Haasan who plays an incredible ten roles. Besides the good guy - he plays an Indian scientist who has developed a biological weapon at NASA in the US which has to be kept out of the hands of terrorists.
He also throws himself into the role of the bad guy, a 95-year-old grandmother, a pop star and a hero from the 12th century. Even his metamorphosis into the US President George W Bush is quite convincing - except for the eyes. Eddy Murphy can eat his heart out. What makes the film interesting, besides the storyline and the catchy singing and dancing, is the connection to the news. The hunt for the destructive biological weapon starts in the US and continues in India. It is no coincidence that the film is set in December 2004, because the tsunami provides a dramatic ending; the salty tidal waves, which claim several victims in the south, also deactivate the bomb. "Good isn't it, nature gives and nature takes away," sighs our interpreter, when we get into a motorised rickshaw afterwards. "Ten Characters" is one of more than 850 Indian films produced every year. A large number of them are made in regional languages. The Bollywood productions which travel throughout the world are recorded in Hindi. They do not only do well in the Indian community in the US and Europe. They are also popular in West African countries like Nigeria, not least because they are decent: in the film we saw there was no sex or nakedness for three hours; only a virtuous kiss towards the end. No Defence Minister can deny that news stories are sneaking into Indian films, writes a film historian in The Times of India. Intelligence agencies were the first to point out that the bombings at the end of July bore a striking resemblance to the film "Contract" which had just started running. In the film, hospitals were targeted just like in reality. The film historian warns that Indian society - which is already a bit edgy- shouldn't speculate too much about a "secret" relationship between crime and fiction. That would only make cinema-goers more paranoid.*RNW Translation (nc)
Tags: Bollywood, cinema, Indian nuclear deal, Kamal Haasan

எத்தனை பேர் கமல் படம் பாக்குறீங்க?

படங்களை படங்களாக பார்க்க வேண்டும் என்பது என் கருத்தாக இருந்தாலும் கமல் படங்களின் வெளியீடுகளில் மட்டும் ஒரு சராசரி ரசிகனாக மாறிவிடுவேன். அது முதல் நாள் காட்சி முடிவடையும் வரை தான். அடுத்த நான் நானும் பூதக்கண்ணாடி மாட்டிக்கொண்டு குறை இருக்குதான்னு பாக்க கிளம்பிடுவேன். என்ன தான் நம்ம பையன் தப்பு பண்ணாலும் வலிக்காம ஒரு அடி வைப்போம் இல்லை அந்த மாதிரி கண்டிப்பா எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு தெளிவா சொல்லிடுவேன். ஆனால் கமல் என்கிற அந்த நடிகனின் படத்தில் குறைகள் இல்லை என்பதை விட குறைகள் குறைவு என்று சொன்னால் சரியாக இருக்கும். சாதாரணமாக கமலின் படங்களை மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும். கதைக்கும் அந்த காட்சிக்கும் சம்பந்தம் இருப்பது போலவே தெரியாமல் இருக்கும் பல காட்சிகள் இருக்கின்றன. நான் கவனித்த அப்படி சில காட்சிகளை கீழே சொல்லி இருக்கேன். நீங்களும் கவனிச்சிருக்கீங்களா?

* இந்தியனில் மனீஷாவிடம் தன் மகன் முத்தம் தரும்போது மீசை குத்தியதாக சொன்னதால் மீசையை எடுத்ததாய் சொல்வார். அவனை கொன்ற பிறகு போலீசுக்கு தொலைபேசுவார் அப்போது மீசை இருப்பதாக இருக்கும். இது சாதாரண மாறுவேடமாக நினைக்காமல் கொஞ்சம் உள் இறங்கிப்பாருங்கள் அதன் அர்த்தம் புரியும்.

* ஹே ராமில் வசுந்தராவை பெண் பார்க்கப்போகும் போது கோயில் யானை தன் பாகனோடு இருப்பதாக ஒரு காட்சி கமல் கொஞ்சம் பின்னோக்கி தன் வாழ்க்கையை சிந்திக்கும் போது கல்கத்தாவின் கலவரத்தில் தன் பாகனை இழந்த யானையை காண்பிப்பார். அந்த யானை தான் கமல். அப்போது ராணி முக்கர்ஜியின் மரணம் அதையடுத்து நடந்த நிகழ்வுகளை சூட்சுமமாக அந்த ஒரு காட்சியில் பொறுத்தி இருப்பார்.

அந்த யானை பாகன் இறந்த பிறகு அவன் கையில் இருக்கும் அந்த அங்குசம் அதன் காலில் பட்டிருக்கும் அதனால் அது நகராமல் அந்த கலவரத்திலும் அமைதியாக இருக்கும். அந்த அங்குசம் தன் மனைவியின் நினைவு?? அல்லது மிருகத்துக்கு இருக்கும் அறிவு கூட மனிதர்களுக்கு இல்லையே என்பது பொருளா? கமலுக்கே வெளிச்சம்.

பின்னர் அதே படத்தில் "I do not" என்கிற வசனம் ஓரிரு முறை இடம் பெற்றிருக்கும் "I don't" க்கு பதிலாக. சுதந்திரத்துக்குப்பின் தான் "I don't" அதிகமாக புழக்கத்தில் வந்ததென கேள்விப்பட்டேன்.

இதற்கு பெயர் தான் டைரக்ஷன். அவர் பேட்டியில் கூட தான் இன்னும் முழுமையான‌ ஒரு டைரக்டர் ஆகவில்லை என்று தான் சொல்லி வருகிறார். அவர் நடிக்க ஆரம்பித்து டைரக்ட் செய்ய எத்தனை வருடங்களை ஆனது என இப்போது வரும் புது டைரக்டராக மாறிய நடிகர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.

* ஹே ராமில் இன்னொரு காட்சி. கமல்ஹாசனுக்கு காந்தியை அடுத்து வரும் வாரங்களில் கொலை செய்யச் சொல்லி ஒரு தந்தி வரும். மார்கழி நாளில் திருப்பாவை பாடிக்கொண்டே சிலர் தெருவில் நடந்து போவார்கள். இது டிசம்பர் நடுவில் துவங்கி ஜனவரி பாதி மாதம் வரை போகும். காந்தி சுடப்பட்டது ஜனவரி 30. பிழைகள் இல்லாமல். மன்னிக்கணும். பிழைகள் தவறான வாத்தை. பிசுறு இல்லாமல் படத்தை எடுக்க அவரிடம் பாடம் படித்தே தான் ஆக வேண்டும். கொடிகள் தூக்கிக்கொண்டு சிலர் வரலாம். இது வரலாற்றுப்படம் கதை, கதைக்களம் இதில் சின்ன தவறுக்கூட இடம் கொடுக்காமல் தான் எடுக்க வேண்டும். எடுத்தார். மற்ற கமெர்ஷியல் படத்தில் லாஜிக் இல்லாமல் போனாலும் பாதகம் இல்லை.

* கதாப்பாத்திரங்களுக்கு பெயரிடுவதிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்:

1. மகாநதி படத்தில் ‍ கிருஷ்ணசாமி, நர்மதா, கோதாவரி, யமுனா, காவேரி, பரணி, பஞ்சாபகேசன்.

2. அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லன்களுக்கு அவர்கள் குணாதீசியத்தோடு ஒட்டாத பெயர்கள்.

‍# தர்மராஜ் - ஒரு சின்ன புத்தி அரசியல்வாதி.

# சத்தியமூர்த்தி - பொய் மட்டுமே பேசத்தெரிந்த வக்கீல்.

# நல்லசிவம் - கொலையாளி.

# அன்பரசு - பணக்கார தப்பான காரியங்கள் மட்டுமே செய்யும் ஒரு கதாப்பாத்திரம்.

3. உன்னால் முடியும் தம்பியில் சீதா கதாப்பாத்திரத்தின் பெயர் லலிதா. "இதழில் கதை எழுது நேரமிது" பாடலும் லலிதா ராகம்.

4. இந்தியனிலும் (சுபாஷ்) சந்திரபோஸ், கஸ்தூரி (பா காந்தி) போன்ற பெயர்கள் கொடுக்கப்பட்டது கதாப்பாத்திரங்களுக்கு. சேனாபதி என்ற ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்ன செய்திருப்பாரோ அது அங்கு காட்டப்பட்டது. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றாலும் நாம் கவனிக்க வேண்டியது அவரது பர்ஃபெக்ஷன்.


* இந்தியனில் டிராபிக் இன்ஸ்பெக்டரை அடிகும் காட்சியில் அவரை கமல் "சார்ஜென்ட்" அப்படின்னு கூப்பிடுவார். மீண்டும் ஒரு நுணுக்கமான காட்சியமைப்பு.

* வேடிக்கையாக அமைக்கப்பட்ட அதிகம் கவனிக்கப்படாத ஒரு காட்சி பஞ்சதந்திரத்தில். 36 24 36 பாடலில் "இந்தியன் யாரென்று புரியவைப்பேன்" இந்த வரிகளின் காட்சியமைப்பு அவர் அமெரிக்க நகர வீதியில் வாய் கொப்பளித்து துப்புவார். நாம் செய்யறது தானே திருந்துறோமா? திருந்த கூட வேணாம் அது தப்புன்னாவது தோணி இருக்கா?

* விருமாண்டி உண்மை கதையில் பேச்சியம்மாவை பேய்காமனிடடிருந்து காப்பாற்றுவார். அதன் பிறகு விருமாண்டி மாட்டிரைச்சி கேட்க ஆரம்பிப்பார். அதன் பின்னர் அவர் தந்திரமாக கிணற்றுக்குள் மூடப்பட்டு "ஆடி வெள்ளி" வெளிவந்து தன் படையலை எடுத்து கொள்வது போல கதை நகரும். (விருமாண்டி படத்தில் ஒரு வில்லுப்பாட்டு பெரியகருப்பத்தேவரும், இசை ஞானியும் பாடிய ஒன்று அதை கேட்டால் தெளிவாக புரியும்).

அதே போல சின்னக்கோளாறுபட்டி ஆட்கள் நல்லமநாயக்கர் ஊராரை கொலை செய்த பின் அந்த பெண்ணை கிணற்றுக்குள் வைத்து காப்பாற்றுவார் கமல்.

பின் நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்லி தப்பிக்கும் காட்சியில் அந்த மூளை பிசங்கிய பெண் "அடப்பாவி கெணத்துக்குள்ள இருந்தப்ப நல்லவனா இருந்தியேடா. இப்போ இப்படி மாறிட்டியே" என சொல்லி அழும் ஒரு காட்சி உண்டு. இதற்கு டைரக்டோரியல் டச்னு ஒரே வார்த்தையில் புகழ்ந்தா போதுமா? தெரியலை.

*

இப்போ சொல்லுங்க எத்தனை பேர் கமல் படத்த பாக்குறீங்க?

கமல் படத்தை பாக்குறீங்களா இல்லை அது திரையிடப்படும் திரையரங்கில் இருக்கீங்களா?

தொடரும்... (என்னடா தொடரும்னு சொல்றான்னு பாக்காதீங்க. கமல் படங்களை கவனமாக பார்த்தால் நிறைய அழகான அம்சங்களை நான் தவறவிட்டது தெரியும். அவர் படங்கள் வரும் வரையில் இது போல சின்ன சின்ன நுணுக்கங்களை பார்க்கலாம். ஆமாம் நீங்கள் மேலே சொன்னவைகளை கவனித்திருக்கீங்களா? நான் ஏதாவது தவற விட்டுட்டேனா? உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பின்னூட்டுங்கள். இவை அனைத்தும் நானே சிந்தித்தவைகள் இல்லை. அவ்வளவு சாமர்த்தியமும் இல்லை எனக்கு. சகரசிகர்கள் உடனான பேச்சுக்களின் போது சேகரித்த தகவல்கள்.)

-ஸ்ரீ.

கண்டங்கள் கண்டு ரசிக்கும்...

சகலகலாவல்லவன் தான்

கமல்ஹாசன் என்ன உலகநாயகனா? ஆமாம் கிளிக்கி பாருங்கள்

ஜப்பானில் கல்யாணராமன்..?

ஜப்பானின் பிரபல நடிகர் தடானோபு அசானோவுடன் ஒரு புதிய ஆங்கில-ஜப்பான் மொழிப் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் அசானோவுடன் ஜோடியாக நடிக்கப் போகிறவர் நம்ம ஊர் அசின்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜன கண மன... இசை ஆல்பத்தை தயாரித்து இயக்கியவர் பரத்பாலா. இவர் தயாரித்து, இயக்கவிருக்கும் படம் 19 ஸ்டெப்ஸ்.

ஆங்கில - ஜப்பானிய மொழிகளில் தயாராகும் இதில் ஹீரோவாக தடானோபு அசானோ நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் நடிப்பார் என்று தெரிகிறது. இவர்களுடன் முக்கியப் பாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது. பரத் பாலா, வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார். மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய கதை இது.

9-ம் நூற்றாண்டில் கேரளாவில் நடக்கும் இந்தக் கதையில் கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டுவை அசானோவுக்கு கற்றுத் தரும் கவுரவ வேடத்தில் நடிக்கிறாராம் கமல்.

இந்த வித்தையைக் கற்றுக் கொண்டு, அதன் மூலம் தனது எதிரிகளை அசானோ வீழ்த்துகிறாராம்.

அசினுக்கு இதில் கேரளா ராணி வேடம். களரிப் பயட்டு கற்க வரும் அசானோவுக்கு காதல் பயிற்சி அளிக்கும் கவர்ச்சி ராணி இவர்.

இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இவ்வளவு தகவல்கள் உறுதியாகக் கூறப்பட்டாலும், படத்தில் நடிப்பது குறித்து கமல் இன்னமும் உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை.

அவரது மீடியா மேனேஜர் நிகில் முருகனும் இது குறித்து இப்போது எதுவும் கூறுவதற்கில்லை என்கிறார்.


நன்றி :http://thatstamil.oneindia.in/movies/heroes/2008/08/12-kama-asin-in-a-japanese-film.html

முத்தம் - மீசை - கமல்


"விதம் விதமான மீசைகள் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் படத்துக்குப்படம் மீசையை மாற்றுகிறேன்'' என்று கமலஹாசன் கூறினார்.

பொதுவாக ஆலிவுட் நடிகர்கள் மீசை வைத்துக் கொள்வதில்லை. தேவைப்பட்டால் சரித்திர கால படங்களுக்கு தாடி-மீசை வைத்துக் கொள்வார்கள். வடநாட்டில் திலீப்குமார், தேவ்ஆனந்த், அசோக்குமார் ஆகிய நடிகர்களுக்கு மீசை கிடையாது. படங்களில் கூட பெரும்பாலும் மீசை இல்லாமல் நடிப்பார்கள். ராஜ்கபூருக்கு மட்டும் அரும்பு மீசை உண்டு!

தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர் மீசை வைத்துக்கொள்ளவில்லை. "சியாமளா'' என்றஒரு படம் தவிர மற்ற படங்களில் மீசை இல்லாமல்தான் நடித்தார். பி.யு.சின்னப்பா பெரும்பாலான படங்களில் மீசையுடன் நடித்தார். ஆனால் சொந்த வாழ்க்கையில் மீசை கிடையாது! டி.ஆர்.மகாலிங்கமும் இதே போல் படங்களில் மட்டும் அரும்பு மீசையுடன் நடித்தார். வாழ்க்கையில் மீசை கிடையாது.

வாலிப பருவம் அடைந்தது முதல், பெரும்பாலான படங்களில் கமலஹாசன் மீசையுடன் நடித்துள்ளார். அதுவும், படத்துக்குப்படம் மீசை மாறுபடும். அரும்பு மீசை முதல் அய்யனார் மீசை வரை பலவித மீசைகள் அவர் முகத்தை அலங்கரித்து இருக்கின்றன!

மீசை மீது தனக்குள்ள `காதல்' பற்றி அவர் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"ராபர்ட் ரெட்போர்ட் என்ற நடிகரின் மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் நடித்த ஒரு படத்தில் மேல் உதடு முழுவதும் கவராகியிருக்கும். கீழ் உதடு மாத்திரம்தான் தெரிந்தது! அந்த மாதிரி மீசை வைக்கணும் என்று முயற்சி பண்ணினேன். ஆனால் என் உதடு ரொம்பப் பெரிசு! இந்த உதட்டை மறைக்கணும் என்றால் சவுரிதான் கட்டணும்!

முதன் முதலில் தொங்கு மீசை பேஷன் வந்தபோது, தமிழ் சினிமாவில் அந்த மீசையுடன் கதாநாயகனாக வந்தவன் நான்தான். "சொல்லத்தான் நினைக்கிறேன்'' படத்தில் எனக்கு மீசையை ஷேவ் பண்ணிவிட்டுச் சின்னதாக வைத்து விட்டார்கள். அதனால் எனக்கு ரொம்ப வருத்தம்.

அதற்குப் பிறகு "அபூர்வ ராகங்கள்'' படத்தின்போது டைரக்டர் பாலசந்தர் சாரிடம், `ஒரிஜினல் மீசையே வைத்துக் கொள்கிறேன். ஒட்டு மீசை என்றால் சிரிக்க முடியவில்லை' என்று சொன்னேன். "மன்மதலீலை'' படத்தையும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பண்ணினேன். "மன்மதலீலை''யில்தான் முழுமையாக மீசையைக் கீழே இறக்கிவிட்டேன். பலபேருக்குக் கோபம். `ஏன் இந்த மாதிரி மீசை வைக்கிறே? கதாநாயகனாக நடிக்கணும் என்று ஆசைப்படுறே. ஏன் இப்படியெல்லாம் மீசை வைச்சுக்கிறே? சிவாஜி சாரைப் பாரு, எம்.ஜி.ஆரைப் பாரு' என்று சொல்வார்கள்.

அதற்குப் பிறகு வந்தவர்கள் நிறையபேர் என்னைப் போல மீசை வைத்துக் கொண்டார்கள். அப்படி மீசை வைத்துக்கொண்டு புருவத்தைத் தூக்கினால் அவர்களே என்னை மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றும். எல்லோரும் இப்படி வைக்கிறார்களே என்று ஒரு கட்டத்தில் மீசையையே எடுத்துவிட்டேன்!

உள்ளூரில் எடுத்தால் என் மனசை மாற்றிவிடுவார்கள் என்று வெளிநாடு போய்விட்டேன். ஆம்ஸ்டர்டாம் நகருக்கு நானும் என் மனைவி சரிகாவும் போயிருந்தோம். அங்கே திடீரென்று ஒருநாள் மீசையை எடுத்துவிட்டேன். சரிகாவுக்கு ஒரே சந்தோஷம். `ரொம்ப நல்லா இருக்கு. இந்த முகத்தை நான் பார்த்ததே இல்லையே' என்று சொன்னாள்.

நாலு ஐந்து ஸ்டில்ஸ் எடுத்தாள். எனக்கு மீசை இல்லாமல் பர்ஸ்ட் பிலிம் டெஸ்ட் எடுத்தது சரிகாதான். அதை எடுத்து வந்து முதன் முதலாக டைரக்டர் சிங்கிதம் சீனிவாசராவ் சாரிடம்தான் காட்டினேன். `என்னுடைய புஷ்பக்கிற்கு இதுதான் எதிர்பார்த்த முகம்' என்று சொல்லிவிட்டார். அதுமாதிரியே மணிரத்னமும், "நாயகனில் முதல் பாதிக்கு இந்த முகத்தை வைச்சுக்கலாம்'' என்று சொன்னார்.

ஒல்லியாக இருக்கும் போது - ரொம்ப சின்னப்பையனாக இருக்கும்போது நம்முடைய ஸ்டேட்டசை நிலை நிறுத்திக் கொள்வதற்கோ, பாடி பில்டிங்கிற்காகவோ முதல் ஸ்டேஜிலேயே பெரிதாக பளிச்சென்று காட்டிக்கொள்ள உதவுவது மீசைதான்.

நான் அப்போது டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன். ஒல்லியாக இருப்பேன். இந்த காம்ப்ளெக்சைப் போக்குவதற்கு மீசை பெரிதாக வைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது. அதற்குப் பிறகு நெஞ்சில் முடி வளரவில்லையே என்று குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டிருப்போம். நெஞ்சில் முடி வளர்ந்தால்கூட நல்ல உடல் கட்டு இருந்தால் பெட்டராக இருக்கும் என்று உடற்பயிற்சி பண்ணுவதில்லையா? அந்த மாதிரி வரிசையில் இந்த மீசையும் ஒன்றுதான்.

மீசை என்று சொன்னால் ம.பொ.சி.யை மறக்க முடியாது. ம.பொ.சி. மீசை பற்றி ராஜாஜி சொன்னதாக, சிவாஜி ஒருமுறை சொன்னார். மீசையோடு ம.பொ.சி. வர்றார்னு சொல்லாமல் `மீசைக்குள்ளே ம.பொ.சி. வருகிறார்'னு சொன்னாராம் ராஜாஜி.

பாரதியார் மீசை எனக்குப் பிடிக்கும். பாரதியார் மீசை மாதிரியேதான் எங்க மாமாவோட மீசையும். பெரியாருடைய பஞ்சு மாதிரி தாடியும் மீசையும் எனக்குப் பிடிக்கும். எனக்கு என்னமோ ரொம்ப மெல்லிசான மீசை மேல் அவ்வளவு விருப்பம் கிடையாது. ஹிட்லர் மீசை எனக்குப் பிடிக்கும். ஆனால் காமெடியன்கள் நிறைய பேர் அதை வைத்து விட்டதால், அதை மதிப்பாக நினைக்க முடியவில்லை.''

மீசை மாதிரியே கமலுக்கு ஆர்வம் அளிக்கும் இன்னொரு விஷயம் முத்தம்!

"சட்டம் என் கையில்'' படத்தில்தான், கமலின் முத்தக்காட்சி முதன் முதலாக இடம் பெற்றது. அந்தப் படத்தில், காதரின் என்ற ஆங்கில நடிகைக்கு முத்தம் கொடுத்தார். இக்காட்சி மிகவும் பரபரப்பை உண்டாக்கியது. இதே கதை, "யேதா கமால் ஹோகயா'' என்ற பெயரில் இந்தியில் தயாராகியது. அந்தப் படத்திலும் கமலின் முத்தக்காட்சி இடம் பெற்றது. "புன்னகை மன்னன்'' படத்தில் ரேகாவுக்கும், "சாணக்யன்'' படத்தில் ஊர்மிளாவுக்கும், "மகாநதி''யில் சுகன்யாவுக்கும், "தேவர் மகன்'', "குருதிப்புனல்'' ஆகிய படங்களில் கவுதமிக்கும் முத்தம் கொடுத்தார்.

முத்தம் பற்றி கமல் கூறியிருப்பதாவது:-

"ஒரு தாய் தன் மகளுக்கும், மகனுக்கும் முத்தம் கொடுக்கிறார். சிறு குழந்தைக்குப் பலரும் முத்தம் தருகிறார்கள். ஆழமான காதலையும், அன்பையும் காட்ட முத்தம் நியாயமானதே. "புன்னகை மன்னன்'' படத்தில் வரும் முத்தக்காட்சி, என்னைப் பொறுத்தவரை சாதாரண விஷயம். "வனமோகினி'' (எம்.கே.ராதா - தவமணிதேவி முத்தக்காட்சி இடம் பெற்ற படம்) காலத்திலேயே முத்தக்காட்சி வந்துவிட்டது. எனவே இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

முத்தக்காட்சி தவறானதோ, பாவச் செயலோ அல்ல. அதைப் பயன்படுத்துகிற முறையைப் பொறுத்து, அந்தக் காட்சி அழகானதாகவே மாறும். எல்லோருக்குமே முத்தம் பொதுவானது! பல் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே இது விதிவிலக்கு!''

இவ்வாறு கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

(நன்றி : தினத்தந்தி)

கமலஹாசன் கலகல கன்னிப்பேட்டி

"இந்த பேட்டி சுவாரசியமாக இருக்காது..!"

திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததுமற்றொரு முறை 'ஹைஜம்ப்' செய்யப் போய், கையை ஒடித்துக்கொண்டது கோவளம் கடற்கரையில் நடந்த 'அன்னை வேளாங்கண்ணி' படப்பிடிப்பின் போது, கடலினுள்ளே ஆறு மைல் தூரம் வரை சென்று, பயங்கர அலைகளில் சிக்கி உயிர் தப்பியது

இப்படிப் பல 'ஆக்ஸி டெண்ட்'டுகளிலிருந்து தப்பி படவுலகிலும் 'ஆக்ஸிடெண்ட்'டலாக நுழைந்தவர்தான், இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த நடிகர் கமலஹாசன்.



''எங்கள் குடும்ப நண்ப ரான டாக்டர் சாரா, ஏவி.மெய்யப்ப செட்டி யார் வீட்டில் நடந்த ஒரு விருந்துக்கு என்னையும் அழைத்துக் கொண்டு போனார். செட்டியார் தம்பதிக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அப்போது செட்டியார் 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அதிலே தான் என்னை ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். 'எனக்கும் சினிமாவிலே நடிக்க சான்ஸ் வரும், நானும் நடிப்பேன்' என்று முன்னே பின்னேகூட நான் நினைத்ததில்லை. பை ஃப்ளூக், அந்த சான்ஸ் எனக்குக் கிடைச்சுது...'' என்று இரு கைகளையும் மேலே தூக்கிக் காண்பிக் கிறார் கமலஹாசன்.



அன்று, 'களத்தூர் கண்ணம்மா', 'பாத காணிக்கை', 'பார்த்தால் பசி தீரும்' படங் களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மாஸ்டர் கமலஹாசன், இன்று 'அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படங்களில் இளம் தலைமுறை நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

''சின்னக் குழந்தையாகவும் இல்லாம, பெரிய ஆளாகவும் இல்லாம சில காலம் நடுவிலே அகப்பட்டுத் திண்டாடினேன். முகத் திலேயும் அப்போதுதான் பூனை மீசையிருந்தது. சினிமாவிலே சான்ஸ் இல்லாதபோது டிராமா லைன்லே கொஞ்ச நாள் இருந்தேன். டி.கே.எஸ். குழுவிலே சேர்ந்து, 'அப்பா வின் ஆசை' டிராமாவிலே நடிச்சுக்கிட்டிருந்தேன். அப்படியும் சும்மா இருக்க இஷ்டமில்லாம திரு. நடராஜனிடம் டான்ஸ் கத்துக் கிட்டேன்.

யாரும் செய்யாத ஒண்ணை நாம செய்யணும் கிற ஆசையிலேதான் டான்ஸ் கத்துக்கிட்டு பிரபல டான்ஸ் டைரக்டர் தங்கப்பன்கிட்டே அஸிஸ் டென்ட் டைரக்டரா மறுபடியும் பட உலகத்திலே நுழைஞ்சேன். அவரோடு நிறைய படங்களிலே ஓர்க் பண்ணியிருக்கிறேன். அவர் எடுத்த 'அன்னை வேளாங் கண்ணி' படத்திலே அஸிஸ்டென்ட் டைரக்டரா, அப்ரென்டிசா இருந்து சுத்துக்கிட்டேன்.



'நான் ஏன் பிறந்தேன்' படத்திற்கு டான்ஸ் ஒர்க் பண்ணும்போது திரு. எம். ஜி.ஆரோடு பழகக்கூடிய சான்ஸ் கிடைச்சுது. அவர் என் 'பாடி'யை பில்ட் அப் பண்ணுவதற்கு சில 'எக்சர்சைஸஸ்' எல்லாம் கத்துக் கொடுத்தார். அதைத் தினமும் இப்போ கூட செய்துகிட்டு வரேன்...'' என்று கூறும் கமலஹாசன் தன் 'பாடி'யை நன்றாக 'பில்ட் அப்' பண்ணி 'ஸ்மார்ட்' ஆகத்தான் வைத்திருக்கிறார்.

அண்மையில் வெளிவந்துள்ள 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் ஒரு டான்ஸராக வந்து, 'யூ டோண்ட் நோ' என்று பாடி அமர்க்களம் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்குக் கிடைத்திருப்பது கவர்ச்சி வில்லன் வேடம்!



இந்த மாதிரி கேரக்டரை இவர் நன்றாகச் செய்திருப்பதைப் பார்த்து, இனிமேல் இவரை 'புக்' செய்யும் தயாரிப்பாளர்களும் இதே மாதிரி 'ஸ்டீரியோ டைப்' ரோல்களைக் கொடுத்தால்..?

''எந்த ரோல் வந்தாலும் ஏற்றுக் கொண்டு ஒரு 'நல்ல நடிகன்'னு பேர் வாங்கணும் என்பதுதான் என் லட்சியம். டைரக்டர் பாலசந்தர் கூட எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். 'இதே மாதிரி 'ரேப்' பண்ற ரோலா உனக்குக் கொடுப்பாங்க. காலையிலே ஒரு செட்டிலே பிரமீளா, சாயங்காலம் இன்னொரு செட்டிலே ஜெயசுதா, அப்படின்னு..! 'ரேப்' பண்ற ஸீனாவே நடிச்சு இதை 'கன்டினியூ' பண்ணாதே. அதுக்குன்னு வில்லன் ரோல் வந்தா வேண்டாம்னும் சொல்லாதே! நல்ல ரோல் வந்தா விடாதே'ன்னு சொல்லியிருக்காரு'' என்று 'பெல்பாட்டம் பேண்ட்' மடிப்பை இழுத்துவிட்டுக் கொண்டே சொல்கிறார் கமலஹாசன்.

கமலஹாசன் ஹீரோவாக நடித்த, 'உணர்ச்சிகள்' என்ற படம் இன்னும் வெளிவரவில்லை. காரணம், பட விநியோகஸ்தர்கள் தான். அந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. செக்ஸ் கிடையாது. ஹீரோ கமலஹாசன்; ஹீரோயின் எல்.காஞ்சனா. இரண்டு பேருமே வழக்கமாக இல்லாத புதுமுகங் கள். அவ்வளவுதான், விநியோகஸ் தர்கள் பின்வாங்கிவிட்டார்கள். பாவம், படத் தயாரிப்பாளர் என்ன செய்வார்? அதற்காக இப்போது ஆட்டம், பாட்டு என்று எல்லா மசாலாக்களையும் சேர்த்து மறுபடியும் எடுக்கிறார்களாம். இதைக் கூறி வருத்தப்படுகிறார் கமலஹாசன்.

'' இப்ப நான் கொடுத்திருக்கிற பேட்டி அவ்வளவா சுவாரசியமா இருக்காதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, நான் இன்னொரு ஆர்ட்டிஸ்டைப் பத்திக் குறை சொல்லலை. யாரையும் தாக்கவே இல்லை. 'இவர் எனக்கு மரியா தையே கொடுக்கலே', 'அவர் என்னை மதிக்கலை'ன்னு வழக்கமா எல்லாரும் சூடா சொல்ற மாதிரி நான் சொல்லவே இல்லை. அப்படியிருக்கறச்சே எப்படி இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்?
குழந்தையிலேருந்து இந்த ஃபீல்டுலே இருக்கேன். இது வரைக்கும் எல்லோர்கிட்டேயும் மரியாதையா நடத்துக்கறேன். எனக்கும் எல்லாரும் மரியாதை கொடுக்கறாங்க. அதனாலே யாரையும் திட்டறதுக்கு சான்ஸே கிடையாது'' என்று நகைச்சுவை யாகப் பேசுகிறார் கமலஹாசன்.

சினிமா உலகத்தில் அனைவரும் இவருக்கு நண்பர்கள்.

இளமையான தோற்றம், அளவான உயரம், கலையார்வம், படவுலகில் 15 வருட அனுபவம் எல்லாம் அமையப் பெற்றிருக்கும் கமலஹாசனுக்கு ஒரு நல்ல பிரகாசமான எதிர்காலத்தைத் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் உருவாக்கித் தராமலா போய் விடுவார்கள்?

இந்தவார விகடன் பொக்கிசத்தில் வெளியாகிய நம்ம உலக நாயகனின் 23.2.1973 விகடனில் வெளிவந்த கன்னிப்பேட்டி.

ரஜினியுடன் ஏற்பட்ட நட்பு நிரந்தரமானது!


"ரஜினிக்கும் எனக்கும் ஏற்பட்ட நட்பு, ஆழமானது; நிரந்தரமானது'' என்று கமலஹாசன் குறிப்பிட்டார்.

கமல் கதாநாயகனாக நடித்த "அபூர்வ ராகங்கள்'' படத்தில் ரஜினி ஒரு சிறு வேடத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இருவரும் 15 படங்களில் சேர்ந்து நடித்தனர்.

அந்தப் படங்கள் வருமாறு:- (1) அபூர்வ ராகங்கள், (2) மூன்று முடிச்சு, (3) அவர்கள், (4) 16 வயதினிலே, (5) ஆடுபுலிஆட்டம், (6) இளமை ஊஞ்சலாடுகிறது, (7) அவள் அப்படித்தான், (8) அலாவுதீனும் அற்புத விளக்கும், (9) நினைத்தாலே இனிக்கும், (10) தப்புத்தாளங்கள், (11) தில்லுமுல்லு, (12) நட்சத்திரம், (13) தாயில்லாமல் நானில்லை, (14) சரணம் ஐயப்பா, (15) உருவங்கள் மாறலாம்.

இருவருக்குமே தனித்தனியாகப் பெரிய ரசிகர் கூட்டம் சேர்ந்தது. தொடர்ந்து இருவரும் சேர்ந்து நடிப்பது, இருவர் முன்னேற்றத்துக்கும் நல்லதல்ல என்ற முடிவுக்கு இருவருமே வந்தனர். அதனால் இருவருமே சேர்ந்து, பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டினார்கள். "இனி நாங்கள் தனித்தனியாகவே நடிப்போம். சேர்ந்து நடிக்கமாட்டோம்'' என்று அறிவித்தார்கள்.

இது, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாக அமைந்தது. கமலும், ரஜினியும் தனித்தனியே பல வெற்றிப்படங்களை கொடுத்தனர். கமலஹாசன் "உலக நாயகன்'' என்றும் "கலைஞானி'' என்றும் புகழ் பெற்றார். ரஜினிகாந்த் "சூப்பர் ஸ்டார்'' என்று போற்றப்படுகிறார்.

தமிழ்த் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டாராக எம்.கே.தியாகராஜ பாகவதர் திகழ்ந்தபோது, இரண்டாவது சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார் பி.யு.சின்னப்பா. இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. இருவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. யார் சிறந்த நடிகர் என்பதில், ரசிகர்கள் மோதிக்கொள்வதுண்டு.

"பாகவதரைப்போல சின்னப்பாவால் பாட முடியுமா?'' என்று பாகவதர் ரசிகர்கள் கேட்பார்கள். "சின்னப்பாவைப்போல பாகவதரால் நடிக்க முடியுமா?'' என்று சின்னப்பா ரசிகர்கள் கேட்பார்கள். ரசிகர்கள்தான் இப்படி மோதிக் கொள்வார்கள் என்றாலும், பாகவதரும் சின்னப்பாவும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.

பிறகு எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சூப்பர் ஸ்டார் ஆனார்கள். இருவரும் நாடகங்களில் நடித்து வந்தபோதே, வறுமையை பங்கிட்டுக்கொண்டு, அண்ணன்-தம்பி பாசத்துடன் பழகியவர்கள். சினிமாவில் புகழ் பெற்ற பிறகும், இந்தக் குடும்பப் பாசம் தொடர்ந்தது. இருவரும் "கூண்டுக்கிளி'' என்ற ஒரே படத்தில் நடித்தார்கள். அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. தனித்தனி பாணியில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார்கள். "இருவரில் யார் வசூல் சக்ரவர்த்தி'' என்பது குறித்து எம்.ஜி.ஆர். ரசிகர்களும், சிவாஜி ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். மதுரையில், ரசிகர்களின் ஆவேசம் கத்திக்குத்து வரை போனது உண்டு. ஆனால் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கடைசிவரை அண்ணன் - தம்பியாகவே பழகினார்கள்.

இன்று உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் கமலுக்கும், ரஜினிக்கும் தொழில் போட்டி இருந்தாலும், பொறாமை கிடையாது. "உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?'' என்று ரஜினியிடம் கேட்டபோது, "கமலஹாசன்'' என்று ரஜினி கூறியிருக்கிறார். கமல், தான் நடிக்கும் படங்கள் முடிவடைந்தபின் ரஜினிக்கு போட்டுக் காட்டுவார். இதேபோல் ரஜினி தன் படங்களை கமலுக்கு திரையிட்டுக் காண்பிப்பார்.

ரஜினியுடன் உள்ள நட்பு பற்றி ஒரு பேட்டியில் கமல் கூறியிருப்பதாவது:-

"எனக்கு ராஜன் என்கிற நண்பர் இருந்தார். 28 வயதிலேயே அவருக்கு கேன்சர். மரணத்தின் நிழல் அவர் மீது விழ ஆரம்பித்த நேரம்.

ஒருநாள் என்னுடன் ஷூட்டிங் ("அபூர்வ ராகங்கள்'') பார்க்க வந்தார். மேக்கப் அறையில் அமர்ந்திருந்தோம். அப்போது, சரேலென கதவைத் திறந்து கொண்டு ரஜினி உள்ளே நுழைந்தார். "குட்மார்னிங் கமல் சார்'' என்று `விஷ்' பண்ணிவிட்டு, படு ஸ்டைலாக மின்னல் மாதிரி நடந்து போனார்.

ராஜனும், ஏறக்குறைய ரஜினி மாதிரி இருப்பார்! "கமல்! இது யாரு? என்னை மாதிரியே இருக்கிறாரே!'' என்று கேட்டார், ராஜன். "இவர் பெயர் சிவாஜிராவ்! புதுசா நடிக்க வந்திருக்கிறார்!'' என்றேன். இது நடந்து 3 மாதங்களில் என் இனிய நண்பர் ராஜன் இறந்து போனார். அன்று முதல் ரஜினிதான் எனக்கு ராஜன்! அதாவது ஆப்த நண்பர்.

என்றைக்கு அவர் (ரஜினி) மேக்கப் அறையின் கதவைத் திறந்து வேகமாக உள்ளே வந்தாரோ, அன்றே என் மனக்கதவையும் திறந்து உள்ளே நுழைந்து விட்டார்!''

இவ்வாறு கூறிய கமல், இன்னொரு கட்டுரையில் ரஜினி பற்றி கூறியிருப்பதாவது:-

"நானும் ரஜினியும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்தோம். நல்ல நல்ல படங்கள் செய்தோம். "நினைத்தாலே இனிக்கும்'' படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் போயிருந்தபோது, டைரக்டருக்குத் தெரியாமல், இரவெல்லாம் ஊர் சுற்றி, திரிந்து விட்டு, அதிகாலை நான்கு மணிக்கு திருட்டுத்தனமாய் பூனை மாதிரி ஓட்டலுக்குள் ஓடி ஒளிவோம். மறுநாள் ஷூட்டிங் நேரத்தில் தூக்கம் ஆளைத் தூக்கி சாப்பிடும். ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூங்கி வழிவோம்.

ரஜினியும், நானும் நண்பர்களாக இருந்தாலும், எதிர் எதிர் துருவங்கள்தான். கடவுள் நம்பிக்கையில், வாழ்க்கை முறையில், நடிக்கிற படங்களில், தேர்ந்தெடுக்கப்படுகிற கதைகளில், பொழுதுபோக்குகளில் என, நானும் ரஜினியும் அப்படியே வெவ்வேறு ரசனைகளும், விருப்பங்களும் கொண்டவர்கள்.

அதுபற்றிப் பேசும்போது, இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் வந்ததுண்டு. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் இருவருக்கும் ஒற்றுமை உண்டு. அது, நாங்கள் செய்யும் தொழிலான சினிமா பற்றிய பயம்!

ரஜினி, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும், "இதுதான் நமது முதல் படம்'' என்கிற பயபக்தியுடன் கவனம் எடுத்துச் செய்வார். நானோ, "இதுதான் நான் செய்கிற கடைசிப்படம்'' என்கிற வெறியுடனும், வேகத்துடனும் உழைப்பேன். எங்களிடையே ஏற்பட்ட அன்பு, எப்போதும் அப்படியே இருக்கிறது. எங்களுக்குள் ஈகோ எதுவும் கிடையாது.''

மேற்கண்டவாறு கமல் குறிப்பிட்டுள்ளார்.

(நன்றி : தினத்தந்தி)

"மர்மயோகி விலகும் மர்மங்கள்"


இதுவரை வெளியான அனைத்துப் படங்களின் உலக வசூலை முறியடித்து ஒடிக்கொண்டிருக்கும் "தசாவதாரம்", தமிழ் சினிமாவைத் தயாரிப்புரீதியாகவும், படைப்புத்திறன் சார்ந்தும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இதன்மூலம் உலக மொழிப் படங்களில் நடிக்காவிட்டாலும் "உலக நாயகன்" என்று தன் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கமலுக்கு அந்தப் பட்டம் பொருந்திப் போய் விடுகிறது.

"தசாவதாரம்" படத்தில் கமலின் பெரு முயற்சியால் படைப்பாளிக்கும், தயாரிப்பாளருக்கும் எப்போதுமிருக்கும் பட்ஜெட் முரண் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் பலனையும் அறுவடை செய்ய கமலுக்கே வாய்ப்புக் கிடைத்திருக்கிறது, "மர்மயோகி" படத்தின் மூலம். இதுவரை எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இல்லாதவாறு மர்மயோகியின் பட்ஜெட் 150 கோடி என்று கணக்கிடப்பட்டிருப்பது தமிழை விரித்து, உலகைச் சுருக்கும் முயற்சியாகவே இருக்கிறது.

இன்னும் "மர்மயோகி" யின் தயாரிப்பும், படப்பிடிப்பும் முழுமையாக டிசைன் செய்யப்படாத நிலையில் அங்கே என்னதான் நடக்கிறது என்ற ரசிகக்கவலையில் கொஞ்சம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வியப்பானவை. அவை "மர்மயோகி"யின் மர்மத் திரையைக் கொஞ்சம் விலக்கிவைக்கவும் செய்பவை.

"மர்மயோகி" யைத் தயாரிக்க பிரமிட் சாய்மீராவுடன் ராஜ்கமலும் கைகோர்ப்பது ஒருபுறமிருக்க, படத்தின் அசாத்திய பட்ஜெட்டுக்குத் தோள்கொடுக்க ஹாலிவுட்டின் 'வால்ட்டிஸ்னி'யும் தமிழுக்குள் வரவிருக்கிறது.

கமலே இயக்கவிருப்பதால், படைப்பு சார்ந்தும் படத்தை ஹாலிவுட் படங்களின் நேர்த்திக்கு உருவாக்கும் முயற்சியிலிருக்கிறார் அவர். நவீன தொழில்நுட்பத்துடன் படம் தயாராவதால் லேட்டஸ்ட் வசதிகள் கொண்ட "ரெட்" என்ற ஹைடெமினிஷன் கேமராவை இந்தப்படத்தில் கமல் பயன்படுத்தவிருக்கிறார். "4கே ரெசொல்யூஷன்" திறன் கொண்ட அதன் ஒருநாள் வாடகை 30 ஆயிரம் ரூபாய் என்றிருக்க அந்தக் கேமராவை இந்தப்படத்துக்காக சொந்தமாக விலைகொடுத்தே வாங்கிவிட்டாராம் கமல். அதன் விலை 45 லட்சம்.

சரி....... கதை?

ஏழாம் நூற்றாண்டில் நடப்பதாகச் சொல்லப்படும் "மர்மயோகி"யின் கதையில் அந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அரசவம்சததை வேரறுக்க நினைக்கும் இன்னொரு வம்ச அரசியாக ஹேமாமாலினி வருகிறார். அதாவது கதையின் வில்லி அவர்தான்.

அவரால் அழிக்கப்படும் வம்சத்தில் எஞ்சியிருக்கும் ஐந்து வயது வாரிசை மீண்டும் அரியணை ஏறவைக்க அந்த ராஜ்ஜியத்தின் தளபதி போராடும் கதையைத்தான் மர்மயோகியில் சொல்லப்போகிறாராம் கமல். தளபதி வேறு யாருமில்லை. கமலேதான்...! அதற்காக கருகருவென்று தாடி வளர்த்து கொண்டிருக்கிறார் அவர்.

மெல்கிப்ஸனின் 'கிளேடியேட்டர்', 'பிரேவ்ஹார்ட்' படங்களையொத்த உருவாக்கம் இருக்குமாம். கமல் தன்னுடன் நடிக்க பத்மபிரியாவைக் கேட்டிருக்கிறார். 'கமலுடன் நடிக்கக் கூலி' என்றால் கசக்குமா என்ன? ஒத்துக்கொண்டு அக்ரிமென்டில் கையெழுத்திட ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கிறார் பத்மபிரியா.

படப்பிடிப்பு இந்தியாவில் ராஜஸ்தானிலும், பெரும்பகுதி ஸ்விட்சர்லாந்திலும் எடுக்கப்படவிருக்கிறது. படப்பிடிப்பு இடைஞ்சல்லில்லாமல் நடைபெறுவதற்காகவும், ரம்மியமான ஒளிப்பதிவுக்காகவும் ஸ்விட்சர்லாநதைத் தேர்ந்தெடுத்திருக்கிறாராம் கமல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் உருவாகின்றன.

"மர்மயோகி" யின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் பாக்கியம்தான் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களுக்கு இருக்குமோ இருக்காதோ தெரியவில்லை. ஆமாம்... படம் தொடங்கப் போவது மும்பையில். அந்த மர்மத்தையும் விரைவில் கமல் விலக்கினால் நலம்.

நன்றி: குங்குமம் (14.08.08)

தசாவதாரம் - 50வது நாள்!

தசாவதாரமும் ‍ தரம் தாழ்ந்த விமர்சனங்களும்

அப்படி என்னதான் கமல் மீதும், அவரது படங்களின் மீதும் கோபமோ? தங்களின் இஷ்டத்திற்க்கு வசைபாடுகின்றார்கள். இதை ஏன் செய்யவில்லை, அதை ஏன் செய்தார், அது எப்படி அப்படி வரலாம், இது ஏன் இப்படி வரவில்லை, இதுவா உலகத்தரம்...

1. முதல் கேள்வி தமிழே தெரியாத ஜாக்கிஜானை ஏன் பாடல் வெளியிட்டு விழாவிற்க்கு அழைக்க வேண்டும்?

ஜாக்கிஜான் திரைப்ப‌ட‌த்துறையினைச் சார்ந்த‌வ‌ர்தானே, த‌னது துறையைச் சார்ந்த ஒருவ‌ரைத்தான் க‌ம‌ல் அழைத்துள்ளார். சினிமா என்ப‌து ஒரு தொழில் அதிலும் லாப‌ம் வேண்டும் இல்லை என்றால் அதனைச் சார்ந்துள்ள‌வர்க‌ள் உண‌விற்க்கு எங்கு போவது? உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌ ஒரு ந‌ப‌ரை அழைத்தால் த‌ன‌து ப‌ட‌த்திற்க்கு ஒரு உலக‌ளாவிய‌ முக‌வ‌ரி கிடைக்கும், அந்த‌ திரைப் ப‌ட‌த்தினை உலகம் முழுவது எடுத்துச் செல்ல‌ ஜாக்கிஜான் வழிவ‌குப்பார் என்ப‌த‌னால் அழைத்துதிருக்க‌லாம். ஒலிம்பிக் டார்ச்சை விளையாட்டு வீர‌ர்க‌ளின் கைக‌ளில் கொடுக்காம‌ல், ந‌டிகைக‌ளிட‌ம் கொடுத்து ஜொள்ளுவிடும் அர‌சிய‌வாதிக‌ளைப் ப‌ற்றி எழுதி இருந்தால் ந‌ன்றாக இருந்திருக்கும்.

2. ப‌த்து வேட‌ச் சாத‌னைக்காக‌ ம‌ட்டுமே இந்த‌ப் ப‌ட‌ம்/ ஏன் ப‌த்து வேட‌ங்க‌ளிலும் க‌ம‌ல் ம‌ட்டுமே ந‌டிக்க‌ வேண்டும்?

ச‌ரிதான் இது சாத‌னைக்காக‌வே எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ம் தான், ஏன் சாத‌னைக‌ள் முறிய‌டிக்க‌ப் ப‌ட‌க்கூடாதா? இதைவிட‌ ஒரு ந‌ல்ல‌ திரைக்கதை(முடிந்தால்?) அமைத்து அதில் பதினோறு வேடங்களில் விக்ர‌மோ, சூரியாவோ ந‌டித்தால் க‌ம‌ல் என்ன‌ த‌டுத்து விட‌வா போகிறார்? ப‌த்து வேட‌ங்க‌ளிலும் புக‌ழ் பெற்ற‌ ந‌டிக‌ர்க‌ளை ந‌டிக்க‌ வைத்திருந்தால் த‌யாரிப்பாள‌ர் பாடு பெரும்பாடாகியிருக்கும்.

3.ப‌ட‌ம் முழுவ‌து ஆங்கில‌ வாடை.

பின்ன‌ர் புஷ், பிள‌ச்ச‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் த‌மிழிலா பேச‌ முடியும்? அப்ப‌டி பேசி இருந்தால் க‌ம‌லுக்கு அறிவே இல்லை எப்ப‌டி ஆங்கில‌க்கார‌ர்க‌ள் த‌மிழில் பேச‌ முடியும் என‌க் கூறி ஒரு கூட்ட‌மே கிள‌ப்பி இருக்கும்.

4.ஒரு அன்பர் ப‌ர‌த், கோவை குணா போன்றவர்களை க‌ம‌லுட‌ன் ஒப்பிட்டு இருக்கிறார்.

ந‌ல்ல‌வேளை அந்த அன்பர் இன்னும் போக்கிரி ப‌ட‌ம் பார்க்க‌வில்லை என நினைக்கிறேன் இல்லையென்றால் அதில் சுற்றும் விழிச் சுட‌ரே பாட‌லுக்கு வ‌டிவேலு ஆடுவதைப் பார்த்து பேசாம‌ல் அவ‌ரையே க‌ஜினியில் ந‌டிக்க‌வைத்திருக்க‌லாம் என‌க் கூட‌ கூறி இருப்பார். ஒரு க‌தாப்பாத்திர‌த்தை ஏற்று ந‌டிக்கும் போது அதை போல‌வே தான் ந‌டிக்க‌ வேண்டும். நல்லவேளை க‌ம‌ல் தமிழ் தெரிந்த தெலுங்குக்கார‌ர் போல் மிமிக்கிரி செய்கிறார், விஞ்ஞானி போல் மிமிக்கி‌ரி செய்கிறார் என‌ குற்ற‌ம் சாட்டாம‌ல் விட்டன‌ரே அதுவ‌ரை ச‌ந்தோச‌ம்.

5. ப‌ட‌ம் முழுவ‌து ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கும் மேக்க‌ப்.

என‌க்கு தெரிந்த‌ ப‌ல‌ உல‌க‌த்த‌ர‌மான‌ ஆங்கில‌ ம‌ற்றும் ப‌ல‌ மொழிப்ப‌ட‌ங்க‌ளிலும் மேக்க‌ப் பூச‌ப்ப‌ட்ட‌து ந‌ன்றாகத் தெரிய‌த்தான் செய்கிற‌து. ப‌ட‌ங்க‌ளில் ய‌தார்த‌ம் என்ப‌து ஒரு அள‌விற்க்குத் தான் இருக்கும். அதையும் தாண்டி அது ர‌சிக்கும்ப‌டியாக‌ இருக்கிற‌தா என்ப‌து தான் கேள்வி. அதில் நிச்ச‌ய‌ம் த‌சாவ‌தார‌ம் வெற்றி பொற்ற‌தாகும்.

6.ஜ‌ப்பானிய‌ ர‌சிக‌ர்களைக் க‌வ‌ர‌ க‌ம‌ல் முய‌ற்சிக்கிறார்?

இந்த‌ மாதிரி ஒரு ஐடியா க‌ம‌லுக்கு முன்னமே தெரிந்திருந்தால் இன்னும் ப‌ல‌ நாட்ட‌வரைக் க‌வ‌ர‌ ஒரு இருப‌து பாத்திர‌ங்க‌ளை உருவாக்கி அதிலும் ந‌டித்திருப்பார். ந‌ல்ல‌வேளை அமெரிக்க‌ அர‌சிய‌லில் க‌ம‌ல் அடியெடுத்து வைக்கும் முய‌ற்சி தான் புஷ் வேட‌ம் என‌ காம‌டி ப‌ண்ணாம‌ல் விட்ட‌ன‌ரே.

க‌டைசியாக‌ க‌ம‌லுக்கு ஒரு வேண்டுகோள் இனிமேல் பெண்வேட‌மிட்டு ந‌டிக்காதீர், ஏனென்றால் அந்த‌ பெண் மார்பில் இருந்து ஏன் பால் வ‌ர‌வில்லை என‌க் கூட‌ கேள்வி வ‌ர‌லாம்

கொசுருச் செய்திக‌ள்:

1.த‌சாவ‌தார‌ம் அமெரிக்காவில் நாற்ப‌து பிரிண்டுக‌ளாக வெளியிட‌ப்ப‌ட்ட‌ முத‌ல் தென் இந்தியத் திரைப்ப‌டம்.
2. அமெரிக்காவில் த‌மிழில் ம‌ட்டும் 30 ந‌க‌ர‌ங்க‌ளில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து.
3. திரையிட்ட‌ மூன்று வார‌ங்க‌ளுக்குள் நூறு கோடி மேல் வ‌சூல் கிடைக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

தசாவதாரம் சார்ந்த மலிவு விளம்பரங்கள்

தசாவதாரம் ஒரு பார்ப்பனீய மலம், கமலின் பிராமணிய முகம், தசாவதாரம் கமலின் மாஸ்டர்பேஷன் போன்ற தசாவதாரம் சம்மந்தமான எதிர்மறை விமர்சனங்களை படித்து ரசித்து இருக்கிறேன். ஏனென்றால் இவர்கள் விவாதம் செய்யும் நோக்கோடு எழுதுபவர்கள். தாங்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமான வாதங்களை இவர்கள் முன் வைக்கிறார்கள். இது போன்ற கூர்மையான ஆரோக்கியமான விமர்சனங்கள் தான் கமல் போன்ற கலைஞனை மெருகேற்றி வருகின்றன. இதே மாதிரி கமல் தசாவதாரத்தில் பெரும்பாண்மை மதத்தை கிண்டல் பண்ணுகிறார் ஆனால் சிறுபாண்மை மதங்களை ஆதரிக்கிறார் என்று மற்றொரு தரப்பு சொல்கிறது. இது போன்றவர்களுக்கு ஒவ்வொரு கமல் ரசிகனும் பதில் சொல்லியே ஆக வேண்டும்

இன்னொரு வகை விமர்சகர்கள் என்னை போன்றவர்கள். எதனால் தங்களுக்கு தசாவதாரம் பிடித்து இருக்கிறது என்று அதற்கான வாதங்களை முன் வைத்து எழுதுகிறோம். ஆனால் இப்படி எந்த வாதத்தையும் முன் வைக்காமல் தசாவதாரம் ஒரு குப்பை என்று போகிற போக்கில் ஒரு மூத்த வலைப்பதிவர் எழுதி இருக்கிறார். அவருடைய வாதத்தையும் அவர் பாணியில் மொக்கை என்று கூறி ஒதுக்கிவிட முடியும் ஆனால் அப்படி செய்து அவருகும் நமக்கும் வித்தியாசம் இல்லை என்று காட்ட விரும்பவில்லை. அவர் படம் பற்றி பெரிதாக எதுவும் குறை கூறாததால் எனக்கும் அதற்கான பதில்கள் இல்லை. ஆனால் அவர் பதிவு மற்றும் பின்னூட்டங்களை பார்க்கும் போது அவருடைய பதிவு மலிவு விளம்பரம் தேடும் ஒரு யுக்தி என்று மட்டும் புரிகிறது

அவருடைய முதல் பின்னூட்டத்திலேயே தசாவதாரம் அடிபொடிகள் வந்து தன்னை கும்முவார்கள் என்று எதிர்பார்த்து காத்து கிடப்பதாக சொல்லி இருக்கிறார். இதிலி இருந்தே தெரிகிறது அவருடைய மனோபாவம். அடுத்து சொல்கிறார் யாரும் சுப்பிரமணியபுரம் பற்றி பேசவில்லை அப்பவும் தசாவதாரம் தான் பெருசாக தெரிகிறது என்று. சுப்பிரமணியபுரம் பற்றி பின்னூட்டம் வர வேண்டுமானால் அதை பற்றி மட்டும் எழுதி இருக்கலாம் ஆனால் மலிவு விளம்பரம் வேண்டி தானே தசாவதாரத்தையும் தன் பதிவில் இணைத்தார்

சந்திரமுகி அந்நியன் போன்ற படங்கள் உளவியல் சம்மந்தமான கருவை கொண்டு வெளிவந்த படங்கள் அதனால் அவை இரண்டையும் கம்பேர் பண்ணி எழுதலாம் ஆனால் இவர் சுப்பிரமணியபுரம் படத்தையும் தசாவதாரத்தையும் கம்பேர் பண்ணியதில் எந்த விவாத நோக்கமும் தெரியவில்லை. ஆனால் அவருடைய நோக்கம் மட்டும் நிறைவேறி இருக்கிறது

தீர்க்கதரிசி கமல்

பின்னால் நடை பெறப்போகும் பல விஷயங்களை கணிப்பதில் அவர் ஒரு திறமைசாலி

1) 16 வயதினிலே படப்பிடிப்பில் ரஜினியை உதவி இயக்குனர்கள் மதிக்காத போது அவர்களிடம் கமல் சொன்னது " இவர்கிட்ட கால்ஷீட் கேட்டு நீங்கள் அலையிற காலம் வரும்"

2) சிங்கார வேலன் படப்பிடிப்பில் வடிவேலை கவனித்து தேவர் மகனில் வலுவான வேடம் கொடுத்தது

3) முள்ளும் மலரும் பட செந்தாழம் பூவில் பாடலைக்கேட்டு அதை படமெடுக்க முடியாத பணத்தட்டுப்பாட்டை அறிந்து இது கண்டிப்பாக படத்தில் இருக்க வேண்டும் என்று அதற்கு தேவையான வசதி செய்து தந்தது

4) மஹாநதி - சீட்டு கம்பெனி

5) மக்கள் தியெட்டருக்கு வரவேண்டுமென்றால் வசதி செய்ய வேண்டும் என்று அபிராமி தியேட்டருக்கு 95 ல் டால்பி சிஸ்டம் கொண்டு வந்தது. அதன்பின் தான் பல திரையரங்குகள் வசதிகளை மேம்படுத்தின

6) ஆளவந்தான் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட சொன்னது (அப்போது அவர் அளித்த பேட்டியில் திருட்டு வி சி டி தவிர்க்கவும், மக்கள் எளிதில் திரையரங்கை அடையவும் இது உதவும் என்றார். அப்பட தோல்வியால் இது எடுபடவில்லை. ஆனால் இப்பொது இதுதான் ட்ரெண்ட்). ஓடும் நாள் முக்கியமில்லை வசூல் தான் முக்கியம் என்று அன்று சன் டிவி பேட்டியில் (2001) சொன்னது இப்பொழுது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது

7) சமீபத்தில் அவர் சத்யம் சினிமாஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கூட இதைப் பற்றி சொல்லிஉள்ளார். (வாழைப்பழம் எல்லா இடத்திலயும் கிடைக்கிற மாதிரி நம்ம படம் கிடைக்கணும். இட்லி வாங்க, பான் போட வெளிய வர்ற ஆளு நம்ம படத்த தவற விடக்கூடாது.)

8) ஒரு நடிகன் தன் உடல், முக அமைப்பை மாற்றுவதன் மூலம் கதாசிரியனுக்கு சுதந்திரம் கொடுக்கிறான் என்ற அவர் கருத்தாலேயெ இப்போது விக்ரம், சூர்யா வால் நல்ல கதை அம்ச படங்களை கொடுக்க முடிகிறது

9) சத்யராஜ் - கடமை கண்னியம் கட்டுப்பாடு
நாசர் - மகளிர் மட்டும்
மாதவன் - நள தமயந்தி
பசுபதி - மும்பை எக்ஸ்பிரஸ்
என தன் தயாரிப்புகளின் மூலம் இவர்களின் பழைய முகத்தை மாற்றியவர் நம்மவரே

10) கிரேசி மோஹன் அவர்களின் ஒரு நாடகத்தைப் பார்த்தே அபூர்வ சகோதரர்களில் வசனகர்த்தா வாய்ப்பை வழங்கியது

சாதித்த தசாவதாரம் - ‍ நக்கீரன்

கமல், கே.எஸ்.ரவிகுமார், ஆஸ்கார் ரவிச்சந்திரன் இந்த மூன்று தமிழர்களின் கூட்டணியில் மிகப்பிரமாண்டமாக உருவெடுத்திருக்கிறது தசாவதாரம். இந்தப்படத்தில் கமல் மாறுபட்ட பத்து கெட்டப்புகளில் தோன்றி திரை ரசிகர்களை உள்ளபடியே திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார். கிராபிக்ஸ்சின் தோழமையோடு இந்தப்படத்தில் அவர் கையாண்டிருக்கும் டெக்னிக்கல் உத்திகளும் காட்சியமைப்புகளும் கோலிவுட் தரப்பையே உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தனது படங்களில் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கும் கமல் சில படங்களில் கமர்ஷியல் ரீதியான வெற்றிக்கோட்டைத் தொடமுடியாமல் போனதும் உண்டு.

தமிழர்களின் இந்தக் கடுமையான தசாவதார உழைப்பிற்க்கு உரிய வெற்றி கிடைத்துக்கொண்டிருக்கிறதா? வசூல் எப்படி? என்பதை அறிய களம் இறங்கினோம்.

முதலில் தசாவதாரத்தை உருவாக்க கோடிக்கணக்கில் கரன்ஸிகளை இறைத்திருகும் அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை சந்தித்தபோது உற்சாகமாகப் பேச ஆரம்பித்த அவர். " தமிழ் நாட்டில் மட்டும் தினசரி 1250 காட்சிகள் ஓடிக்கிட்டு இருக்கு, அதோட இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஸ்ரீ லங்கா, பிரான்ஸ், அமெரிக்கா, நார்வே இப்படிப் பல வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலுமா 1755 காட்சிகளும் ஓடிக்கிட்டு இருக்கு ஆக தினசரி 3000 காட்சிகள் உலகம் முழுக்க ஹவுஸ்புல்லாக ஓடுவதால் நாங்கள் வசூல் கடலில் திக்குமுக்காடிக்கிட்டு இருக்கோம், எங்களைப் பொறுத்தவரை கமல் சாதனை நாயகனாக மட்டுமல்ல வசூல் நாயகனாகவும் இருக்கிறார்" எனப் புல்லரித்தபடி பேசினார்.

இவர் சொல்வது சரிதானா? சென்னை சத்யம் தியேட்டர் மேலாளரான கண்ணையாவிடமே கேட்டோம் "ஆமாங்க எங்க தியேட்டரின் 40 வருட வரலாற்றில் 14 நாள்ல 90 லட்ச ரூபாய்க்கு மேல வசூல் செய்த வசூலான ஒரே படம் தசாவதாரம் மட்டும்தாங்க" என்கிறார் அவரும் உற்சாகமாக.

மாயாஜால் திரையரங்க மேலாளர் மீனாட்சி சுந்தரமோ, "ரஜனியின் சிவாஜி படம் 118 நாள் ஓடி ஒரு கோடியே 12 லட்சத்தை வசூலித்தது ஆனா தசாவதாரமோ 17 நாள்லேயே 92 லட்ச ரூபாயத் வசூலாக குவிச்சிருக்கு. வொர்க்கிங்ஸ் டேஸ்ல கூட கூட்டம் குறையல இது உலக சாதனைதான்" என அவரும் தன் பங்கிற்க்கு சிலாகித்தார்.

தசாவதார விநியோகஸ்தர்களில் ஒருவரான பாண்டிச்சேரி கண்ணனோ, "ரொம்ப காலமாக சினிமாமேல வெறுப்பில இருந்த வயதான பெண்களும் ஆச்சாரமான பெண்களும் இந்தப் படத்துக்கு வர்தறைப் பார்க்கமுடியுது. அதேபோல் பொதுவாக கமல் படத்துக்கு ரிபீட் ஆடியன்ஸ் வரமாட்டாங்க ஆனா இதுக்கு ரிபீட் ஆடியன்ஸ் வர்றதையும் காணமுடியுது. பகுத்தறிவு பேசும் கமல் இதில் ஆன்மிகமும் பேசியிருப்பதால்தான் பெண்கள் கூட்டம் அதிகமாக வருது" என தன் கணிப்பையும் அவர் சொல்ல

"சிவாஜி" படம் நஸ்டம் என்று கோர்ட்டுக்குப்போனவராச்சே நீங்க ரஜனி மீதான அந்தக் கோபத்தில்தான் இப்ப கமலைத் தூக்குறீங்களா? என அவரை நாம் கலாய்க்க "அப்படியில்லீங்க சிவாஜி பட விசயத்தில் நாங்க நஸ்டப்பட்டதும் உண்மை, இப்ப லாபம் பார்க்கிறது உண்மை" என்றார் சீரியசாகவே.

மற்ற மாநிலங்களின் பல்ஸ் ரேட்? கேரளா எந்தா பரயுன்னு? விநியோகஸ்தர் ஹென்றியைக் கேட்டோம் அவரோ, " நான் பரயுறதைவிட திருவனந்தபுரம் பத்மநாபா தியேட்டர் முதலாளி கிரிஷ் சந்திரன் கிட்ட பேசுங்க" என்று அவரைக் கைகாட்டினார். கிரிஷ் சந்திரனோ "இவிட மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட இப்படியொரு வல்லிய ஓபனிங் கண்டதில்லை. ஈ ஸ்டேட்ல 82 தியேட்டர்ல படம் ரிலீசாகிட்டிருக்கு. மேக்கொண்டு 27 தியேட்டர்காரங்க காத்திட்டிருக்காங்க. இந்த மழைக்காலத்திலும் கூட்டம் நிறைய வருது. மொத்தத்தில் சாரே படம் பிரமாதமாக்கும்" என்றார் பூரித்தபடி.

ஆந்திரா ஏமி செப்புதுன்னாதி? விநியோகஸ்தர் சோபாவிடம் நாம் மாட்லாடியபோது "எங்க சூப்பர் ஸ்ரார் சிரஞ்சீவியோட தாகூர் படத்தின் வசூல் 25 கோடி ரூபா. இந்த பிரேக்கை தசாவதாரம் உடைச்சிடும்போலிருக்கு. இதன் மெகா ஹிட்டைப்பார்த்து இங்க பல ஹிரோக்கள் தங்கள் பட ரீலீசை தள்ளிவைச்சிட்டாங்க. ஒரு சாதரண ரசிகையாக இருந்துசொல்றேன் பல்ராம் நாயுடு கேரக்டரை எங்க ஜனங்க ரொம்ப ரசிக்கிறாங்க. அந்த கிழவி கேரக்டரையும் பெண்கள் சிலாகிக்கிறாங்க. சுனாமி காட்சிகளின் அதிர்ச்சியூட்டும் பிரமாண்டம் கூட ரசிகர்களைப் பிரமிக்கவைக்குது ஒட்டுமொத்ததில் ஆந்திராவே கமலை ஆராதிக்குது" என்கிறார் உணர்ச்சிமயமாய்.

வாட்ஸ் அப் இன் அமெரிக்கா? விநியோகஸ்தர் ஜெயவேல் முருகனோ " யு.எஸ்.ஏவில் ஒரே நேரத்தில் 60 சிட்டிகளில் ரிலீசான படம் இதாத்தான் இருக்கும் இவ்வளவு பிரமாண்டமாக ஒரு தமிழ்ப்படமா என்று அமெரிக்காரர்களே வியக்கிறாங்க. கமலின் பத்து கெட்டப்பும் அவங்களைப் பிரமிக்க வைக்கிறது. அவங்க உணர்ச்சிவசப்பட்டு எங்க கைகளை குலுக்கிப்பாராட்டுகிறாங்க. கமலின் இந்த தசாவதார சூறாவளியில் அமிதாப்பின் சர்க்கார் ராஜ் படம்கூட ஆட்டம் கண்டிருக்கு. மொத்தத்தில் தசாவதாரம் எல்லா வகையிலும் பிரமிப்பு" என்றார் பலத்த சிரிப்போடு.

நார்த் இண்டியா கியா கேத்தா ஹே? இந்தி டப்பிங்கில் 400 காப்பிகள் ரெடியாவதில் தாமதம் ஏற்பட்டதால் பாலிவுட்காரர்களுக்கு இன்னும் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தசாவதாரத்திற்க்காய் தவமிருக்கிறார்கள்.

உலகநாயகனான கமல் இந்தப்படத்தின் மூலம் இன்றைய தேதிக்கு இவரே என்று சொல்லும் அளவிற்கு கலெக்சன் நாயகனாக பதினோராவது அவதாரம் எடுத்திருக்கிறார். மொத்தத்தில் தமிழர்களின் இந்தத் திரைக்கூட்டணி உலக அளவில் மெஹா வெற்றியை தொட்டுக்கொண்டிருப்பதற்காக நாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

இரா.த.சக்திவேல்
நக்கீரன் 09.07.2008

டிஸ்கி : சாதித்ததா தசாவதாரம் என்பதுதான் நக்கீரனின் தலைப்பு. அதனை சாதித்த தசாவதாரம் என சற்று மாற்றி அமைத்துள்ளேன். காரணம் தலைப்பு எதிர்மறையாக இருப்பதுபோல் தோன்றியது. உலகநாயகன் கமல் வசூல்ராஜாவாக இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

ஓஷோவை ஆமோதிக்கிறாரா கமல்?

தசாவதாரம் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். மனிதன் மாதிரி ஒரு முறை அசை போடலாம் மாடு மாதிரி பலமுறை அசை போட்டால் நன்றாக இருக்காது. அதனால் இத்துடன் தசாவதார பதிவுகளை நிறுத்தி கொள்ளப் போகிறேன்

தசாவதாரம் படத்தில் மண்ணின் மைந்தனாக வரும் வின்செண்ட் என்னும் புரட்சி பாத்திரம் ஆதிக்க சக்தி மணற் கொள்ளையனிடம் தர்க்கம் செய்யும் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. அப்போது இருவருக்கும் வாக்குவாதத்தின் போது மணற்கொள்ளையன் ஒத்த ஆளாக உலகை காப்பாற்ற நீ என்ன உலக நாயகனா என்று கேட்க அதற்கு அந்த புரட்சியாளன் ஆம் நான் உலக நாயகன் தான் ஏன் எல்லோருமே உலக நாயகன் தான். விந்துவில் உள்ள கோடிக்கணக்கான உயிரனுக்களில் ஒன்றில் இருந்த வந்த எல்லோருமே உலக நாயகன் தான் என்று பதில் அளிப்பார், இந்த புரட்சி பாத்திரத்துக்கு பன்றி அவதரத்தின் பெயரை வைத்தது அந்த பாத்திரத்தை களங்கப்படுத்துவதாக இருந்தாலும் இந்த உலக நாயகன் வசனத்தை சொல்ல வைத்ததன் மூலம் அந்த சறுக்கல் கொஞ்சம் சமன் செய்யப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்

நமக்கும் ஆண்மீகத்துக்கும் கொஞ்சம் தூரம் தான். அப்பழுக்கில்லாத ஆண்மீக குருக்கள் பற்றியே எனக்கு எதுவும் தெரியாது அப்படி இருக்க விவகாரமான ஓஷோவை எல்லாம் அவ்வளவாக தெரியாது. நெருங்கிய நண்பரான பிரபல வலைப்பதிவர் தன் கணினியில் ஓஷோவின் பேச்சுகளை வைத்து இருக்கிறார். இது மாதிரி ஒரு சில சந்தர்பங்களில் ஓஷோவை பற்றி அறிந்து கொள்ள நேர்ந்தது. அப்போது தான் இந்த முதல் விந்து மேட்டர் பற்றி ஓஷோ சொன்னதாக நியாபகம். தசாவதாரம் மூலம் பல தரப்பட்ட ரசனைகளை கொடுத்த கலைஞானி ஓஷோவையும் விட்டு வைக்கவில்லை. ஆண்மீக குருவாக கருதப்பட்ட அவரின் கருத்துகளை சொன்னதன் மூலம் நான் ஏற்கனவே சொன்ன இரண்டும் கெட்டான் விஷயமும் இங்கே பொருந்தி வருகிறது

ரஜினி ரசிகர்களை கவரும் கமலின் கனவு பலிக்குமா

ஆஹா இவன் திருந்தவே மாட்டானா என்று நினைக்கிறீர்களா. ஸ்டார் போஸ்டில் தான் கும்மி அடிக்க கூடாது நமக்கு வேறு வழியா இல்லை. அதான் அங்கே பம்மி இங்கே கும்மி. தசாவதாரம் படத்தில் ஜப்பானிய பாத்திரத்தை கமல் வேண்டுமென்றே திணித்து இருக்கிறார். அந்த பாத்திரமே தேவை இல்லாதது. ரஜினிக்கு ஜப்பானில் உள்ள ரசிகர்கள் தானாக சேர்ந்த கூட்டம் அந்த கூட்டத்தை கலைக்க கமல் இப்படி எல்லாம் மெனக்கெட்டு ஜப்பான் மொழி பேசி குங்ஃபூ பைட்டு எல்லாம் போட வேண்டி இருக்கிறது. இது யார் சொல்லியது என்று நான் சொல்ல தேவை இல்லை

தசாவதாரம் படத்தை ஒரு ப்ளாட் மாதிரி கையாண்டு இருக்கிறார் கமல். அந்த பிளாட்டில் உள்ள முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் போது ஒவ்வொரு பாத்திரமாக உள்ளே நுழைகிறார்கள். ஆனால் ஜப்பானிய பாத்திரம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஜப்பானிய பாத்திரம் கிளைமாக்ஸ் காட்சியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் சுனாமி வரும் போது மூன்று கமல்கள் மோதிக் கொள்வார்கள். சுனாமி தங்களை நோக்கி வரும் போது பிளட்சர் கமலும் விஞ்ஞானி கமலும் எதுவுமே புரியாமல் நிற்க ஜப்பானிய கமலோ சுனாமி இஸ் பேக் என்று சொல்லுவார். இந்த இடத்தில் தான் கமலுக்குள் இருக்கும் பெர்ஃப்க்ஷனிஸ்ட் வெளிப்படுகிறார்

சுனாமி பற்றிய அந்த வசனத்தை கமல் மற்ற ஒரு கமலை வைத்து சொல்லி இருக்கலாம் அல்லது ஜப்பானிய கமலே ஓ மை காட் திஸ் இஸ் சுனாமி என்று சொல்ல வைத்து இருக்கலாம். ஆனால் அவரோ சுனாமி இஸ் பேக் என்று சொல்கிறார் ஏனென்றால் ஜப்பானியகளுக்கு தான் சுனாமி நமக்கு எல்லாம் முன்பே அறிமுகம். பல ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டுள்ளதாம். சுனாமி என்ற பெயரே கூட ஜப்பானிய பெயர் தானாம். இப்போது சொல்லுங்கள் அந்த பாத்திரம் திணிக்கப்பட்டதா என்று

தசாவதாரம் பதிவுகள் அவ்வளவு தானா என்று கேட்கிறீர்களா. நாளை வேறு ஒரு மேட்டருடன் சந்திப்போம்

கலைஞானியும் இசைஞானியும்

கலைஞானி கமலும் இசைஞானி இளையராஜாவும் தமிழ்சினிமாவின் இரண்டு மிகப்பெரிய சாதனையாளர்கள். இவர்களின் கொள்கைகள் வேறுபட்டாலும் இசை என்றபாலம் இவர்களை இன்றும் இணைத்தே வைத்திருக்கின்றது. கமல் 58ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த காலத்தில் பெரும்பாலும் கமலின் படங்களுக்கு இசைத் தாலாட்டுச் செய்தவர் இளையராஜா. அத்துட‌ன் க‌ம‌லைப் பெரும்பாலும் தான் இசை அமைத்த‌ ப‌ட‌ங்க‌ளில் பாட‌வும் செய்திருப்பார் இசைஞானி.

பதினாறு வயதினிலே பட்டிதொட்டி எங்கும் கமல்,ரஜனி, பாரதிராஜா, ஸ்ரீதேவி, இளையராஜா என பலரின் முகவரிகளை வெளிஉலகிற்க்கு எடுத்துச் சென்றபடம். அதன்பின்னர் பாரதிராஜா இளையராஜா கமல் கூட்டணியில் சிவப்புரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி, டிக்.டிக்.டிக், உல்லாச பறவைகள் என ஹிட் கொடுத்தார்கள் இருவரும். குறிப்பாக உல்லாசப் பறவைகளில் " நினைவே ஒரு பறவை" பாடலும் காட்சி அமைப்பும் அருமையாக இருக்கும். டிக்டிக்டிக் படத்தின் பின்னணி இசையில் ஞானி தன் கைவண்ணத்தைக் காட்டியிருப்பார். மீண்டும் பாரதிராஜா இளையராஜா கமல் கூட்டணியில் ஒரு படம் வெளிவராதா என ஏங்கிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

அடுத்தது கே.பாலசந்தர் இளையராஜா கமல் கூட்டணியில் புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி இர‌ண்டும் இசையை மைய‌மாக‌ வைத்து எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ள் புன்ன‌கை ம‌ன்ன‌னில் மேல்நாட்டு இசையும், உன்னால் முடியும் த‌ம்பியில் க‌ர்னாட‌க‌ இசையும் கலந்து ஞானி க‌ல‌க்கியிருப்பார். இதில் புன்ன‌கைம‌ன்ன‌னில் முத‌ல் முத‌லில் க‌ம்யூட்டர்மூலம் இசையை அறிமுக‌ப்ப‌டித்தியிருப்பார். புன்ன‌கை ம‌ன்ன‌ன் பின்ன‌ணி இசை ம‌ற்றும் அத‌ன் தீம் மியூசிக் இசைஞானியின் பேரைச் சொல்லும் இசைக்குறிப்புக‌ள்(கானாப் பிர‌பா ஒருமுறை இத‌ன் இசை வ‌டிவ‌ங்க‌ளை த‌ன் வ‌லையில் ப‌திவு செய்திருன்தார்).

அடுத்து பாலுமகேந்திரா கமல் கூட்டணியில் மூன்றாம் பிறை கமலுக்கு இரண்டாம் தடவை தேசியவிருது வாங்கித்தந்த படம்(முதல் படம் களத்தூர் கண்ணம்மா சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கு தேசியவிருது). இதில் இடம் பெற்ற "கண்ணே கலைமானே" பாடல் கவிஅரசர் கண்ணதாசனின் இறுதிப்பாடலாகும், கேஜே ஜேசுதாசின் குரலும் கமல ஸ்ரீதேவியின் நடிப்பும் இசைஞானியின் தாலாட்டு இசையும் இந்தப்பாடலை எவர்கிரீன் பாடலாக இன்றைக்கும் நினைக்கவைக்கும். பின்னர் பாலுமகேந்திராவுடன் மீண்டும் கோகிலா, சதிலீலாவதி போன்ற படங்களில் கமல் இளையராஜா இசைக்கூட்டணி தொடர்ந்தது. சதிலீலாவதியில் மாறுகோ மாறுகோ பாடலை கலைஞானி கமலே பாடினார். இந்தப்பாடலில் பல சினிமாப்படங்களின் பெயர்களை இணைத்து கவிஞர் வாலி அழகாக எழுதியிருப்பார்.

எஸ்பிமுத்துராமன் கமல் இளையராஜா கூட்டணியில் பல படங்கள் வெளிவந்தன. அனைத்துப்படங்களிலும் இசையும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

நாயகன் கமலை உலகநாயகனாக உயர்த்திய படம். இந்தப்படத்தின் "தென்பாண்டிச்சீமையிலே" என்றபாடலை கமல், இசைஞானி இருவரும் பாடியிருப்பார்கள். இதன் பின்னணி இசையிலும் ராஜா தன் கைவரிசையைக் காட்டியிருப்பார். நாயகனின் வெற்றிக்கு இளையராஜாவும் ஒரு காரணம் என்பதை மறக்கமுடியாது.

ராஜ்கமல் பிலிம்ஸ் அல்லது கமலின் சொந்தப்படங்கள் அனைத்துக்கும் என்றே கூறலாம் இசை இளையராஜாதான். அதில் மெஹா ஹிட் படங்களான அபூர்வ சகோதரர்கள் (அண்மையில் கூட கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது), ராஜபார்வை, மைக்கல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி, வெற்றி விழா, எனப் பட்டியல் நீளும் இந்தப்படங்களில் ராஜபார்வை "அந்தி மழை பொழிகின்றது" என்ற பாடல் இளையராஜாவின் டாப் 10 பாடல்களில் ஒன்றாகும். மைமகாராஜனின் "சுந்தரி நீயும்" பாடலில் கமல் கொடுத்த ஏற்ற இறக்கங்கள் ஒரு தேர்ந்த பாடகரைப்போல் இருக்கும்.

இவர்கள் இருவரும் இணைந்த படங்களில் இசை வெற்றிக்கு காரணம் கமல் பிறவி இசைக்கலைஞனாகவும் இருப்பதுதான். கமலால் ஒரு கர்னாடக சங்கீத மேடைக்கச்சேரி பண்ணமுடியும் என அண்மையில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா சொல்லியிருந்தார். கமலால் படங்களுக்கு இசை அமைக்க முடியும் என இளையராஜாவே தன் இசை நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருந்தார். இதுவரை கமல் தொடாத துறை இசை அமைப்பும் ஸ்டண்டுமாகத்தான் இருக்கவேண்டும்.

டிஸ்கி : எனக்குத் தெரிந்த சிலவற்றைத்தான் நான் எழுதியிருக்கின்றேன் உங்கள் பின்னூட்டங்கள் மூலம் ஏனையவற்றைத் தெரியப்படுத்தவும். அத்துடன் இசைவல்லுனர்கள் இவர்களின் வெற்றிக்கு இசை எப்படி கை கொடுத்தது என இசை மொழியில் (ராகம், தாளம் ஞானத்தை வைத்து) எழுதுங்கள்.

தலைப்பில் கலைஞானியை முன்னர் குறிப்பிடக்காரணம் கமல் திரையுலகில் இளையராஜாவைவிட பல வருடங்களுக்கு முன்னர் இணைந்தவர். அத்துடன் இந்த இரண்டு பட்டங்களும் கலைஞரால் கொடுக்கப்பட்டவை.

கமலுடன் ஒரு மாலை!


எனக்கும் கமல்ஹாசனுக்கும் சுமார் முப்பதாண்டு நட்பு உண்டு. அடிக்கடி சந்திக்கிற
வாய்ப்பு இல்லையென்றாலும்,ஒவ்வொரு சந்திப்பின்போதும்.அவர் தன்னை ஏதாவது ஒரு விதத்தில புதுப்பித்து கொண்டிருப்பது தெரியும்.

இத்தனை படங்கள் நடித்து ஒரு இமாலய இடத்திற்கு போயிருந்தாலும், ஒவ்வொரு படத்தையும் தன் முதல் படமான இன்றும் நினைக்கிற அவருடைய தொழில் வெறி பிரமிக்க வைக்கும்.

வைரமுத்து வீட்டு திருமணத்தின்போது இந்த வாரம் சந்திப்போம் என்று சொல்லியிருந்தார். புதன்கிழமை (25.6.2008) மாலையின், நானும், நூற்றாண்டை கடந்து விட்ட அல்லயன்ஸ் தமிழ் பதிப்பகத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனும் போயிருந்தோம். வழக்கம் போல ஸ்ரீனிவாசன் கமலுக்கு கொடுக்க ஏராளமான புத்தகங்கள் கொண்டு வந்திருந்தார். இம்முறை ஏராளமான ஆன்மிக புத்தகங்கள்.

தன்னுடைய அலுவலக அறையில் லாப் டாப் போன்ற ந்வீன கருவிகள் சூழ அமர்ந்திருந்தார். அவரை சுற்றிலும் ஏராளமான புத்தகங்கள்.புன்முறுவலோடு வரவேற்றார்.`தசாவதாரம்' பற்றிய பேச்சுடன் ஆரம்பித்தது எங்களது அன்றைய மாலை சந்திப்பு. `படத்தைப் பத்தி பல விதமான விவாதங்கள் நடந்துக்கிட்டிருக்கு. ஆனால் இப்படி ஒரு முயற்சி வெற்றி அடைஞ்சுதில அடுத்து இன்னும் ஏதாவது புதுசு பண்ணலாம்ங்கிற நம்பிக்கை இருக்கு ' என்றார்.

`வியாபார ரீதியில் படம் எப்படி ?'

`இதைத்தான் எழத்தாளர் ஜெயகாந்தனும் என்னிடம் கேட்டார்.`ஏம்பா, எனக்கு படம் பிடிச்சிருக்கு. அதனாலதான் பயமா இருக்கு. எனக்கு பிடிக்கிற படங்கள் வெற்றி பெர்றுவதில்லை. இந்த சினிமா எப்படி?' என்றார்.

`அது சித்தாள் வரைக்கும் படத்துக்கு வராங்க.( ஜெயகாந்தனின் மிகப்பிரபலமான நாவல் ` சினிமாவுக்கு போன சித்தாளு') என்று சொன்னேன். இந்த படம் கீழ இறங்காதுன்னு சொன்னாங்க. எனக்கு வர்ற தகவல் எல்லாம் எம்ஜிஆர் படம் பாக்க வர்ற மாதிரி வராங்கன்னு தகவல்'.

`முதல்ல இப்படி ஒரு படம் பண்ணனும்னு எங்க ஆரம்பிச்சது ?' இது நான்.

`வேட்டையாடு விளையாடு' முடிஞ்சதும், அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்ச போது கெளதம் மேனன் ` பச்சைக்கிளி முத்துச்சரம்' கதையத்தான் எனக்கு சொன்னார்.எனக்கு
ஒத்துவராதுன்னு தோணிச்சு.உடனே ஏதாவது வித்யாசமா பண்ணலாமேன்னு, ` நவராத்திரி'யில சிவாஜி சார் பண்ணின மாதிரி, ஒன்பது வேடங்கள்னு பேச்சு ஆரம்பிச்சு, அப்புறம்தான் ஒரு படி மேலே போய பத்து வேடங்கள்ன்னு யோசிச்சப்பதான், ` இந்த `தசாவதாரம்' விஷயம் வந்தது'

`இந்த ரங்கராஜ நம்பி விஷயம்?'

`இந்த மோதல்கள் வரலாற்றில இருக்கு. அந்த காலத்தை களப்பிரர்கள் காலம்னு சொல்வாங்க. சரித்திரலேயே நடந்த மிகப்பெரிய இன ஒழிப்புன்னா அது சமண மதத்துக்கு நடந்த மாதிரி எப்போதுமே நடந்ததில்ல. அதற்கு பிறகுதான் பல விவகாரங்கள் முளைத்தது. அதற்கு முன்பு பிறாமணர்கள் புலால் சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருந்தாங்க. இந்த சுத்த சைவமெல்லாம், சமணர்களிடமிருந்ந்துதான் பிறாமணர்களுக்கு வந்தது.வரலாற்றை நல்ல படிச்சு பார்த்தா, ஆர்ய சத்ரியர்கள், ஆர்ய் சூத்திரர்கள் என்றெல்லாம் கூட பிரிவுகள் கூட இருந்தது. அப்போது வைணவர்கள், குறிப்பாக ராமாஜரின் சீடர்கள் வீரமாக இருந்திருக்காங்க. தங்களுடைய கொள்கையில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு மனித குலத்தில் சில மனிதர்கள் அவதாரம் எடுத்தாங்கன்னு சொல்ற மாதிரியான கதைதான். நாம் இன்றைக்கு பண்ற தவறுகள்தான் நாளைக்கு நம்மை வழி நடத்தும்.

அந்த ஆரம்ப காட்சியில் நீங்க `விஷ்ணு ஸகஸ்ரநாமம்' சொல்லும்போது, அது ஏதோ மனப்பாடம் பண்ணி சொன்ன மாதிரி இல்லையே ? தினமும் கோயிலுக்கு போகிற ஒரு தீவிர வைணவர் சொல்ற மாதிரி தானே இருந்தது.?

`ஆமாம், எனக்கு விஷணு ஸ்கஸ்ரநாமம் முழசா தெரியுமே' கொஞ்சம் சொல்லிக்காட்டுகிறார்.`சுப்ரபாதம் முழசா தெரியும். திருப்பல்லாண்டு கூட தெரியும். எனக்கு அபிராமி அந்தாதி தெரிஞ்சதினாலதான் என்னால் `குணா' படத்தில் அதை சொல்ல முடிஞ்சுது. இதுக்கு காரணம் டி.கே. சண்முகம் அண்ணாச்சி.குழந்தையாக இருந்தபோது அவருடைய நாடக குழுவில இருந்தேன். ஊர் ஊரா போவோம். அப்ப கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போவார். எந்த கோவிலுக்கு போறோமோ அந்த பாடல் சொல்லணும். அப்படித்தான் தேவாரம், திருவாசகம் படிச்சேன். பிரபந்தத்தில எனக்கு பல பாடல்கள் தெரியும்'அபிராமி அந்தாதியிலும், திவ்யபிரபந்தத்திலும் சில பாடல்கள் சொல்லிக்காட்டினார்.
உண்மையிலேயே ஆதி சங்கரரும், ராமானுஜரும்தான் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள்.அவங்க தப்பா எடுத்துக்கலைன்னு ஒரு விஷயம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கி.வீரமணியும், தொல்திருமாவளவனும் தங்களை ராமானுஜதாஸன்னு சொல்லிக்கிட்டா கூட தப்பில்ல. ஏன் தெரியுமா ? பண்டை காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுக்காரங்கதான் மூட்டைத் தூக்கிக்கிட்டு போவாங்க. வழியில அவங்களுக்கு முதுகு வலிச்சா, யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. மூட்டையை கீழே தரையில் வெச்சா, மறுபடியும் சுமக்கிறது கஷ்டம். இப்ப கூட கிராமப்பகுதிகள்ள, நீங்க மூணு கல் நட்ட சுமைதாங்கி கல் இருக்கும். இதை நிறுவனம்னு முதல்ல சொன்னவர் யார் தெரியுமா? ராமானுஜர்தான்.இது ராமானுஜர் படம் எடுத்த ஜீ.வி, ஐயர் சொல்லித்தான் எனக்கே தெரியும். ஒரு நாள் ஒரு கிராமத்து பக்கம் இருந்தோம். அப்ப அங்கிருந்த சுமைதாங்கி கல்லை பார்த்து அதை தொட்டு கும்பிட்டார். என்னன்னு கேட்டேன். இது ராமானுஜருடைய ஏற்பாடு என்றார். இதை யாராவது அந்த காலத்தில யோசிச்சிருப்பாங்களா.இப்படி ராமானுஜரைப் பற்றி கேள்விப்பட்ட பல விஷயங்களில் பாதிப்புதான் அந்த பாத்திரம்.

`இந்த படத்தின் மூலமாக கடவுள் அவதாரம் இருக்குன்னு ஒத்துக்கிறீங்களா ?

`அது உங்க perception. அதுதான் படத்திலேயே சொல்லியிருக்கேனே. கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்னு. எனக்கு பல ஆன்மிகப் பெரியவர்கள் நல்ல தமிழ் கத்துக் கொடுத்திருக்காங்க. ஒரு விஷயம் சொல்லணும். நான் சினிமாவில வளர்ந்துக்கிட்டுருக்கிற நேரம். வாரியார் சுவாமிகள் எங்கப்பாவுக்கு நல்ல நண்பர். பல சமயங்கள்ள எங்கப்பாவோடு அவருடைய காலட்சேபங்களுக்கு போயிருக்கேன். ஒரு நாள் தீடிர்ன்னு வாரியார் சுவாமிகள் என் வீட்டுக்கு வந்தார். `உனக்கு நம்பிக்கை இல்லேன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முருகனுக்கு கோவில் கட்டறேன். நீ எனக்காக பணம் கொடுக்கணும்'னு சொன்னார். `நீங்க கேட்டா கொடுக்க ஆசைதான். ஆனால் பெரிய பணம் இப்ப இல்லையே' ன்னு சொன்னேன். `நீ எவ்வளவு வேணும்னாலும் கொடு' என்றார். அப்ப எனக்கு சம்பளமே 25 ஆயிரம்தான். பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன்.அப்ப எங்கூட இருந்த பகுத்தறிவு நண்பர்கள் கூட எங்கிட்ட ` நீ யாருன்னு சொல்லு'ன்னு சண்டை போட்டாங்க.`நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சுக்குங்க' அவர் கிட்ட நான் தமிழ் கத்துக்கிட்டேன்'ன்னு சொன்னேன். இப்படி எனக்கு தமிழ கத்துக்குடுத்தவங்க நிறைய பேர் இருக்காங்க. அதனாலதான் இந்த படத்தில் என்னால அசினுக்கு மங்களா சாசனம் சொல்லிக்கொடுக்க முடிஞ்சது. அவங்க மலையாளம் அவங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது.'

இப்படி பல விஷயங்களை சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் தெரியாத பல தொழில் நுட்ப கலைஞர்களுக்காக அவர் ஆங்கிலத்தில் எழதி வைத்திருந்த `தசாவதாரம்' திரைக்கதையை காட்டினார். அதை பார்க்கும்போது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருக்கு அதிக வேலையே இருந்திருக்காது என்பது புரிந்தது. ஒவ்வோரு அசைவையும் அவரே குறித்து வைத்திருந்தார். அடுத்த படமான `மர்மயோகி' முழ திரைக்கதையும் ஆங்கிலத்தில் தயாராக இருந்தார்.

என்னுடைய வாழ்க்கை லட்சியமே `THE DECLINE AND FALL OF ROMAN EMPIRE' எட்வர்ட் கிப்பன் எழதிய ஏழ வால்யூம்கள் என்னிடம் இருக்கிறது. அதை தமிழாக்கம் செய்ய வேண்டும். அதே போல் `THE RISE AND FALL OF THE THIRD REICH' BY WILLIAM SHEIRER. இதையும் தமிழில் கொண்டு வரவேண்டும். என்னுடைய இந்த ஆசை கமலுக்கும் தெரியும். இப்போது அதற்கு துணையாக பிஷருடைய புத்தகத்தையும் படிக்க சொன்னார். தான் தவில் கற்றுக்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

தலைநிறைய பல விஷயங்களை அவரிடமிருந்து வாங்கி நிரப்பிக்கொண்டு திரும்பினோம்.

(நன்றி : எழுத்தாளர் சுதாங்கன்)

ஆஸ்கர் விருதுக்கு போன கமல் படங்கள்!


ஆஸ்கர் விருது என்பது ஹாலிவுட்காரர்களுக்கு மட்டுமே என்பது தெளிவாக எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஆஸ்கர் விருதை அமெரிக்கர்கள் தவிர்த்து மற்றவர்கள் பெற முடியாது. ஹாலிவுட் நடிகரான மார்லன் பிராண்டோவை விட சிறந்த நடிகர் என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட நடிகர் திலகம் சிவாஜிகணேசன் போன்ற திறமையான நடிகர்கள் இந்தியாவிலேயே இருந்திருக்கிறார்கள். ஆஸ்கர் விருது பெற்றவர்கள் தான் சிறந்த நடிகர்கள் என்ற அளவுகோல் பொய் என்பதற்காக இதை சொல்கிறோம்.

ஹாலிவுட் தவிர்த்து மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு ”சிறந்த அயல்நாட்டு மொழிப்படம்” என்றொரு விருதினை ஆஸ்கர் விருது கமிட்டிக்குழு வழங்கி வருகிறது. இந்தியாவிலிருந்து அவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அதிகப் படங்களில் நடித்தவர் வேறு யார்? உலகநாயகன் கமல்ஹாசன் தான். 1985ஆம் ஆண்டு தான் முதன்முறையாக ஒரு தென்னிந்தியத் திரைப்படம் இந்த விருதுக்கு இந்தியா சார்பில் சென்றது. அது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து, கே.விஸ்வநாதன் இயக்கிய "சுவாதி முத்யம்" என்ற தெலுங்கு திரைப்படம். இத்திரைப்படம் ஆஸ்கருக்கு சென்றது மட்டுமல்லாமல் அந்த ஆண்டின் ஆசியாவின் சிறந்த திரைப்படம், ஆசியாவின் சிறந்த நடிகர் விருதுகளையும் வென்றது.

அப்படத்தைத் தொடர்ந்து உலகநாயகன் நடித்த நாயகன், தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஹேராம் ஆகியப் படங்களும் இந்தியா சார்பில் அவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள்.

வசனகர்த்தா கமல்

நடிகர் கமலுக்கு இணையாக என்னை கவர்ந்தவர் வசனகர்த்தா கமல். தேவர்மகன்,குருதிப்புனல், ஹேராம், விருமாண்டி மற்றும் தசாவதாரத்தில் அவர் எழுதியிருக்கும் வசனங்கள் எல்லாமே அருமை. அதிலும் தேவர்மகனில் எல்லாமே பஞ்ச் டயலாக்தான்

‘உனக்குள்ள நடமாடிக்கிட்டிருக்க மிருகம் எனக்குள்ள தூங்கிக்கிட்டிருக்கு எழுப்பிடாத’

நம்மள சுத்தி உள்ளவங்கள காப்பாத்தனும்னா நாம மொதோ தெம்பாயிருக்கணும்

அவன் மெதுவாத்தான் வருவான்

தேவனா இருக்கிறது முக்கியமா? மனுசனா இருக்கிறது முக்கியமா?

போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா

குருதிப்புனல்

நாம் இதை பிள்ளைங்களுக்கு கத்துக்கொடுக்கலைன்னா சாட்டிலைட் டிவி இதை தப்புத்தப்பா கத்துக்கொடுத்துரும் (1995- 96 ல் எழுதப்பட்டது)

எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கு

வீரம்னா என்னான்னு தெரியுமா? பயமில்லாதது மாதிரி நடிக்கிறது


ஹேராம்

ஒநாயா இருந்து பார்த்தாத்தான் அதனொட நியாயம் தெரியும்


விருமாண்டி

ஒருத்தன் சந்தோஷமா இருக்கும் போது அதை உணர்றதில்ல.
(இது எனக்கு மிக மிக பிடித்த வசனம்)

நீங்கள்ளாம் மூணுசாமிய கும்பிடறவங்க. நான் ஐஞ்சு சாமிய கும்பிடறவன்

ஆசையால போர் போட்டு தண்ணிய உறிஞ்சிக்கிட்டே இருந்தா எப்படி?. அப்புறம் 100 200 அடின்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்
(இப்படம் முக்கிமாக சுற்றுச்சூழல் பிரச்சினையையே பேசியது)

மன்னிக்கிறவன் மனுஷன் மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்


தசாவதாரம்

பூமி ஒண்ணுதான் இதயும் அழிச்சுட்டீங்கன்னா அப்புறம் சந்திரனுக்கா போவீங்க

கடவுள் இல்லைன்னா சொன்னேன் இருந்திருந்தா நல்லாயிருக்கும்

உங்களுக்கு புரியுற பாஷையில இவர் சொல்வார், பணம்


மர்மயோகியிலும் இது போன்ற வசனங்களுக்காக காத்திருக்கிறோம்

சூப்பர் ஸ்டாரும், உலகநாயகனும்!


உலகநாயகன் கமல் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திரையுலகில் நுழைகிறார். கமலின் சில படங்களில் ரஜினி வில்லனாக நடித்து, தனது ஸ்டைலால் மக்களை கவர்ந்தார். குறிப்பாக பதினாறு வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த ரஜினியின் டயலாக் டெலிவரி அனைவரையும் கவர்ந்தது.

வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி பைரவி படம் மூலமாக தமிழில் ஹீரோவாகவும் ஆனார். படத்தின் போஸ்டர்களில் முதன்முதலாக ‘சூப்பர் ஸ்டார்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டது. அந்நேரத்தில் எஸ்.பி.முத்துராமனின் ஆடுபுலி ஆட்டம் படத்தில் கமல் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். வில்லனாக ரஜினியை நடிக்கவைக்க எஸ்.பி.எம். நினைத்தார். ஹீரோவாகிவிட்ட ரஜினியிடம் எப்படி கேட்பது என்ற தயக்கமும் அவருக்கு இருந்தது. விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி எஸ்.பி.எம்.மை தொடர்புகொண்டு “நீங்க இயக்குற படம், என் நண்பன் கதாநாயகனா நடிக்கிற படம், நானில்லாமலா? படத்தை தொடங்குங்க சார்.. நடிச்சிக் கொடுக்கறேன்” என்று பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார். இதுதான் ரஜினி!

அதன்பின்னர் ரஜினியும், கமலும் இணைந்து சில படங்களில் நடித்தார்கள். எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் முடிந்த நேரம் அது. எம்.ஜி.ஆர் அரசியலுக்கு போய்விட்டார், சிவாஜி தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். இரு ஹீரோக்களின் வெற்றிடத்தை கமலும், ரஜினியும் சரியாக இட்டு நிரப்பினார்கள். இனிமேலும் தாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். அதுபோல சேர்ந்து நடிப்பது தனித்தனியாக இருவரின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல என்று முடிவு செய்தார்கள். எதிர்காலத்தில் தங்கள் இருவரில் யாராவது ஒருவர் தயாரித்தே மற்றவர் நடிக்க வேண்டும் என்றும் பேசி வைத்துக் கொண்டார்கள். இன்றுவரை அந்த வாய்ப்பு அமையவில்லை.

இருவரும் தனித்தனியாக நடிப்பது என்று முடிவெடுத்த பின்னும் ரஜினி கதாநாயகனாக நடித்த ஒரு படத்தில் ஒரு சின்ன காமெடி வேடத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொண்டார். அது இருவரின் குருவான பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படம் ‘தில்லு முல்லு'. ரஜினி முதன்முறையாக நகைச்சுவை நாயகனாக நடித்த படம் அது.

பொதுவாக ரஜினி படம் ஓடும் நேரத்தில் கமல் படம் வெளியானால் அது தோல்வி அடையும் என்று ஒரு மூடநம்பிக்கை ரசிகர்களிடம் உண்டு. அது முற்றிலும் உண்மையல்ல. ராஜாதிராஜா வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது வெளியான அபூர்வசகோதரர்கள் வரலாற்று வெற்றி கண்டது. பாண்டியனோடு ஒரு தீபாவளிக்கு வெளியான தேவர்மகன் வெள்ளிவிழா கண்டது. பாபா படம் வெளியாவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாக வெளியான பஞ்சதந்திரம் ஆர்ப்பாட்டமில்லாமல் ஓடி வெற்றிவிழா கண்டது.

கமல் படங்கள் தயாரிப்பில் இருக்கும்போதே படம் எப்படி வந்து கொண்டிருக்கிறது என்று அப்படத்தின் இயக்குனர்களிடம் ரஜினி அடிக்கடி விசாரிப்பார். படம் தயாராக தயாராக அவ்வப்போது ‘ரஷ்' போட்டு பார்த்து மகிழ்வார். ரஜினியின் இந்த வழக்கம் தசாவதாரம் வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ‘கல்லை மட்டும்' பாடல் தயாரானதுமே கே.எஸ்.ரவிக்குமார் முதலில் சொல்லி அனுப்பியது ரஜினிக்கு தான். எடிட்டிங் ரூமில் அப்பாடலை பார்த்த ரஜினி எழுந்து நின்று வெகுநேரம் கை தட்டினார் என்று கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்.

கலைஞர் - எம்.ஜி.ஆர் நட்பு தமிழ்ச்சூழலில் மிக அதிகமாக சிலாகிக்கப்படும் நாற்பதாண்டு காலநட்பு. அந்நட்புக்கு பிறகு அதிகம் பேசப்படும் மிக நீண்டகால நட்பு ரஜினி - கமல் இருவருக்குமிடையே இருப்பது தான்.

ம்ம்... நாம் ரஜினியிடம் காணும் பெருந்தன்மை பல நேரங்களில் அவரது ரசிகர்களிடம் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை!

உலகநாயகன் குறித்த சில சிறப்புத் தகவல்கள்!

சொந்த ஊர் - மானா மதுரை தாலுகா, பரமக்குடி

தந்தை பெயர் - வக்கீல் டி. ஸ்ரீனிவாசன்

பிறந்த தேதி - நவம்பர் 7ந் தேதி 1954

அண்ணன்கள் - சாருஹாசன், சந்துருஹாசன்

சகோதரி- நளினி

தனது 4 வயதில் "களத்தூர் கண்ணம்மா" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதியில் நடித்தார்.

கமலஹாசன் நடித்த முதல் நாடகம் - அப்பாவின் ஆசை

நடன அரங்கேற்றம் - 1968 ஆர்.ஆர். சபா

நடன ஆசிரியர் - என்.எஸ்.நடராஜன்

ஆரம்பம் முதலே கமலஹாசன் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

16 வயதினிலே - கிராமத்து சப்பானி வாபன்

ராஜ பார்வை - கண் தெரியாத குருடன் வேடம்

சலங்கை ஒலி - சிறந்த நடன கலைஞன்

சுவாதி முதியா(தெலுங்கு)-வெகுளி வேடம்

இந்தியன் - வயதான சுதந்திர போராட்ட கிழவர் வேடம்

அவ்வை சண்முகி - பெண் வேடம்

தசாவதாரம் - பத்து வேடங்கள்

இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் கமலஹாசன் தனது புதிய படமான மருத நாயகத்திற்கு தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார். தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுப்படம் இது.

(நன்றி : மாலைமலர்)